வாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.
வாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.

கடவுள் நிஜமானவரா?

தேவனை விசுவாசிக்க அநேக காரணங்கள் விஞ்ஞானம் தருகின்றது. டி.என்.ஏ ஏன் முக்கியம்?

பிரிட்டிஷ் தத்துவஞானியான டாக்டர். அன்டோனி கேவ் நாத்தீகத்தின் பேச்சாளர் மற்றும் அவர் நாதீகத்தை பற்றிய அநேக விவாதங்களில் ஈடுபடுகின்றவர். ஆனால், போன 30 வருடங்களில் ஏற்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புகள் அவரை மறுக்க முடியாத ஒரு முடிவிற்குள் அழைத்து சென்றது. டிசம்பர் 2004 இல் ஒரு கண்ணொளி பேட்டியில் அவர் இப்படி சொன்னார்: “உயிரின் ஆரம்பத்தையும் இயற்கையின் எளிதற்ற தன்மைக்கான ஒரே காரணம் என்னவென்றால் அது மிக சிறந்த அறிவுத்திறம் மட்டுமே.”1 அவரின் தீர்மானத்தில் டி.என்.ஏ (ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலம் (deoxyribonucleic acid) அடுத்த கண்டுபிடுப்புகள் முக்கிய இடம் பெற்றுள்ளது. அதன் காரணங்களை பார்ப்போம்.

நமது உயிரணுக்களில் டி.என்.ஏ, ஒரு சிக்கலுள்ள கணினி நிரல் (computer program) போன்றது. வலப்புறத்தில் இருக்கும் புகைபடத்தை (photo) பாருங்கள்.

வலப்புறத்தில் இருக்கும் புகை படத்தை பாருங்கள். ஒரு கணினி நிரல் அநேக ஒன்று மற்றும் பூஜியங்களை (பைனரி கோட் (binary code) கொண்டிருக்கிறது. இந்த ஒன்று மற்றும் பூஜியங்கள் வரிசைப்படுத்தி வகைப்படுவத்தின் விதம்தான் ஒரு கணினி நிரலை ஒழுங்காக செயல்ப்புரிய வைக்கிறது.

கணனி செய்நிரலாக்கம்
(computer programming):
டி.என்.ஏ குறியீடு
(DNA Code):

அப்படியே, டி.என்.ஏ நான்கு ரசாயனங்களால் உண்டக்கப்பட்டவை. இந்த ரசாயனங்கள் ஆங்கில எழுத்துகளாகிய A,T,G,C என்பவைகளால் சுருக்கமாக அழைக்கப்படுகின்றன. இந்த ஒன்று மற்றும் பூஜியங்களை போல, இந்த எழுத்துகளும் மனிதனின் உயிரனுக்களில் இப்படி சீராக அடுக்கப்பட்டுள்ளன: CGTGTGACTCGCTCCTGAT…. அவைகள் எந்த வரிசையில் அடுக்கப்பட்டுள்ளதோ அப்படியே அந்த உயிறணுக்களின் செயல்கள் இருக்கும்.

என்ன ஆச்சரியம் என்றால், நமது சரீரத்தில் உள்ள ஒரு உயிரணுவில் உள்ள அந்த சிறு இடத்தில், இந்த குறியீடு மூன்று பில்லியன் நீலமானது!!2

ஒரு உயிரணுவில் உள்ள ஒரு டி.என்.ஏ தகவலை புரிந்துக்கொள்ள, இரவும் பகலும் வாசித்தாலும், “ஒரு குறியீடை ஒரு வினாடிக்கு மூன்று எழுத்து என்று வாசித்தாலும், அதை படித்து முடிக்க 31 வருடங்கள் எடுக்கும்.”3 இன்னும் இருக்கிறது, காத்திருங்கள்.

உங்களில் உள்ள டி.என்.ஏ மற்ற எல்லாருடைய மரபணு அமைப்பை போல 99% இருக்கிறது.4 இந்த மூன்று பில்லியன் எழுத்துக்கள் எப்படி வரிசைப்படுத்த பட்டு உள்ளதோ அதுவே உங்களை வினோதமான “நீங்களாக” நிர்ணயிக்கிறது.

அமெரிக்க அரசாங்கம் ஒவ்வொருவரையும் அடையாளம் கண்டுபிடிக்க ஒன்பது-எண்ணிகையின் சமூக பாதுகாப்பு எண்ணை அளித்திருக்கிறது. ஆனால், உங்களில் உள்ள ஒவ்வொரு உயிரணுவிலும் உங்களுக்கு மட்டும் செர்ந்த மூன்று பில்லியன் எழுத்திளுள்ள டி.என்.ஏ அமைப்பு உள்ளது. இந்த மரபணு உங்கள் அடையாலத்தை கான்பிப்பது மட்டுமல்லாமல் உங்கள் உயிரணுவின் நடத்தையையும் கற்ப்பிக்கிறது.

டி.என்.ஏ ஏண் முக்கியம் என்பதை நீங்கள் பார்ப்பீர்கள்

ஹூமன் ஜிநோம் ப்ராஜெக்ட்டின் நிர்வாகஸ்தரான டாக்டர். பிரான்சிஸ் காலின்ஸ் இப்படி சொல்லுகிறார்: “ஒரு டி.என்.ஏ-வைய் ஒரு உயிரணுவின் உட்கருவில் வீற்றிருக்கிற கற்பிக்கும் லிபியை போல அதாவது மேன்பொருள் நிரல் (software program) போன்றதாகும்.”5

தகவல் வல்லுநர் பெரீ மார்ஷல் இப்படி சொல்லுகிறார்: “வடிவமைக்கப்படாத ஒரு கணினி நிரலும் (computer program) இருந்ததில்லை. அது ஒரு நிரலாவது, குறியீடாவது, அல்லது மொழியின் மூலமாக வடிவமைக்கப்பட்ட செய்தியாவது இருக்கலாம். அதற்கு பின் ஒரு அறிவார்ந்த புத்தி இருக்கிறது.”6

முன்னால் நார்த்திகனான டாக்டர். ஆன்டனி ப்ளூ-வின் கேள்வி என்னவென்றால், இந்த உயிராணுவை கற்பிக்கும் மூன்று பில்லியன் குறியீடுகளை எழுதியவர் யார்? இப்படி தொடர்ந்து வேலைசெய்யும் குறியீடை உயிரணுவில் வைத்தவர் யார்?

இது எப்படி இருக்கிறதென்றால், நீங்கள் கடல் ஓரத்தில் நடக்கும்போது, மணலில் “மைக் மிஷேலை காதலிக்கிறார்” என்று எழுதப்பட்டிருப்பதை பார்க்கிறீர்கள். அந்த கடல் அலைகள் அதை எழுதவில்லை, மாறாக ஒரு நபர் அதை எழுதினார், என்று நீங்கள் அறிவீர்கள். இது ஒரு துல்லியமான செய்தி. இது ஒரு தெளிவான உரையாடல்.

அதே போல டி.என்.ஏ அமைப்பும் ஒரு சிக்கலுள்ள முழுமை, மூன்று பில்லியன் எழுத்தை கொண்ட லிபி. அது உயிரணுவின் செயல்முறையை தெரிவித்து நடத்துகிறது.

நம் உயிரணுக்களில் உள்ள இந்த எளிதற்ற செய்தி மற்றும் குறியீடுகளை எப்படி விவரிப்பது?

ஜூன் 26-2001,-அன்று ஜனாதிபதியான க்லின்டன் மனித மரபு ரேகையை வரிசைப்படுத்தி முடித்தவர்களை பாராட்டினார்.க்லின்டன் சொன்னது என்னவென்றால், “தேவன் ஜீவனை எப்படி படைத்தார் என்ற மொழியை நாம் இன்று கற்றுக்கொண்டிருக்கிறோம். தேவனின் மிக தெய்வீக மற்றும் புனிதமான ஈவு எளிதற்ற தன்மையும், அழகையும், ஆச்சரியத்தையும் பார்க்கிறோம்.”7 இதற்க்கு பிறகு மேடை ஏறின ஹூமன் ஜிநோம் ப்ராஜெக்ட்டின் நிர்வாகஸ்தரான டாக்டர். பிரான்சிஸ் காலின்ஸ் இப்படி சொன்னார்: “தேவன் மாத்திரம் அறிந்திருந்த கற்பிக்கும் புத்தகத்தை முதல் முறையாக பார்த்தோம் என்று அறிந்தது என்னை ஆச்சரியமூட்டுகிறது மற்றும் என்னை பணிவாக்குகிறது.”8

மனித சரீரத்தில் உள்ள டி.என்.ஏ அமைப்பை பார்க்கும்போது, ஒரு அறிவார்ந்த (மிக்க அறிவார்ந்த) வடிவமைப்பு இருக்கிறது என்பதை மறுக்கவே முடியாது.

சத்திய வேதத்தின்படி (அதுவே எளிதற்றதல்ல), தேவன் நம் வாழ்கையின் “ஆசிரியராக” மட்டுமல்ல நமது வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்கும் “உறவாகவும்” இருக்கிறார். தேவனுக்கு நாம் செவிசாய்த்து அவரை நம்பும்போது, அவரே நாம் ஏங்குகிற எல்லாவற்றையும், அதாவது எந்த சூழ்நிலைக்கும் வேண்டிய பெலன், சந்தோஷம், ஞானம், மற்றும் நாம் அன்புக்கூறப்பட்டவர்கள் என்ற அறிவு, தருகிறார். அவரே மிக பெரியவரும் நம் வாழ்வில் சார்ந்துகொள்ள தக்க வழிகாட்டியாகவும் இருக்கிறார். டி.என்.ஏ உயிரணுவை கற்பிக்கும்படி தேவன் செய்தது போலவே, நம்மை அவர் நேசிப்பதினால், அவர் நம் வாழ்கையையும் அவர் மகிமைக்காகவும் நம் நலனுக்காகவும் நேர்த்தியாக செயல்படுவதற்காக நம்மை கற்பிக்க ஆவலோடு எதிர்பார்க்கிறார்.

டி.என்.ஏ ஏன் முக்கியமானது? தேவன் இருக்கிறார் என்பதற்கு அது ஒரு ஆதாரம். தேவனோடு நீங்கள் ஒரு உறவை ஆரம்பித்ததுண்டா? நீங்கள் இந்த உறவை எப்படி துவக்க முடியும் என்பதை தேவனை தனிப்பட்ட முறையில் அறிவது எப்படி என்ற கட்டுரை விவரிக்கிறது.

தேவன் நிஜமா? என்ற கேல்விக்கான பதிலை இன்னும் ஆராய்ந்து அறிய, தேவன் இருக்கிறாரா என்ற கட்டுரையை பார்க்கவும்.

 கடவுளுடன் ஒரு உறவுத் தொடங்குவது எப்படி?
 எனக்கு ஒருக் கேள்வி உண்டு...

(1) Healthy-elements.com/atheists.html (2) ஃப்ர்யான்ஸிஸ் ச். காலிந்ஸ், டைரெக்டர் ஆஃப் த ஹ்யூமன் ஜீநோம் ப்ராஜெக்ட், த லாங்வேஜ் ஆஃப் கோட், (ஃப்ரீ ப்ரெஸ், ந்யூ யார்க், ந்.வை), 2006, பி 1. (3) ஐபிட். (4) ஐபிட், ப் 125. (5) ஐபிட், ப் 102. (6) பெரீ மார்ஷல், இன்பர்மேஷன் இன்ஜிநியர், cosmicfingerprints.com. (இந்த கட்டுரையில் மற்ற கருத்துக்கள் கூட பெரீ மார்ஷல் எழுதினது) (7) ஃப்ரான்ஸிஸ் ச். காலின்ஸ், த லாங்வேஜ் ஆஃப் கோட், பி 2. (8) ஐபிட், p 3.

இந்தக் கட்டுரையைப் பகிர  

TOP