வாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.
வாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.

பரிசுத்த ஆவியானவர் யார்?

கே: பரிசுத்த ஆவி என்றால் யார் அல்லது என்ன? நான் இந்தப் பெயரை/வாக்கியத்தை உங்களின் வலைப்பகுதியில் சில இடங்களில் பார்த்திருக்கிறேன்.

எங்களின் பதில்:  பரிசுத்த ஆவியானவர் உண்மையான நபர் அவர் இயேசு மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்து பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதன் பின்பு அவருடைய உண்மையான சீஷர்களோடு இருக்கும் படி இறங்கி வந்தார்.1 இயேசு அவருடைய அப்போஸ்தலர்களிடம் சொன்னார்

“நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனே கூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது: அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள். நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன்.”2

பரிசுத்த ஆவியானவர் உறுதியற்றவரோ, புலப்படாத ஆவியோ, அல்லது ஆள்தத்துவமில்லாதவரோ அல்ல. அவர் ஆள்தத்துவமுள்ள நபர் எல்லா விதத்திலும் பிதாவாகிய தேவனோடும் குமாரனாகிய கிறிஸ்துவோடும் சமமானவர். தேவத்துவத்தின் மூன்றாவது நபராகக் கருதப்பட வேண்டியவர். இயேசு அப்போஸ்தலர்களிடம் சொன்னார்,

“அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்;ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார்.”3

தேவன் பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியாக இருக்கிறார். பிதாவுக்கும் குமாரனுக்கும் உரியதாகச் சொல்லப்படும் அனைத்து இறைத்தன்மைகளும் அவர்களைப் போலவே பரிசுத்த ஆவியானவருக்கும் உரியது ஆகும். இயேசுவை4 விசுவாசித்து அவரை ஏற்றுக்கொண்ட ஒரு நபர் மறுபிறவி அடையும் போது தேவன் பரிசுத்த ஆவியின்5 மூலம் அவருக்குள்ளாய் ஆளுகைச் செய்கிறார். பரிசுத்த ஆவியானவருக்கு அறிவாற்றல், உணர்வாற்றல் மற்றும் விரும்பம் உண்டு.6

பரிசுத்த ஆவியானவரின் பிரதான பணி என்னவென்றால் அவர் இயேசு கிறிஸ்துவுக்குக் குறித்த சாட்சியாக இருக்கிறார்.7 அவர் ஜனங்களுடைய இருதயத்திலே இயேசுகிறிஸ்துவை குறித்த சத்தியத்தைப் போதிக்கிறார். பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்தவப் போதகராகச் செயல்படுகிறார்.8 அவர் தேவனுடைய சித்தம் மற்றும் தேவனுடைய சத்தியத்தைக் கிறிஸ்தவர்களுக்கு வெளிப்படுத்துகிறார். இயேசு தன்னுடைய சீஷர்களிடம் சொன்னார்...

“என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.”9 “சத்திய ஆவியாகிய அவர் வரும் போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையும் சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.”10

பரிசுத்த ஆவியானவர் இயேசுவை விசுவாசிப்பவர்களுக்குள்ளே வாசம் பண்ணி அவர்களுக்குள் தேவனுடைய சுபாவத்தை வளர்க்கவே கொடுக்கப்பட்டிருக்கிறார். நாம் செய்ய முடியாததைப் பரிசுத்த ஆவியானவர் நம்முடைய வாழ்க்கையிலே செய்பவராக நம்மில் அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், மற்றும் இச்சையடக்கம் ஆகியவைகளைப் பெறுகப்பண்ணுகிறார்.11 அன்பாய், பொறுமையாய், தயவாய் இருப்பதற்கு முயற்சி செய்வதற்குப் பதிலாகத் தேவன் நம்மைப் பரிசுத்த ஆவியானவரை சார்ந்திருந்து இந்தத் தன்மைகளைப் பெற்றுக்கொள்ள வலியுறுத்துகிறார். எனவே கிறிஸ்தவர்கள் ஆவியின் படி நடக்கவும் ஆவியில் நிரம்பி வாழவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.12 பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்தவர்களை ஊழியம் செய்யத் தகுதிபடுத்துகிறார் அது கிறிஸ்தவர்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர உதவுகின்றது.13

பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் மத்தியிலும் தன் கிரியையைச் செய்கிறார். அவர் ஜனங்களுடைய இருதயத்தைத் தேவனுடைய உண்மையைக் கொண்டு மாற்றுகிறார்.14 அதாவது எவ்வளவு பாவி நாம், தேவனுடைய பாவமன்னிப்பின் அவசியம், இயேசு கிறிஸ்து எவ்வளவு பரிசுத்தமானவர்—அவர் நம்முடைய பாவங்களுக்காக மரித்தார் மற்றும் அவரை அறியாதவர்களுக்குத் தேவனுடைய நியாயமான நியாயத்தீர்ப்பு இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளச் செய்வார். பாவமன்னிப்பு மற்றும் புதிய வாழ்க்கைகாகத் தேவனிடத்தில் திரும்பப் பரிசுத்த ஆவியானவர் நம்முடைய இருதயம் மற்றும் மனதை தூண்டுகிறார்.

 கடவுளுடன் ஒரு உறவுத் தொடங்குவது எப்படி?
 எனக்கு ஒருக் கேள்வி உண்டு...

(1) அப்போஸ்தலர் அதிகாரம் 2 (2) யோவான் 14:16-18 (3) மத்தேயு 28:18-20 (4) யோவான் 1:12-13; யோவான் 3:3-21 (5) 1 கொரிந்தியர் 3:16 (6) 1 கொரிந்தியர் 2:11; ரேமார் 15:30; 1 கொரிந்தியர் 12:11 (7) யோவான் 15:26, 16:14 (8) 1 கொரிந்தியர் 2:9-14 (9) யோவான் 14:26 (10) யோவான் 16:13 (11) கலாத்தியா 5:22-23 (12) கலாத்தியா 5:25; எபேசியர் 5:18 (13) ரேமார் 12; 1 கொரிந்தியர் 12; எபேசியர் 4 (14) யோவான் 16:8-11

இந்தக் கட்டுரையைப் பகிர  

TOP