வாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.
வாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.

தேவன் நமது ஜெபங்களுக்கு பதில் அளிப்பாரா?

எப்படி ஜெபிப்பது? தேவன் ஏன் நம் ஜெபதிற்க்கு பதில் அளிக்கிறார்?

உண்மையாக தேவனை நம்புகிற நபரை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? நான் நார்திகராய் இருந்தபோது, ஜெபிக்கும் ஒரு நல்ல நண்பர் எனக்கிருந்தார். சிலவற்றிற்காக நான் தேவனை நம்புகிறேன் என்று ஒவ்வொரு வாரமும் சொல்லுவார்கள். அப்படி ஒவ்வொரு வாரமும் அவர்கள் ஜெபத்திற்கு பதிலாக தேவன் அவர்களுக்கு ஏதோ ஒரு ஆச்சரியமான காரியத்தை செய்வார். ஒரு நார்திகருக்கு இதை ஒவ்வொரு வாரமும் பார்ப்பது எவ்வளவு கடினம் என்று உங்களுக்கு தெரியுமா? அது ஏதோ ஒரு தற்செயல் என்று நான் வாதிப்பேன், ஆனால் நாட்கள் செல்ல செல்ல எனது இந்த விவாதம் பெலவீனப்பட்ட ஒன்றாக தோன்றினது.

ஏன் தேவன் என் நண்பரின் ஜெபத்துக்கு பதில் அளிக்கிறார்? மிக பெரிய காரணம் என்னவென்றால் அவர்களுக்கு தேவனோடு உறவு இருந்தது. அவர்கள் தேவனை பின்பற்ற விருப்பமுற்று இருந்தார்கள். மற்றும் தேவன் சொன்னதை அப்படி கேட்டு நடப்பார்கள். தேவன் அவர்கள் வாழ்க்கையை கற்பித்து நடத்தும் உரிமை பெற்றவர் என்ற உணர்வு அவர்கள் மனத்தில் இருந்தது. மற்றும் அவர்களை நடத்தும்படி தேவனை அவர்கள் வரவேற்று இருந்தார்கள்! அவர்கள் சில காரியங்களுக்காக ஜெபிக்கும்போது, அது அவர்கள் தேவனோடு கொண்டிருந்த ஒரு இயற்கையான பகுதியாக இருந்தது. அவர்களின் தேவைகளை, கவலைகளை, வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளை தேவனிடம் சொல்லுவார்கள். மேலும், இப்படியாக அவர்கள் தேவனை சார்ந்து இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்று சத்திய வேதத்தின் மூலமாக அறிந்து, அந்த நிச்சயம் உள்ளவர்களாக இருந்தார்கள்.

சத்திய வேதம் சொல்லும் இந்த வாக்கியத்தை அவர்கள் செயல் முறையில் வெளிப்படுத்தினார்கள்: “நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படிகேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்.”1 “கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது...”2

ஏன் தேவன் எல்லாருடைய ஜெபத்திற்க்கும் பதில் அளிப்பதில்லை?

அது அவர்கள் தேவனோடு உறவு ஏற்பட்டதின் நிமித்தமாக இருக்கக்கூடும். தேவன் இருக்கிறார் என்று அவர்களுக்கு தெரியும் மற்றும் எப்போதாகிலும் அவரை ஆராதிப்பார்கள், ஆனால் தேவனோடு உறவில்லாதவர்களாக அவர்கள் இருக்கலாம். மேலும், பாவ மனிப்பை தேவனிடம் இருந்து முழுமையாக பெறாமல் இருக்க கூடும். அதற்கும் நீங்கள் தேவந்தம் கேட்பதை பெற்ருக்கொள்வதற்கும் என்ன சாமந்தம் இருக்கிறது? இங்கே அது விவரீக்கப்பட்டிருக்கிறது: “இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை. உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.”3

நாம் இயல்பாகவே தேவனிடம் இருந்து பிரிந்திருப்பதை உணர முடியும். ஜனங்கள் தேவந்தியம் ஏதாகிலும் கேட்கும்போது என்ன நடக்கிறது? அவர்கள் இப்படி தூதங்குகிறார்கள்: “தேவனே, இந்த பிரசனையை தீர்க்க எனக்கு உமது உதவி வேண்டும்…” பின் ஒரு இடைவெளி. பின்பு திரும்பவும் இப்படி ஆரம்பிக்கிறார்கள்…”நான் பூரணமான நபர் என்று அறிவேன், எனக்கு உம்மிடம் கேட்க எந்த உரிமையும் இல்ல என்றும் அறிவேன்…” இங்கு அவர்களுக்கு தங்கள் பாவம் மற்றும் தோல்வியின் அறிவு உண்டு என்பதை பார்க்கிறோம். மற்றும் அந்த நபருக்கு, தனது தோல்வியை பற்றி அவருக்கு மட்டுமல்ல தேவனுக்கும் தெரியும் என்று அறிகிறார்கள். “நான் யாரை ஏமாற்ற பார்க்கிறேன்”? என்ற உணர்வும் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்கு தெரியாத விஷயம் என்னவென்றால், எப்படி தங்கள் பாவங்களுக்காக மன்ணிப்பை தேவனிடம் இருந்து பெறுவது என்பதே. அவர்கள் ஜெபம் பதிலளிக்கபடும்படி தேவனோடு எப்படி உறவுகொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். இதுவே ஜெபம் பதிலக்கப்படுவதற்கான அஸ்திபாரம்.

எப்படி ஜெபிப்து: அஸ்திபாரம்

முதலாவதாக நீங்கள் தேவனோடு உறவுகொள்ள வேண்டும். ஏனென்றால், மைக் என்ற ஒரு பையன் இருக்கிறார் என்று கற்பனை செய்யுங்கள். அவன் ப்ரிந்ஸ்டந் பல்கலை கழகத்தின் தலைவரிடம் சென்று ஒரு காரை கடனில் வாங்க கையெழுத்து போடுங்கள் என்று கேட்கிறான் என்று வைத்துக்கொள்வோம். மைக் அந்த தலைவரை தனிப்பட்ட முறையில் அறியாதிருந்தால், அவன் எதிர்பார்க்கிறது நடக்காது. ஆனால், அந்த தலைவரின் மகள் இந்த காரியத்தை கேட்டிருந்தால், கையெழுத்து போடுவது அவருக்கு பிரச்சனையாக இருக்காது. உறவு முக்கியமானது.

தேவனும் அப்படியே தான், அந்த நபர்கள் தேவ பிள்ளைகளாக இருந்தால், தேவனுக்கு சொந்தமானவர்களாக இருந்தால், அவர்களை அவர் அறிந்திருக்கிறார் மற்றும் அவர்கள் ஜெபத்தையும் கேட்கிறார். இயேசு சொன்னார், “நானே நல்ல மேய்ப்பன்… நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை.”4

தேவனை நீங்கள் உண்மையாக அறிந்திருக்கிறீர்களா மற்றும் அவருக்கு உங்களை தெரியுமா? தேவன் உங்கள் ஜெபங்களுக்கு பதில் அளிக்கும் படி, அவரோடு உறவுக்கொண்டிருக்கிறீர்களா? அல்லது உங்கள் வாழ்க்கையில் தேவன் எங்கேயோ தூரத்தில் இருக்கிறவராக தோன்றுகிறாரா, வெறும் ஒரு கருத்தாக இருக்கிறார்? தேவன் உங்களுக்கு தூரமாக தோன்றினால், அல்லது தேவனை அறிந்திருக்கிறீர்களா இல்லையா என்ற நிச்சயம் இல்லாமல் நீங்கள் இருந்தால், தொடர்புகொள்வது, என்ற கட்டுரையை வாசியுங்கள். தேவனோடு இப்போதே உறவுகொள்ள அது உதவும்.

தேவன் நிச்சயமாக உங்கள் ஜெபத்திற்கு பதில் அளிப்பாரா?

இயேசுவை அறிந்தும் அவரை சார்ந்தும் இருக்கிறவர்களுக்கு அவர் தாராளமானவர். அவர் சொல்லுகிறார், “நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.”5 அவரில் நிலைத்திருப்பது மற்றும் அவர் வார்த்தை அவர்களுக்குள் நிலைத்திருப்பது என்பதின் அர்த்தம் என்னவென்றால், இப்படி தேவனை சார்ந்து இருக்கிறவர்கள் அவர் இருக்கிறார் என்ற உணர்விலும், அவரை சார்ந்தும் அவர் சொல்வதை கேட்டும் நடப்பார்கள். அப்போது, அவர்கள் தங்களுக்கு வேண்டியதெல்லாம் தேவனிடம் கேட்பார்கள். மற்றொரு தகுதி இதுவே: “நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படிகேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம். நாம் எதைக் கேட்டாலும் அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம்.”6 தேவன் தமது சித்ததின்படி (மற்றும் அவரது ஞானத்தின்படி, நம்மேல் அவர் வைத்த அன்பின்படி, அவர் பரிசுத்தத்தின்படி…) நமது ஜெபதிற்கான பதிலை அளிக்கிறார்.

நாம் தடுமாரும் இடம் இதுவே: சில காரியங்கள் நமக்கு புரிந்திருப்பதினால், நாம் அதுதான் தேவ சித்தம் என்று எண்ணிக்கொள்கிறோம். ஒரு குறிப்பிட்ட ஜெபதிற்கு ஒரு சரியான பதில் மட்டுமே உள்ளது, மற்றும் அதுதான் தேவ சித்தம், என்றும் நாம் கருதுகிறோம். இங்கு தான் நமக்கு கடினமாகிறது. நாம் நேரம் மற்றும் அறிவின் வரம்புகளில் வாழ்கிறோம். ஒரு சூழ்நிலையை பற்றி நமக்கு கொஞ்சம் தகவல்கள் தான் இருக்கிறது. தேவனின் அறிவு எல்லையற்றது. ஒரு நிகழ்வு காலப்போக்கில் எப்படியாக இருக்கும் என்பது அவருக்கு மட்டுமே தெரியும். நாம் எண்ணுகிறதற்கும் மேலான திட்டங்களை அவர் வைத்திருப்பார். ஆகையால், நாம் ஏதோ ஒன்றை தேவ சித்தம் என்று முடிவு செய்வதினால் தேவன் அந்த காரியத்தை செய்யப்போவது இல்லை.

தேவன் எதை செய்ய விருப்பமுள்ளவராக இருக்கிறார்?

தேவன் நமக்காக வைத்திருக்கிற நோக்கங்களை பற்றி எழுதினால், அதிக பக்கங்கள் எழுதவேண்டியதாகும். முழு வேதாகமும் தேவன் நம்மோடு எப்படிப்பட்ட உறவுகொள்ள விரும்புகிறார் மற்றும் அவர் நமக்கு எப்படிப்பட்ட வாழ்க்கையை தர விரும்புகிறார் என்பதை விவரிக்கின்றது. இங்கு சில உதாரணங்கள் உண்டு:

“ஆனாலும் உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்; கர்த்தர் நீதிசெய்கிற தேவன்; அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்.”7 “தேவனுடைய வழி உத்தமமானது… தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்.”8 “தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்.”9

ஆனால், தேவன் நம்மேல் வைத்த அன்பையும் அர்ப்பனிப்பையும் இதில் விளங்க செய்கிறார்: இயேசு சொன்னார், “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.”10

அவர் சொன்னது மட்டுமல்ல அப்படியே செய்தார். ஆகையால், “தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?”11

சுருக்கமாக...எப்படி ஜெபிப்பது

உண்மையில், ஜனங்கள் வியாதிப்படுகிறார்கள், மரித்தும் போகிறார்கள்; பண பிரச்சனைகள் உண்மையானதுதான், மற்ற அநேக கஷ்டமான சூழ்நிலைகள் வரக்கூடும். அப்போது என்ன செய்வது?

நம் கவலைகளை அவரிடம் கொடுக்கவேண்டும் என்று தேவன் சொல்லுகிறார். சூழ்நிலை படுமோசமாக இருந்தாலும், “அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.”12 சூழ்நிலைகள் கட்டு மீறி போகிறதுபோல தோன்றலாம், ஆனால் அது உண்மை அல்ல. உலகமே இடிந்து விழுவதை போல இருந்தாலும், தேவன் நம்மை பாதுகாப்பார். இப்படிப்பட்ட நேரங்களில் தான் நாம் தேவனை அறிந்தது நல்லது என்று நன்றியுடன் நினைப்போம். “உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் சமீபமாயிருக்கிறார். நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.”13 நாம் கற்பனைப்பன்ண முடியாத அளவுக்கு தேவன் நமக்கு தீர்வுகளையும் தீர்மானங்களையும் தருவார். எந்த கிறிஸ்தவனும் இப்படி அவர்களுக்கு நடந்ததை பற்றின உதாரணங்களை பட்டியல் இட்டு காட்ட சாத்தியம் உண்டு. என்றாலும், சூழ்நிலைகள் மாறாத நேரங்களில், தேவன் நமக்கு அந்த சூழ்நிலயின் மத்தியிலும் மா பெரும் சமாதானத்தை அருளுவார். இயேசு சொன்னார், “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.”14

இந்த நேரத்தில் தான் (தொடர்ந்து சூழ்நிலைகள் கடினமாக இருக்கும்போது) தேவனை நாம் இன்னும் நம்பவேண்டும் என்று அவர் சொல்லுகிறார்: வேதம் சொல்லுகிறது “தரிசித்து அல்ல, விசுவாசித்து நடவுங்கள்” என்று. ஆனால் அது குருட்டு நம்பிக்கை அல்ல. அது தேவனின் பண்பின் அடிபடையாக கொண்டுள்ள நம்பிக்கை. கோல்டந் காதே ப்ரிட்ஜ் மேல் ஓடுகின்ற கார், அந்த பாலத்தை நம்பித்தான் ஓடுகிறது. அந்த ஓட்டுனர் என்ன நினைக்கிறார், என்ன உணருவுள்ளவராக இருக்கிறார், அவர் அருகாமையிலுள்ள பயணி என்ன பேசுகிறார் என்பது ஒரு பொருட்டல்ல. அந்த வாகனத்தை பாலத்தின் மறுபுறம் பத்திரமாக சேர்ப்பது பாலத்தின் நம்பகத்தன்மை மட்டுமே, அதை நம்பும்படி அந்த ஓட்டுனர் எடுத்த முடிவாகும்.

அப்படியே, தேவனும் அவர் உண்மையை, அவர் சுபாவத்தை...அவர் மனதுருக்கத்தை, அன்பை, ஞானத்தை, நீதியை நம்பும்படி நம்மை கேட்டுக்கொள்கிறார். அவர் சொல்லுகிறார், “அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன்.”15 “எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்; தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார்.”16

सारांश प्रार्थना कैसे की जाए?

தேவன் தமது பிள்ளைகளின் ஜெபத்தை கேட்பேன் என்று சொல்லி இருக்கிறார் (அதாவது அவரை தங்கள் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டு அவரை பின்பற்ற விரும்புகிறவர்கள்). எந்த கவலைகளானாலும் நாம் அவரிடம் ஜெபத்தில் கொண்டு செல்ல முடியும். அவர் தமது சித்ததின்படி நமக்கு செய்வார். நம் கஷ்டங்களை சுமக்கும்போது, அந்த கவலைகளை அவர் மேல் வைத்துவிட்டு அவரிடம் இருந்து சூழ்நிலைகளுக்கு அப்பாற்பட்ட சமாதானத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். நம் நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் அடிப்படை தேவனின் சுபாவமே. நாம் அவரை எந்த அளவுக்கு அறிந்துகொள்கிறோமோ, அந்த அளவுக்கு அவரை நம்புவோம்.

தேவனின் சுபாவத்தை பற்றி அறிய, தேவன் யார்? என்ற கட்டுரையை வாசிக்கவும் அல்லது இந்த இணையதளம்திலுள்ள மற்ற கட்டுரைகளை வாசிக்வும். நாம் ஜெபிப்பதின் காரணமே, தேவனின் சுபாவத்தால் தான். தேவன் உங்களுக்கு பதில் அளிக்கும் முதலான ஜெபம் என்னவென்றால், நீங்கள் அவரோடு உறவை துவங்க ஜெபிக்கும் ஜெபமாகும்.

(கட்டுரை எழுதியவர், மேரி லின் ஆடம்‌ஸ்)

 கடவுளுடன் ஒரு உறவுத் தொடங்குவது எப்படி?
 எனக்கு ஒருக் கேள்வி உண்டு...

(1) 1 யோவான் 5:14 (2) 1 பேதுரு 3:12 (3) ஏசாயா 59:1,2 (4) யோவான் 10:14,27-28 (5) யோவான் 15:7 (6) 1 யோவான் 5:14,15 (7) ஏசாயா 30:18 (8) சங்கீதம் 18:30 (9) சங்கீதம் 147:11 (10) யோவான் 15:13 (11) ரோமர் 8:32 (12) 1 பேதுரு 5:7 (13) பிலிப்பியர் 4:5-7 (14) யோவான் 14:27 (15) எரேமியா 31:3 (16) சங்கீதம் 62:8

இந்தக் கட்டுரையைப் பகிர  

TOP