வாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.
வாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.

சபயங்கரமான காரியங்களைச் செய்யும் தேவனை ஏன் ஆராதிக்க வேண்டும்?

கே: “குழந்தைகள் கற்பழிப்பு போன்ற பயங்கரமான காரியங்களை அனுமதிக்கும் தேவனை ஏன் ஆராதிக்க வேண்டும்?”

எங்களின் பதில்:  என்னுடைய நெருங்கிய உறவினர் ஒருவர் குழந்தையாக இருக்கும் போது கற்பழிக்கப்பட்டிருக்கிறார்.

நான் பாலியல் துஷ்பிரயோகம் படுத்தப்பட்ட மக்களோடு எனக்கு நன்கு பரிசயம் இருக்கிறது. எனக்கு உண்மையாகவே உங்களுடைய ஆத்திரத்தை புரிந்துகொண்டுள்ளேன்.

மக்கள் நல்லதை எடுத்து அதைச் சீரலிப்பது தேவனுடைய தவறு அல்ல. தகப்பம் மகளைப் பழவந்தப்படுத்துவதும் மகனை தாய் வார்த்தையால் தவறாய் நடத்துவதும் தேவனுடைய தவறு அல்ல.

மனிதனாகிய நாம் நமக்கு எது பிரியமோ அதைச் சுதந்திரமாகத் தேர்வு செய்து செய்கிறோம்.

தேவன் மற்றவர்கள் நமக்குத் தீமை செய்வதை ஏன் தடுக்காமலிருக்கிறார் என்பதைக் குறித்து எப்படி நாம் உணர வேண்டும்?

தேவன் மற்றவர்களுக்கு நாம் தீமை செய்வதை ஏன் தடுக்காமலிருக்கிறார் என்பதைக் குறித்து எப்படி நாம் உணர வேண்டும்?

தேவன் வரைமுறையை ஏற்படுத்த வேண்டும் மற்றும் மக்கள் அதைத் தட்டும் போது தேவன் அவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். குழந்தைகளை மானபங்கப்படுத்துபவர்களைத் தேவன் கொள்ள வேண்டும் என்பது நமது பரிந்துரையாக இருக்கும்.

குழந்தைகளை மானபங்கப்படுத்துபவர்களைத் தூண்டும் குழந்தைகள் ஆபாசபடங்களை எடுக்கும் தயாரிப்பாளர்களைக் குறித்து என்ன சொல்வது? அவர்களைத் தேவன் கொல்வது சரிதான் என்று சொல்லலாமா?

ஆம், வார்த்தையினால் மானபங்கப்படுத்துபவர்களைக் குறித்துத் தேவன் என்ன செய்ய வேண்டும்?

வார்த்தைகள் ஆழ்ந்த காயத்தை ஏற்படுத்துகிறது. வார்த்தையினால் மானபங்கப்படுத்துதலா அல்லது கற்பழிப்பா எது அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை ஒரு அறைமுழுவதும் இருக்கும் ஆலோசகர்களிடம் கேட்டால் அவர்கள் வார்த்தையினால் மானபங்கப்படுத்துவதே அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்வார்கள். இதனில் அதிகமாகச் செய்ய வேண்டியது இன்னும் இருக்கிறது.

நாம் தேர்வு செய்வதைச் செய்வது எனக்கு நலமாகத் தோன்றுகிறது. ஆனால் தேவன் நம்மைக் காரியங்களைச் செய்ய அனுமதிக்கும் போது நாம் அவர் மீது எப்படிக் கோபப்பட முடியும்.

நாம் நல்ல வாழ்க்கையை வாழ்வது எப்படி என்று தேவன் நமக்கு வெளிப்படுத்தவில்லையா?

எல்லோரும் 10 கட்டளைகளைக் கைகொள்வோமேயானால் எந்தக் குழந்தையும் கற்பழிக்கப்படுவதில்லை மற்றும் மானபங்கப்படுத்தப்படுவதில்லை என்பது உண்மையில்லையா?

நம்மைக் கட்டுபடுத்துவதை விட நமக்குச் சுதந்திரத்தை தந்திருக்கிறார். தேவன் யாருடைய விருப்பத்திலும் தலையிடுகிறது இல்லை. நாம் செய்ய எல்லாவற்றிர்க்கும் பதிலளிக்க வேண்டும். நியாயத்தீர்பானது நமக்குக் கொடுக்கப்பட்ட வழிமுறையின் அடிப்படையிலிருக்கும்.

எப்படி நன்றாக வாழவேண்டும் என்று சொல்;லப்பட்டது போதுமானது அல்ல என்பதே பிரச்சனை. தேவனும் அதைச் சொல்கிறார்.

குழந்தையை மானபங்கப்படுத்துபவர்களிடம் குழந்தைகளை மானபங்கப்படுத்துவது பாவம் என்று சொல்கிறது புதிய செய்தி அல்ல. நமக்கு ஆழமான உள்ளான வழிநடத்துதல் வேண்டும் என்று தேவன் சொல்கிறார். சரியானதை செய்ய உள்ளான வல்லமை வேண்டும். தேவன் அதையே தருகிறார்.

“நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்”1 இயேசு சொன்னார். பிரச்சனையில்லாத வாழ்க்கை கிடையாது. நாம் நம்மைச் சிருஷ்டித்த மற்றும் நேசிக்கிற தேவனோடு நல்ல ஐக்கியத்தில் வாழ்வோமேயானால், அவர் நம்மை நடத்துகிறார் மற்றும் நமக்கு உதவுகிறார்.

தேவனோடு எப்படி ஐக்கியத்தைத் தொடங்குவது என்று எப்பொழுதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதைப் பார்கவும்.

 கடவுளுடன் ஒரு உறவுத் தொடங்குவது எப்படி?
 எனக்கு ஒருக் கேள்வி உண்டு...

(1) யோவான் 10:10

இந்தக் கட்டுரையைப் பகிர  

TOP