வாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.
வாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.

தேவனோடு துடங்குவது

இயேசுவை என் வாழ்க்கையில் அழைத்திருந்தால், அவர் உண்மையாகவே எனக்குள் இருக்கிறார் என்று எனக்கு எப்படி தெரியும்?

இயேசுவை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அழைத்தீர்கள் என்று கேட்க மிகவும் சந்தோஷமாயிருக்கிறது! நீங்கள் தேவனை ஏற்றுக்கொள்ள தீர்மானித்து அவரை உங்கள் வாழ்க்கையில் அழைத்தபோது, அவர் உங்கள் விண்ணபத்தை கேட்டு விட்டாரா என்பதை நீங்கள் அறிவது முக்கியம். ஆம். I யோவான் 1:14 சொல்லுகிறது, “நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படிகேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்.” நாம் அவரிடத்தில் கேட்கும்போது, இயேசு நாம் வாழ்க்கையில் வருவார் என்று அவர் வாக்குப்பண்ணி இருக்கிறார்.

வெளிப்படுத்தல் 3:20, இயேசு இந்த வாய்ப்பை தருகிறார்: “இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.” தேவனுக்கு உங்கள் இருதயத்தை திறந்தீர்களா? நீங்கள் அப்படி செய்தால், அவர் என்னை செய்வார் என்று சொல்லி இருக்கிறார்? தேவன் உங்களை தவறாக வழிநடத்துவாரா?

யோவான் 6:37-இல், இயேசு இப்படியாக சொல்லுகிறார்: “பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும், என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை.” மற்றும் யோவான் 10: 27­­­­­-29-இல் இயேசு சொன்னார், “என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை. அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.”

நாம் இயேசுவோடு உறவுகொள்ளும்படி, அவர் நம் பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார். அவர் பாவத்தின் பிரச்சனையை கண்டும் காணாதவர் போல இருக்கவில்லை. மீண்டும் நம்மை அவர் உறவில் கொண்டுவரும்படி, அவர் மிகவும் பாடனுபவித்தார். இயேசு நம் பாவங்களை தம்மேல் சுமந்து, அவர் நீதியினால் நம்மை மூடினார். ஆகவே நாம் முற்றும் மன்னிக்கப்பட்டவர்களாக மற்றும் அவரால் முழுமையாக அங்கீகரிக்கப்பட்டவராக இருக்கிறோம். நாம் முதலாவதாக நல்ல வாழ்க்கையை வாழுகின்றவர்களாக, அல்லது மத சடங்குகளை செய்கிறவர்களாக, அல்லது அநேக வருடங்கள் அவரிடம் பிச்சை கேட்கிறவர்களாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. அவரோடு உறவுகொள்வதை அவர்தாமே நமக்கு சாத்தியமாகினார். நாம் அவருக்கு செய்ததின் அடிப்படையில் அல்ல, அவர் நமக்கு செய்ததின் அடிப்படையில் மட்டுமே நாம் அவரிடம் வந்திருக்கிறோம். நம்மை மன்னிக்கவும் மற்றும் நம் வாழ்க்கையில் அவர் வரவும், அவர் நம் பாவங்களுக்கான கிரயத்தை செலுத்தினார். ஒன்று பேதுரு 3:18-ன் படி, “ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்.”

தேவனோடுள்ள உறவில் வளருவதற்காக:

தேவனை நீங்கள் இன்னும் நன்றாக அறிய, அவர் வார்த்தையில் (பரிசுத்த வேதத்தில்) நேரத்தை செலுத்துங்கள். மற்றும் தம்மை உங்களுக்கு வெளிப்படுத்தவும் மற்றும் அவரோடுள்ள நம் ஐக்கியத்தை அவர் கட்டவும் அவரிடம் கேளுங்கள். யோவான் சுவிசேஷத்தை (புதிய ஏற்பாட்டின் நான்காம் புத்தகம்) படிக்க ஆரம்பிப்பது நலமாக இருக்கும்.

அவரோடு தாராளமாக பேசுங்கள். “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்” (பிலிப்பியர் 4:6,7) என்று சொல்லி நம்மை ஊக்கப்படுத்துகிறார்.

மின் அஞ்சலில் தொடர்புக்கொள்ளுங்கள்: உங்கள் வளாகத்தில் உள்ள கிறிஸ்தவர்களோடு என்ன வேத பாடங்கள் மற்றும் வளாகத்தின் நிகழ்ச்சிகள் உள்ளன என்பதை சொல்ல நாங்கள் விரும்புகிறோம். உங்களுக்கு மின் அஞ்சல் மூலம் பதில் அளிக்கப்படும். எங்களுக்கு மின் அஞ்சல் அனுப்புங்கள்.

TOP