வாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.
வாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.

ஓநாய்களுடன் காதல்

ஒரு பையன் தனது உண்மையான் டேடிங்க் அறிவுரையை தருகிறான். டேடிங்க் மற்றும் பாலியல் உறவை பற்றி இவன் கண்டுகொண்டதை பாருங்கள்…

பெயர் அறியப்படாத

இப்படி ஒரு பழமொழி உண்டு: “மற்றவர்களின் முட்டாள்தனத்தினால் பயனடைவதுவே சிறந்த திட்டம்.” இந்த கட்டுரை அதை பற்றியதுதான். பெண்களையும் உறவும் பற்றி நான் கடினமான விதத்தில் கற்றுக்கொண்ட சில காரியங்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். குறிப்பாக, நான் என் திருமணத்திற்கு பிறகு மட்டுமே பாலியல் உறவு கொள்வேன் என்று தீர்மானம் ஏன் எடுத்தேன் என்பதற்கான 10 காரணங்களை குறிப்பிட்டுள்ளேன்.

#1. பாலியல் உறவை பற்றி என்னப்படுகிறதெல்லாம் உண்மையல்ல என்று இப்போது எனக்கு தெரியும்.

நான் கல்லூரியில் இருந்தபோது, நான் ஒரு அனுபவத்தை கடந்து சென்றேன்; அதை “காதல் வெருமை” என்று அழைக்கிறேன். ஒரு பெண்ணுடன் இரவை கழித்தபின் அடுத்த நாள் காலையில் ஒரு வெருமையை உணர்வேன். இதை நீங்கள் தொலைக்காட்சி மற்றும் படங்களிலோ பார்ப்பது இல்லை, ஆனால் இது அதிகமாய் நடக்கின்ற ஒன்று. அதன் பிறகு ஒரு வெறுமை, அல்லது மனஸ்தாபம் எனக்கு இருக்கும்.

இந்த “காதல் வெறுமை” எனக்கு வினோதமாக இருந்தது. ஏனென்றால், நான் கல்லூரியில் இருந்தபோது பாலியல் உறவுதான் என் “தெய்வமாக” இருந்தது. ஒரு ஆனாக, நான் காலை, மதியம், இரவு எல்லா நேரத்திலும் அதை பற்றி தான் யோசிப்பேன். அதனால், பாலியல் உருவுகொள்வது என்னை முற்றும் திருப்தி செய்திருக்கும்—ஏனென்றால் அது என் “தெய்வத்தை” ஆராதிப்பதின் உச்சகட்டம்—என்று நீங்கள் எண்ணலாம். ஆனால் அதன் பிறகு அநேக நேரத்தில் நான் ஒரு அதிருப்த்தியை உணர்வேன்.

இதை நீங்கள் அனுபவித்ததுண்டா? உங்களுக்கு இந்த “காதல் வெறுமை” வந்ததுண்டா? உங்களுக்கு அப்படி நேர்ந்ததுண்டானால், இப்போது நீங்கள் நின்று யோசிப்பது நல்லது. “ஏன் அப்படி ஆகிறது? ஏன் எனக்கு முக்கியமாக தோன்றுகிற பாலியல் உறவு எனக்கு வெறுமை உணர்வை கொண்டுவருகிறது?”

இந்த வெருமையின் நிமித்தம் நான் மிகவும் குழம்பிபோய் இருந்தது உண்டு. பின்பு நான் இப்படி முடிவெடுத்தேன்: “எனக்கு இன்னும் அதிகமாக (பாலியல் உறவு) தேவை. அவ்வளவுதான்.” (அநேக நேரம் சில காரியங்கள் நம்மை திருப்தி செய்யும் என்று எண்ணுகிறோம் ஆனால் அது அப்படி செய்யாமல் போகும்போது, நாம் இப்படியாக நினைக்கிறோம். உதாரணமாக, நாம் எப்போதும் விரும்பின காரை வாங்குகிறோம், சில நாட்கள் கழிந்தபிறகு அது “தவறு இல்லை” என்று உணர்கிறோம். ஒரு கார் நம்மை திருப்தி செய்வதில்லை என்று உணராமல், அநேக நேரம் இப்படி தவறாக யோசிக்கிறோம், “சரி, அது “சரியான” கார் அல்ல. வேறொரு கார் என்னை முற்றும் “திருப்தி செய்யும்” என்று.)

ஆனால் அந்த வெறுமை தொடர்கிறது. அதனால், நான் ஒரு முடிவுக்கு வந்தேன் திருமணத்தின் முன் ஈடுபடும் பாலியல் உறவு நாம் நினைக்கிறது போல அல்லது பார்க்கிறதை போல சிறந்தது அல்லவென்று. பாலியல் உறவை பற்றி படங்களில் காட்டுவது உண்மை அல்ல. அது உண்மையாக இருந்தால், அது திருப்தி செய்கிறதாக இருக்கும் அல்லவா. அதில் எந்த “வெருமையும்” இருக்க கூடாது.

#2. இப்போது நான் பெண்களை கனமாக நாடத்த விரும்புகிறேன்.

பாலியல் உறவு என்று வரும்போது என்ன நடக்கிறது என்று எங்களால் முழுமையாக புரிந்துக்கொள்வது இல்லை. அதாவது, அதை பற்றி பெண்களுக்கு இருக்கும் கண்ணோட்டம் ஆண்களை விட வித்தியாசமானது. அநேக நேரம், அவளுக்கு பிடிக்கவில்லை என்றாலும் “நான் அவனை நேசிக்கிறேன் ஆகவே அவனோடு பாலியல் உறவு கொள்கி்றேன்” என்று நியாயப்படுத்துவார்கள். ஏன் அப்படி நடக்கிறது? இப்படி ஒரு சொல் உண்டு: “பெண்கள் அன்பை பெறுவதற்காக பாலியல் உறவை உபயோகப்படுத்துகிறார்கள்; ஆண்கள் அன்பை பயன்படுத்தி பாலியல் உறவை அடைகிறார்கள்.”

அது இப்படியாக நடக்கிறது: ஒரு நாள் அந்த பையன் என்னை திருமணம் செய்துக்கொள்வான் என்று பெண்கள் கற்பனை செய்கின்றார்கள்; ஒரு பையன் அந்த பெண்ணுடன் என்னவெல்லாம் செய்தேன் என்று தான் நண்பர்களிடம் பகிர்ந்துக்கொள்வதை கற்பனை செய்கின்றான். நாள்கள் செல்ல, அவள் செய்வது சரி என்று ஏதோ ஒன்று அவளுக்குள் சொல்லுகிறது, ஆனால் அவன் செய்வது சரி அல்லவென்று ஏதோ ஒன்று அவனுக்குள் சொல்லுகிறது. ஏன்? சரீரப்பிரகாரமான சிற்றின்பதிற்காக மட்டுமல்ல, இப்போது அது அவனுக்கு “நான் ஒரு ஆண்” என்ற உணர்வை தருகின்றத்தினால். ஆனால் ஒரு பெண்ணை ஏமாற்றுவதில் ஆண்மை என்ன?

நான் இப்போது கண்டுகொண்டது என்னவென்றால், ஒரு பெண்ணை கனமாக நடத்தும்போது, நீங்கள் உங்களையே கனமாக நடத்துகிறீர்கள். ஏன்? ஏனென்றால் ஒரு நாள் உங்களுக்கு ஒரு மனஸ்தாபம் உண்டாகும்; அந்த மனஸ்தாபம் அந்த சிற்றின்பத்தை விட அதிக நாட்கள் உங்கள் உள்ளத்தில் இருக்கும். ரோப் ராய் என்ற படத்தில், அந்த நடிகர் இப்படி சொல்லுகிறார், “கனம் என்பது ஒரு மனிதன் தனக்கு தானே அளிக்கும் வெகுமதி.” உங்கள் உள்ளத்தில் நேர்மையானத்தென்று நீங்கள் எண்ணுகிறததை அந்த பெண்ணுக்கு செய்து (அதாவது அந்த பெண்ணுக்கு நன்மையானதாக இருக்கிறதா), அவளை கனப்படுத்தும்போது, நீங்கள் உங்களையே கனப்படுத்துகிறீர்கள் மற்றும் நீங்கள் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க இருக்கிற மனஸ்தாபத்தில் இருந்து தப்பித்துக்கொள்வீர்கள்).

#3. அவள் யாரோ ஒருவரின் மனைவி.

நான் சொல்வதின் அர்த்தம் இதுவே: நான் உறவுக்கொண்ட அநேக பெண்கள் இப்போது வேறு ஆண்களோடு திருமணம் முடித்து வாழ்கின்றனர். நான் என்னை அந்த ஆண்களின் இடத்தில் வைத்து பார்க்கும்போது, நான் செய்ததை செய்திருக்க கூடாது என்று நினைத்து வருந்துகிறேன். உண்மையில், என் மூக்கை நானே குத்தவேண்டும் என்று நினைக்கிறேன்.

இப்படியே, நான் திருமணம் செய்யும்போது, யாரோ என் மனைவியை இப்படி நடத்தினார்கள் என்றதை கேட்க நான் விரும்பமாட்டேன். உங்களை பற்றி என்ன? யாரோ ஒருவர் உங்கள் மனைவியிடம் இப்படி நடந்துக்கொள்வது உங்களுக்கு விருப்பமா? ஒரு பெண் தோழி உங்களுக்கு இருந்து, நீங்கள் இப்படி உணர்ந்தீர்கள் என்றால், ஒரு நாள் உங்கள் மனைவியை குறித்து இப்படி எண்ணுவது எவ்வளவு அதிகமாக இருக்கும்.

இன்னும் ஒரு படி முன் சென்று பார்ப்போம். அவள் ஒருவரின் மகள். அது என் மகளாக இருந்தால் எப்படி? அல்லது என் தங்கையாக இருந்தால் எப்படி? ஒரு பையன் அவளை தவறாக நடத்துவதை விரும்புவேனா? இப்போது நான் பெண்களை வேறு கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கிறேன். அவர்கள் யாரோ ஒருவரின் பிற்கால மனைவி, ஒருவரின் மகள், தங்கை,…

#4. பாலியல் உறவு என் மிக சிறந்த உறவுகளை கொன்றுப்போட்டது.

உதாரணமாக, நான் கல்லூரியில் படிக்கும்போது எனக்கு பிடித்தமான, என் கனவு பெண்ணான ஒரு பெண் இருந்தால். அவளோடு இருந்த ஒரு நேரமும் துக்கமாக நான் இருந்ததே இல்லை. நாங்கள் சரியாக “பொருந்தினோம்.” கொஞ்ச நாட்கள் சென்ற பின், நான் அவளை பாலியல் உறவுகொள்ள அழைத்தேன், பின்பு நாங்கள் அதில் ஈடுபட்டோம்.

மிக சீக்கிரத்தில் எங்கள் உறவின் நோக்கமே அந்த பாலியல் உறவாக மாறிவிட்டது. அவளை வேறொரு நிலையில் அறிவதை நான் நிறுத்திவிட்டேன். ஆகையால், நாங்கள் இன்னும் நெருக்கமாவதற்க்கு பதிலாக, இரண்டு திசையில் விலக துடங்கினோம். “பாலியல் உறவு என் மிக சிறந்த உறவுகளை கொன்று போட்டது” என்று நான் சொன்னதின் அர்த்தம் இதுவாகும். ஜனங்கள் வெவ்வேரு நிலைகளில் உறவுகொள்ள முடியும்—உணர்ச்சி அளவில், மனதளவில், சரீரப்பிரகாரமாக, மற்றும் ஆவிக்குரியவிதத்தில். ஆனால் நானும் என் பெண் தோழியும் சரீரப்பிரகாரமாக அதிகமாக உறவுகொள்ள துடங்கின பிறகு, அது எங்கள் உறவின் மற்ற எல்லா பகுதிகளையும் பாதித்தது. அதன் விளைவாக, எங்கள் உறவு கீழ்நோக்கி செல்ல துடங்கினது. நாங்கள் (நான்) பாலியல் உறவு கொள்ள திருமணம் வரை காத்திருந்தேன் என்றால், நாங்கள் ஒன்றாக இருந்திருப்போம்.

இது என் வாழ்க்கையில் மட்டுமல்ல, மற்ற அநேகரின் வாழ்க்கையில் உள்ள உறவுகளிலும் இப்படி நடந்ததை நான் பார்த்திருக்கிறேன். இதற்க்கு ஒரு காரணம் உண்டு என்று நான் நினைக்கிறேன். அடுத்து நான் அதை விவரிக்கிறேன்.

#5. திருமணத்திற்க்கு முன் உள்ள பாலியல் உறவு மற்ற உறவுகளை அழித்துவிடுகிறது.

ஒருமுறை, ஒரு பெண்ணுடன் நான் பாலியல் உறவில் ஈடுபடும்போது, இரண்டு காரியங்கள் நடந்தது. இப்போது நான் திரும்பி பார்க்கும்போது, அது ஒருமுறை அல்ல நான் அப்படி செய்யும் எப்போதுமே அப்படி நடந்தது, ஆனால் அதை பற்றி எனக்கு அப்போது அதிகமாக தெரிந்திருக்கவில்லை. அவ்விரண்டும் என்னவென்றால்:1) அந்த பெண்ணை குறித்த மரியாதையை நான் இழந்துபோனேன் (ஆனால் அதை செய்ய விரும்பவில்லை என்றாலும்); மற்றும் 2) அவள் என்னை நம்புவதில்லை (அவளும் அதை செய்ய விரும்பவில்லை என்றாலும்).

இது ஏன் நடந்தது என்று எனக்கு தெரியாது, ஆனால் அது அப்படி ஆயிற்று என்று எனக்கு தெரியும். ஒருவேளை, அது “நம் அமைப்பில்” அப்படியாக நிருவப்பட்டிருக்கிறதாகும். ஆனால் ஒன்று நிச்சயம்: எனக்கு மட்டும் இப்படி நடக்கவில்லை. இது அநேகருக்கு அநேக முறை நடந்ததை நான் பார்த்திருக்கிறேன். திருமணத்துக்கு முன் பாலியல் உறவுக்கொண்ட அநேகர் திருமணத்திற்கு பின் அநேக பிரச்சனைகளை சந்திப்தை நான் பார்த்திருக்கின்றேன். அவர்கள் மரியாதை மற்றும் நம்பிக்கை இழந்தவர்களாக திருமணம் செய்துகொள்கிறார்கள். ஆனால் திருமணம் செழிப்பாக இருக்க இவ்விரெண்டும் மிகவும் அவசியம்.

ஒரு புதிய தம்பதியரை எனக்கு தெரியும். அவர்கள் மாதத்தில் ஒருமுறை பால் உறவு கொள்வதே அரிது. அதனால், அவன் அவளுக்கு மரியாதை செலுத்துவதில்லை, அது அவளுக்கு தெரியும், மற்றும் அவள் அவனை நம்புவதில்லை, ஆகையால் அவளை அவனுக்கு விட்டுகொடுப்பதும் இல்லை. இது மிகவும் சங்கடமான ஒன்று, மற்றும் சர்வசாதாரணமான ஒன்று. ஆனால் இதை பற்றி யாரும் வெளியே பேசுகிறது இல்லை. திருமணத்திற்கு முன் பால் உறவு கொண்ட தம்பதியினருக்கு நடக்கும் இந்த வேதனையான விஷயத்தை படங்கள் மற்றும் தொலைகாட்சியில் காண்பிப்பதில்லை. இது நடக்கிறது, ஆனால் இந்த மோசமான நிலையை பற்றி பேச யாரும் விரும்புவதும் இல்லை.

#6. என் மனைவியோடு பால் உறவுகொள்ளும் வரை காத்திருப்பதினால் என் திருமணத்தில் நல்ல பாலியல் உறவு இருக்கும் என்று அர்த்தமாம்.

ஏன்? நாங்கள் திருமணம் செய்துக்கொள்ளும்போது, எனக்கு அவள் மேல் அதிக மரியாதை இருக்கும் மற்றும் அவள் என்னை அதிகமாக நம்புவாள். ஒன்றை நான் கற்றுக்கொண்டேன்: ஒரு பெண் ஒரு பையனை நம்பாதபட்சத்தில், அவளை அவனுக்கு முழுமையாக விட்டுகொடுக்கமாட்டாள். உள்ளத்தில், அவனோடு வாழ்வது அவளுக்கு சந்தோஷமாக இருப்பதில்லை.

இது இப்படி நடக்கிறது: “பெண்கள் அன்பை பெறுவதற்காக பாலியல் உறவை உபயோகிப்பதினாலும்; ஆண்கள் அன்பை பயன்படுத்தி பாலியல் உறவை அடைகிறதினாலும்,” ஒரு தம்பதியினர் திருமணத்திற்கு முன் பால் உறவில் ஈடுபடுகின்றார்கள். அந்த உறவை பற்றிகொள்ள பெண்ணானவள் இப்படி செய்கிறாள். உறவைவிட அதிகமாக பால் உறவின் இன்பம் வேண்டும் என்பதற்காக ஒரு ஆண் இப்படி செய்கிறான். திருமணத்திற்கு பிறகு, ஒரு பெண்ணுக்கு வேண்டியதை பெற்றுக்கொள்கிறாள்: அது என்னவென்றால், அந்த ஆணின் அர்ப்பணிப்பு. ஆகையால், அவள் பால் உறவை பயன்படுத்தி அதை பெற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் இப்போது இல்லை. கல்யாணத்திற்கு முன் அவளோடு அவன் பால் உறவு கொண்டதினால் உள்ள வருத்தத்தை அவள் மனதில் வைத்திருப்பதினால், இப்போது அவளுக்கு பாலியல் உறவில் விருப்பமற்றவளாக மாறிவிடுகிறாள். மற்றும் அந்த ஆண் திருமணத்திற்கு முன் பால் உறவில் ஈடுபட்டதினால், தன் மனைவியை ஒரு பொக்கிஷமாக எண்ணுவதில்லை. என்றாலும் அவனுக்கு இப்போதும் பால் உறவுக்கொள்கிறான், ஆனால் அது அவன் மனைவியோடு முழுமையாக இணையும் அனுபவத்திற்காக அல்ல. அது வெறும் பாலியல் உறவு மட்டுமே; அதை அவள் அறிந்துகொள்கிறாள். ஆகையால் அவர்கள் திருமணத்தில் அது வேண்டா வெறுப்பாக உள்ள உறவாக மாறிவிடுகிறது.

நான் ஏதோ கதை சொல்லுகிறேன் என்று நினைக்காதீர்கள். நான் இப்போது கல்லூரி படிப்பை முடித்தவுடன் மற்றும் என்னை சுற்றி அநேகர் திருமணம் செய்துக்கொள்ளுகின்றார்கள். ஆனால் இந்த உண்மையை நான் நடைமுறையில் இப்போது பார்க்கிறேன். பாடம் இதுவே: பால் உறவு கொள்ள திருமணம் வரை காத்திருப்பதினால், அந்த ஆண் தன் மனைவி மீது அதிக மரியாதை உள்ளவனாக இருப்பான் மற்றும் அந்த பெண் தன் கணவன் மீது அதிக மரியாதை உள்ளவளாக இருப்பாள். ஆதலால், அவர்கள் ஒருவரை ஒருவர் அதிகமாக கணப்படுத்தி அதிகமாக நேசிப்பதினால், அவர்கள் இடையே சிறந்த பாலியல் உறவு எப்போதுமே இருக்கும்.

#7. மற்ற பெண்களோடு பாலியல் உறவு கொள்ளாததினால் என் திருமணத்தில் சிறந்த பாலியல் உறவு இருக்கும்.

ஏதோ ஒரு “சாதாரணமானது” என்று நாம் அழைத்தாளும், பாலியல் உறவு என்பது ஒரு மர்மமான ஒன்று; அது ஜனங்கள் நடுவில் ஒரு ஆழ்ந்த உறவை உண்டுபன்னுகிறது. பிரச்சனை இதுவே: நான் அதிகமாக மற்ற பெண்களோடு இணைந்தால், என் வரப்போகிற மனைவியினிடம் கொஞ்சமாக தான் இணைய முடியும். அது ஒரு பசை டேப் போன்றது—ஒரு பொருளிின்மேல் ஒட்டி அதை மீண்டும் எடுத்து மற்ற பொருளின் மேல் ஒட்டி, இப்படியே செய்துகொண்டிருந்தால், பின்னர் அது ஒட்டுகின்ற தன்மை குறைந்து விடும். பின்பு, அது எங்கேயும் ஒட்டுவதில்லை.

நான் மற்ற பெண்களோடு இணைந்தால், திருமணத்திற்கு பின் என் மனைவியோடு சரியான விதத்தில் இணையாமல் போய்விடுவேன். நான் அவளை விரும்பத்தக்க அளவு விரும்பாமல் இருந்துவிடுவேன். அதனால் நான் அவளை நேசிப்பதும் குறைந்துவிடும். நான் எந்த அளவுக்கு ஒவ்வொரு நாளும் வரப்போகிற என் மனைவிக்கு உண்மையாக இருப்பேனோ, அந்த அளவுக்கு அவளோடு என் உறவு மிக சிறந்ததாக இருக்கும்.

இது ஒரு வேடிக்கையான காரியம்: நம் கலாச்சாரம் வேசித்தனத்தை எதிர்கிறது ஆனால் திருமணத்திற்கு முன் உள்ள, அநேகருடன் செய்யும், பாலியல் உறவை அந்த அளவுக்கு எதிர்ப்பதில்லை. திருமணத்திற்கு முன் உறவுவைக்கும் பாலியல் உறவும் ஒரு விதத்தில் வேசித்தனம் தான். வேசித்தனம் ஒரு திருமண உறவை எப்படி பாதிக்குமோ, அந்த விளைவுகளை தான் திருமணத்திற்கு முன் உண்டாகும் பாலியல் உறவும் விளைவிக்கும். ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என்ற உறவை அது பாதிக்கிறது.

#8. நாங்கள் “பாலியல் ரீதியில் ஒத்துப்போகிறோமா” என்று பார்க்க ஒரு பெண்ணுடன் நான் படுக்கவேண்டியதில்லை.

ஒரு உறவை பூரணப்படுத்துவதில் பாலியல் உறவு ஒரு பங்கு வகிக்கிறது, ஆனால், அது மட்டும் தான் மிக முக்கியமானதல்ல. இதை நான் கண்டுகொண்டேன். உங்கள் உறவில் உள்ள மற்ற எல்லா பகுதிகளும் நன்றாக கிரியை செய்துகொண்டிருந்தால், இது ஒரு சரியான பகுதியாக இருக்கும். உங்கள் உறவின் மற்ற எல்லாம் நல்லதாக இருந்தால், உங்கள் பாலியல் உறவும் நல்லதாக இருக்கும்.ஆகவே நானும் என் மனைவியும் பாலியல் உறவில் ஒத்துப்போவோம் என்று அறிய நான் அவளோடு படுக்கவேண்டிய அவசியம் இல்லை. மற்ற எல்லாம் சரியாக இருந்தால்,பாலியல் உறவும் சரியாக தான் இருக்கும்.

இங்கு வேறு ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை. நான் வேறு ஒரு காரியத்தையும் கண்டுகொண்டேன்: ஒரு உறவின் முக்கிய அம்சமாக பால் உறவை நீங்கள் வைத்தால், அது இன்பமற்ற ஒன்றாக மாறிவிடும், பால் உறவை நீங்கள் மிக நுண்ணியமாக பார்த்து அதன் அடிபடையில் மற்ற எல்லாவற்றையும் நியாயப்படுத்தி பார்த்தால், அந்த உறவு தோற்றுப்போய்விடும். அது ஒரு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டதுபோல ஆகிவிடும். விடுதலையாக வேண்டிய ஒன்றில் நீங்களே சிறைப்பிடிக்கப்பட்டதுபோல மாறிவிடும்.

ஆனால், மற்ற எல்லாவற்றிற்கும் கவனம் செலுத்தி, பால் உறவு தான் முக்கிய நோக்கமாக இல்லை என்றால், நீங்கள் உங்கள் வாழ்க்கையின் பால் உறவை மிக சிறப்பாக அனுபவிக்க முடியும். அதை வெளியரங்கப்படுத்தவேண்டிய அவசியம் உங்களுக்கு இருப்பதில்லை. கல்லூரியில் படிக்கும் வயதில் பாலியல் உறவு என் வாழ்க்கையில் இல்லாதிருந்தால், நான் அதே நோக்கத்துடன் இருந்திருக்கமாட்டேன். ஆகவே தான் திருமணம் வரை காத்திருப்பது மிக சிறந்தது என்று நான் நினைக்கிறேன்.

#9. பால் உறவை விட மிக சிறந்ததை நான் கண்டுகொண்டேன்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும்: “ஓ, சரி” என்றல்லவா? ஆனால், அதுதான் உண்மை. மற்றும், ஒருவிதத்தில், பால் உறவை விட மேன்மையானது ஒன்று இருக்கிறது என்று அதன் மூலமாகவே கண்டுக்கொண்டேன். அந்த ஒன்று, ஒரு பொருள் அல்ல, அது ஒரு நபர். அது தேவன்.

இதை கொஞ்சம் கேளுங்கள். அதற்கும் இதற்கும் சம்மந்தம் இல்லாதது போல தோன்றலாம். ஆனால் முழுமையாக பார்க்கும்போது எல்லாம் புரிந்துகொள்ள முடிகிறது. அது மனித அமைப்பிலே உள்ளளது. ஒவ்வொறு தனிப்பட்ட மனிதனும் இப்படியாக அமைக்கப்பட்டுள்ளான். ஒருவர் சொன்னதுபோல, “எல்லா மனிதர்களுக்குள்ளும் தேவன் மட்டுமே நிறைவு செய்ய முடிகிற ஒரு வெற்றிடம் இருக்கிறது. அதை தேவனால் மட்டுமே நிறைவாக்க முடியும்.”

அதனால்தான், ஜனங்கள் வேலைகளை, வாழ்க்கை துணைகளை, ஃபேஷன், மற்ற எல்லாவற்றையும் மாற்றுகின்றனர். நாம் முழுமையான நிறைவு பெறவேண்டும் என்ற தேடுதல், நாம் எதிர்பார்க்கிற காரியங்கள் (அல்லது நபர்கள்) அந்த நிறைவை தர முடியாததினால் நாம் சோர்ந்துபோகிறோம். அதனால் நாம் அதை தூக்கி எறிந்துவிட்டு, மற்ற ஒன்றை (அல்லது மற்ற ஒருவரை) அடைய பார்க்கிறோம். அதில் நாம் எதிர்பார்க்கிற நிறைவை அடைய முடியும் என்று நினைக்கிறோம். ஆனால் பிரச்சனை என்னவென்றால், நாம் தேவனிடம் வரும் வரை அதை கண்டடையவே மாட்டோம். ஏனென்றால் அவர் ஒருவர் மட்டும்தான் அந்த நிறைவை தர முடியும்.

தேவன் நம்மை அதிகமாக நேசிக்கிறபடியால், அவரால் மட்டுமே நாம் முழுமையான திருப்தி அடையவேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அவர் நமக்கு சிறந்ததை தர விரும்புகிறார். அந்த சிறந்தது அவர்தான். தேவனை விட எதுவும், யாரும் முக்கியமானது அல்ல. அது உண்மை என்று எனக்கு தெரியும். ஏனென்றால் நானாகவே அதை கண்டுகொண்டேன். பொருட்களை வாங்குவதில், பாலியல் உறவுகளில் சந்தோஷப்படுவது, மற்றும் என் வாழ்வில் நிறைவை கண்டுகொள்ள நான் எடுத்த எல்லா முயற்சிகளுக்கு பிறகும் கூட அந்த வெற்றிடம் நிரம்பவில்லை. ஆனால் தேவனை என் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டேன். அப்போது என் வாழ்க்கையின் வெற்றிடம் முற்றுப்பெற்றது. இயேசு சொன்னார், “என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்” (யோவான் 6:35). இந்த வார்த்தைகள் என் வாழ்க்கையில் நிஜமானது. தேவனின் உறவில் நான் வந்தபோது, என் வாழ்க்கையில் இருந்த அந்த வெற்றிடம் நிறைவடைந்தது. அதன் பிறகு நான் வெருமையாக உணர்ந்தது இல்லை.

#10. காத்திருக்க தேவன் என்னை பெலப்படுத்தினார்.

நான் பாலியல் உறவுகளில் ஈடுபட்டு அநேக வருடங்கள் ஆயின. நான் திருமணம் வரை முற்றிலுமாக காத்திருந்தேன் என்று சொல்ல எனக்கு விருப்பம் உண்டு, ஆனால் அப்படி என்னால் சொல்ல முடியாது. எனக்கு அநேக மனஸ்தாபங்கள் உண்டு (மற்றும், நான் ஏற்கனவே சொன்னது போல, அந்த சிற்றின்பங்களை விட என் மனஸ்தாபங்கள் என் மனதில் அதிக நாட்கள் இருந்தது). நான் பெண்களை நடத்தின விதத்தை பற்றி மனஸ்தாபம் உண்டு. நான் திருமணம் செய்துகொண்டால், என் திருமணம் நிலைக்குமா இல்லையா என்ற கவலை எனக்கு உண்டு. ஆனால் நான் என் வாழ்க்கையில் செய்த எல்லாவற்றையும் என் பிற்காலத்தை குறித்த கவலைகளையும் தீர்ப்பதற்க்கு தேவன் எனக்கு உதவி செய்தார். அவர் என்னை மாற்றிக்கொண்டு இருக்கிறார் மற்றும் அவர் என் வாழ்க்கையின் பலப்பகுதிகளை மாற்றிவிட்டார்.

அதுவும் அல்லாமல், பால் உறவு கொள்ள திருமணம் வரை காத்திருக்கவும் அவர் எனக்கு பெலனை தந்திருக்கிறார். ஆம், அநேக சமயங்களில் அது கஷ்டமாக இருந்தது, ஆனால் தேவன் என் வாழ்க்கையில் பெரியவராக இருந்து அதை மேற்கொள்ள கிருபை செய்தார். ஒவ்வொரு நாளும், வாரமும், வருடமும் செல்லும்போது, நான் காத்திருந்ததினால் எனக்கு சிறந்த மற்றும் உறுதியான திருமண வாழ்க்கை உண்டு என்று நான் அறிவேன். மற்றும் ஆணாக, நான் இந்த முக்கியமான விஷயத்தில் தேவனை சார்ந்திருப்பதினால், தேவனோடு எனக்கு நல்ல உறவு உண்டு.

எங்கே ஆரம்பிப்பது?

உறவுகளில்—ஒரு கணவனாக மற்றும் தகப்பனாக—நீங்கள் வெற்றிகரமாக இருக்கவேண்டும் என்றால், உங்களில் ஆரம்பியுங்கள். சரியான மனைவியை கண்டடைவது அல்லது சரியான பிள்ளைகளை கொண்டிருப்பது விஷயம் அல்ல. சிறந்த உறவுக்கு திறவுகோல் நீங்கள் தான். மட்டும் உங்களுக்கு இருக்கவேண்டிய முக்கியமான உறவு—உங்கள நல்ல கணவனாக மற்றும் தகப்பனாக மாற்றும் ஒரு உறவு—என்னவென்றால், அது தேவனோடுள்ள உறவு மட்டுமே.

பாலியல் உறவை, அன்பை, உறவுகளை உண்டுபன்னினவர் தேவனே. இவை எல்லாவற்றையும் நாம் சந்தோஷமாக அனுபவிக்கும்படிக்கே உண்டுபன்னினார். மற்றும் அதை வடிவமைத்த விதத்தை நாம் கைக்கொண்டால், எல்லாவற்றையும் முழுமையாக அனுபவிக்க முடியும். தேவன் ஒரு “நீதி கர்த்தா” அல்ல என்பதை கண்டுகொண்டேன். அவர் ஒரு காரணமில்லாமல் “இதை செய்யுங்கள்” “இதை செய்யாதீர்கள்” என்று சொல்வதில்லை. அவர் இதை செய்யாதீர்கள் என்று சொன்னால் (உதாரணமாக, திருமணம் வரை பால் உறவு கொள்ளகூடாது என்று சொன்னால்), அவர் தான் அதிகாரி என்று எனக்கு காண்பிக்க அப்படி சொல்வதில்லை. அது எனக்கு நன்மை என்று அறிந்ததினால் அப்படி சொல்லுகிறார். ஒரு ஆணாக எப்படி அவர் என்னை உருவாக்கி இருக்கிறார் என்று அவருக்கு தெரியும், எனக்கு எது நன்மையானது என்று அவருக்கு தெரியும், மற்றும் எனக்கு முழு நிறைவை தருவது எது என்றும் அவருக்கு தெரியும்.

தேவனை தனிப்பட்ட முறையில் அறிவது

இயேசு கிறிஸ்து மனிதனாக பூமிக்கு வந்த தேவன் என்று வேதம் சொல்லுகிறது. “அந்த வார்த்தை மாம்சமாகி…நமக்குள்ளே வாசம்பண்ணினார்.” சுருக்கமாக, தேவன் எப்படிப்பட்டவர் என்பதை இயேசு கிறிஸ்து வெளிப்படுத்தினார்.

ஆகவே, அவரோடு நாம் எப்படி உறவை ஆரம்பிப்பது?

தேவன் நம்மை உண்மையாக நேசிக்கிறார் மற்றும் அவரை நாம் அறிய வேண்டும் என்றும் விரும்புகிறார்…ஆனால் ஒரு பிரச்சனை இருக்கிறது. இப்போது, நாம் தேவனோடு தொடர்புகொள்ள தடையாக இருப்பது நமது பாவமே (தேவனையும் மற்ற ஜனங்களையும் பூரணமாக நாம் நேசிக்காத குறையாகும்).

ஆகவே இயேசு கிறிஸ்து (“மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன்”) நம் பாவங்களை எல்லாம் அவர் தோலின்மேல் சுமந்து நமக்காக சிலுவையில் மரிக்க தாமே ஒப்புக்கொடுத்தார். நாம் முற்றும் மன்னிக்கப்படவும், முற்றும் அவரால் அங்கீகரிக்கப்படவும் அவர் அப்படி செய்தார். அவர் மிக சிறந்த பலியாக தம்மையே நமக்காக ஒப்புக்கொடுத்து, அடிக்கப்பட்டார், பரிகாசம்பன்னப்பட்டார், சாட்டையால் அடிக்கப்பட்டார், சிலுவையில் அடிக்கப்பட்டார். மூன்றாம் நாளில் அவர் மரித்தோரில் இருந்து எழுந்தார். அவர் தம்மை பலியாக கொடுத்தப்படியினால், நம் வாழ்க்கையில் அவரை அழைக்க வேண்டும் என்று விரும்பகிறார்.

இயேசு கிறிஸ்து ஒரு பூரண புருஷனாக பூமியில் வாழ்ந்தார். ஜனங்கள் அதற்கு அவரை அதிகமாக பாராட்டுவதில்லை, என்றாலும் அது உண்மை. அவரை உங்கள் வாழ்க்கையில் அழைக்கும்போது, ஒரு மனிதனாக எப்படி இருக்க வேண்டும் என்று அறிந்திருக்கும் ஒருவரை அழைக்கிறீர்கள். நீங்கள் உண்மையான ஒரு மனிதனாக, வாழ்க்கையில் நிறைவு பெற்றவனாக, மற்றவர்கள் வாழ்க்கையில் விலை உயர்ந்தவனாக (ஹாலிவுட் படங்களில் காண்பிப்பது போல அல்ல) மாற உதவி செய்வார்.

ஒரு உண்மையான மனிதன் எப்படி இருப்பான்? அவன் ஓநாயை போல (தனக்குரியதை மட்டும் தேடுகின்ற ஒருவனாக) இருப்பதில்லை. கிறிஸ்துவோடுள்ள உறவில் நீங்கள் வளரும்போது, உண்மையான மனிதனாக இருப்பது என்றால் என்னவென்று அதிகம் அதிகமாக கண்டுகொள்வீர்கள். மற்றும் நீங்கள் பெண்களை பார்க்கும் விதம் மற்றும் அவர்களை நடத்தும் விதத்தை கிறிஸ்து மாற்றுவார்.

என்றென்றும் நிலைத்திருக்கும் கிறிஸ்துவோடுள்ள உறவை நீங்கள் ஆரம்பிக்க முடியும். “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” (யோவான் 3: 16). விசுவாசம் என்பது நம்பிக்கை. உங்கள் நிமித்தமாக கிறிஸ்து பலியானார் என்பதை நீங்கள் நம்பி அதை சார்ந்துகொண்டால், உங்களுக்கு நித்திய ஜீவன் கிடைக்கும்—தேவனோடுள்ள அந்த உறவு இப்போது ஆரம்பிக்கப்பட்டு, உங்கள் வாழ்க்கையின் கடைசி வரை இருக்கிற ஒன்றாக மாறும். இதுவே உங்கள் இதயத்தின் விருப்பமாக இருந்தால், உண்மையாக தேவனிடம் நீங்கள் பேச இந்த கீழ் காணும் வார்த்தைகள் உங்களுக்கு உதவும்:

அன்புள்ள தேவனே, நான் பாவி என்று நான் அறிக்கை செய்கிறேன். என் பாவங்களை நீர் சிலுவையில் சுமந்ததற்க்காக உமக்கு நன்றி. உமது மன்ணிப்பைய் நான் பெற்றுக்கொள்கிறேன். உம்மோடு உறவுகொள்ள விரும்புகிறேன். என் வாழ்க்கையில் நீர் என் ஆண்டவரும் இரட்சகருமாக வாரும். நான் எப்படிப்பட்ட மனிதனாக இருக்கவேண்டும் என்று நீர் விறும்புகிரீரோ அப்படியே என்னை மாற்றும்.

 நான் என் வாழ்வில் இயேசுவைக் கேட்டேன்(சிலப் பயனுள்ளத் தகவல்கள்ப் பின்வருமாறு)...
 நான் என் வாழ்வில் இயேசு வருமாரு வேண்டலாம்,மேலும் முழுமையாக விளக்குங்கள்
 எனக்கு ஒருக் கேள்வி உண்டு...
இந்தக் கட்டுரையைப் பகிர  

TOP