வாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.
வாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.

இயேசு மற்றும் இஸ்லாம்

இஸ்லாமியத்தைப் பின்பற்றுகிறவர்கள் மற்றும் பிறர், இயேசுவை குறித்துக் கேட்கக்கூடிய ஆறு கேள்விகளை இங்குக் காணலாம்.

இது இயேசுவை குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என நினைப்பவர்களுக்குரிய மிகுந்த மதிப்பிற்குரிய படைப்பாகும். சவாலாக இல்லை மற்றும் எந்த விதத்திலும் எந்த ஒரு மதத்தினரையும் விமர்சிப்பதற்காகவும் இல்லை.

இந்தக் கட்டுரையில் பதிலளிக்கப்பட்டுள்ள ஆறு கேள்விகளைக் கீழே காணலாம்:

  1. வேதாகமமானது அதனுடைய மூல அசல் தன்மையில் இருந்து மாற்றப்பட்டுள்ளதா?
  2. ஒரு மதம் மற்ற மதமாக மாறும் என்று தேவன் சொன்னாரா: யூதமார்க்கம், அதன் பின் கிறிஸ்தவம், அதன் பின் இஸ்லாம்?
  3. தேவனுக்குக் குமாரன் இருக்கிறார் என்று சொல்லுவது தேவ தூசனம் இல்லையா?
  4. இயேசு சிலுவையில் மரித்தாரா?
  5. இயேசு சிலுவையில் மரித்தாரே ஆனால் தேவன் மூன்று நாள் மரித்தாரா?
  6. இயேசுவை ஏன் தீர்க்கதரிசி என்று சொல்லக்கூடாது?

1. இயேசு மற்றும் இஸ்லாம்: வேதாகமம் தேவனுடைய வார்த்தையா? இது மாற்றப்பட்டிருக்கிறதா? அல்லது காலப்போக்கில் சீரழிந்துவிட்டதா?

அறிமுகமாக வேதாகமத்தில் சில வசனங்களைப் பார்க்க முடிகிறது: “வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.”1

தேவனுடைய வார்த்தை ஒழிந்துபோவதில்லை. இதனுல் சொல்லப்பட்டவைகள் அனைத்தும் முடிவுரை அதன் நித்தியத்திலே நிறைவேறும். “வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.”2

மேலும் வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது: தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக.”3 எல்லா வேதவாக்கியங்களும் தேவனால் அருளப்பட்டிருக்கிறது.

மற்றும் “புல் உலர்ந்து பூ உதிரும்: நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும்.”4

நாம் நம்மிடத்திலே கேட்க வேண்டியது தேவன் அவருடைய வார்த்தையைப் பாதுகாக்க வல்லவரா? தேவன் மேல் குறிப்பிட்ட இந்த வார்த்தைகளை நிறைவேற்ற போதுமானவராக இருப்பரேயானல், அவருடைய வார்த்தை ஒழிந்துபோவதில்லை மற்றும் நிறைவேறாமல் போவதில்லை.

எதுவும் மாறவில்லை அவைகள் எல்லாம் வதந்தியே.

குரான் வேதாகமத்தில் மற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லவில்லை. அதற்கு முரணாகத் தகவல்களைத் தருகிறது. இது தோரா மற்றும் வேதாகமத்தை மதிக்கிறது. இதனில் தோரா மற்றும் சாபுர் (பழைய ஏற்பாட்டுச் சங்கீதம்) மற்றும் இஞ்சில் (புதிய ஏற்பாடு) அநேக முறை குறிப்பிடப்பட்டுள்ளது.

கிறிஸ்துவுக்குப் பின் 600 ஆண்டுகள் கழிந்து 6ம் நூற்றாண்டிலே இஸ்லாம் உருவெடுத்த போது வேதாகமம் உண்மை என்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.

நீங்கள் கேட்கலாம் 6ம் நூற்றாண்டிலிருந்து வேதாகமம் மாறி இருக்கிறதா? என்று. இல்லை. நாம் செய்ய வேண்டியது முந்தைய நாட்களில் இருந்த வேதாகமத்தோடு தற்போதுள்ள வேதாகமத்தை ஒப்பிட்டு பார்ப்பதே.

100 ஆண்டுகள் குரானுக்கு முன்னரே கி.பி. 300ல் முழு வேதாகமம் இருந்ததை நாம் பார்க்க முடியும். இதனில் ஒன்றை லண்டன் அருங்காட்சியகத்திலும், வாட்டிகனிலும், மற்றும் பல பகுதிகளிலும் நாம் இதைக் காணலாம். கி.பி300 ஆண்டு வேதாகமத்தோடு இப்பொழுதுள்ள வேதாகமத்தை ஒப்பிட்டுப் பார்ப்போமேயானால் இப்பொழுது நம்மிடம் இருக்கும் வேதாகமத்திற்கும் அதற்கும் எந்த வித்தியாசமுமில்லை.

கையினால் எழுதப்பட்ட புதிய ஏற்பாட்டு பகுதிகளின் 25000 பிரதிகள் இன்றைக்கும் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? வரலாற்று வல்லுநர்கள் இந்த மூல பிரதிகளை ஒப்பிட்டு பார்த்து இன்றைக்கு நம்மிடமிருக்கும் புதிய ஏற்பாட்டு 99.5மூ மாற்றமில்லாததாக இருக்கிறது என்று உறுதிசெய்திருக்கின்றனர். மாற்றமே இல்லை.

(5மூ வித்தியாசமும் எழுத்துப்பிழையே தவிர எந்த ஒரு ஆர்த்த பிழையும் அல்ல)

மேலும் நீங்கள் அன்மையில் தொல்பொருள் ஆராட்சியாளர்களின் கண்டுபிடிப்புக்களான சவக்கடல் சுருள்களைக் குறித்து அறித்திருப்பீர்கள். இவைகள் சவக்கடலின் வடமேற்கு கரையில் கும்ரான் குகைகளில் கண்டுபிடிக்கப்பட்டன.

ஆராச்சியாளர்கள் இன்றைய வேதாகமத்தை அவைகளோடு ஒப்பிட்டு பார்த்து இரண்டும் 100மூ ஒற்றுமை இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

ஒருவரும் உங்களிடம் புதிய ஏற்பாடு அல்லது வேதாகமம் அதன் அசல் தன்மையிலிருந்து மாறியிருக்கிறது என்று சொல்ல அனுமதிக்காதீர்கள். வரலாற்று ரீதியாக அது சரியல்ல.

வேதாகமத்தில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை.

சரி, ஏன் நான்கு சுவிசேஷப் புத்தகங்கள் இருக்கிறது? அவைகள் வித்தியாசமான வசனங்கள் இல்லையா, ஒருவருக்கு ஒருவர் வித்தியாசப்படவில்லையா?

ஆம், நான்கு சுவிசேஷப் புத்தகங்கள் இருக்கிறது: புதிய ஏற்பாட்டில் மத்தேயு, மாற்கு, மற்றும் யோவான் என நான்கு சுவிசேஷப் புத்தகம் இருக்கிறது. இது வேதாகமம் ஒருபோதும் தவறான தகவல்களைத் தறவில்லை என்பதைக் காண்பிக்கிறது. இவை இயேசு என்ன செய்தார் மற்றும் என்ன சொன்னார் என்பதை வெளிப்படுத்தும் நான்கு புத்தகங்கள் மற்றும் நான்கு சாட்சிகள்.

ஒன்று அல்லது இரண்டு அல்லது நான்கு நபர்கள் தெரு முனையில் நடந்த ஓர் கார் விபத்தைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறார்கள் என்று யூகித்துக்கொள்வோம். அந்த நான்கு நபர்களும் தங்களின் சாட்சியை நீதிமன்றத்திற்கு எழுதி கொடுக்கும் படியாகக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அவர்கள் நான்கு பேரும் தங்கள் கண்டதை குறித்து ஒரே விதமான விளக்கம் மற்றும் சாட்சியை ஒரு வார்த்தை தவறாமல் எழுதுவார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நிச்சயமாக இல்லை. அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் சொந்த நடையில் அவன் அல்லது அவள் கண்டதை எழுதுவார்கள். இதுவே இந்தச் சாட்சிகள் இயேசுவை கண்ணால் கண்ட சாட்சிகளாகத் தங்களுடைய நடையில் எழுதினார்கள்.

சாட்சிகளில் சட்டமுறைகள் நூற்;றாண்டுகளாக இடைப்பட்டுவந்தன. மற்றும் ஒருவர் வார்த்தைக்குப் புறம்பாக மற்றவருடைய வார்த்தை இருக்க முடியாது. அநேகமுறை ஒன்றுக்கும் மேற்பட்ட சாட்சிகள் அவசியம். பழைய ஏற்பாட்டிலிருந்து புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்ட வசனங்களை இங்கே காணலாம். “சகல காரியங்களும் இரண்டுமூன்று சாட்சிகளுடைய வாக்கினால் நிலைவரப்படும்.”5

இயேசுவை குறித்துச் சாட்சிகொடுத்தது இந்த நான்கு சாட்சிகள் மட்டுமல்ல அநேக சாட்சிகள் இருக்கின்றன. யாக்கோபு, பவுல், பேதுரு, மற்றும் புதிய ஏற்பாட்டில் மற்ற புத்தகங்களை எழுதிய பலர்.

யோவான் சொன்னார், “எங்கள் கண்களினாலே கண்டதும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிறவைகளையே நாங்கள் எழுதுகிறோம்.”6 அவர்கள் இயேசுவை கண்ட சாட்சிகள். எனவே அவர்கள் கண்டதை அவர்கள் எழுதியிருக்கிறார்கள்.

மற்ற எல்லா மொழிகளிலும் எழுதப்பட்ட வேதாகமம் மற்றும் மொழிபெயர்க்கப்பட்ட வேதாகமத்தில் ஏதேனும் மாற்றம் இருக்கிறதா?

வேதாகமம் எபிரேய மற்றும் கிரேக்க பாஷைகளில் எழுதப்பட்டது. எந்தக் காலத்தில் அச்சிடப்பட்ட வேதாகமமாக இருந்தாலும் அது மூல பாஷையான எபிரேயம் மற்றும் கிரேக்கத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதே ஆகும். (உதாரணமாக வேதாகமம் ஆங்கிலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை. அவைகள் மூல பாஷையிலிருந்தே மொழிபெயர்க்கப்பட்டன.)

சில வேதாகமங்கள் மொழிப்பெயர்ப்பு அல்ல பொழிப்புரை செய்யப்பட்டிருக்கிறது. அவைகள் பொழிப்புரை செய்யப்பட்டதாக அடையாளப்படுத்தப்படுகிறது. மொழிப்பெயர்ப்பில் எபிரேய மற்றும் கிரேக்க பாஷையில் சொல்லப்பட்டது எதுவோ அதையே மொழிப்பெயர்ப்புச் செய்யப்பட்டிருக்கிறது.

எபிரேயம் மற்றும் கிரேக்க பாஷையிலுள்ள வேதாகமங்கள் ஆயிரக்கணக்கான பாஷைகளில் மொழிப்பெயர்ப்புச் செய்யப்பட்டிருக்கிறது. ஏனென்றால் இந்த உலகத்திலிருக்கும் எல்லா நபர்களும் தேவனுடைய இரட்சிப்பின் நற்செய்தியை அறிய வேண்டும் என்பது தேவனுடைய சித்தமாக இருக்கிறது.

வேதாகமத்தை மொழிப்பெயர்ப்பது கடினம் அல்ல. வேதாகமத்தின் சில பகுதிகள் கவிதை நடையிளுள்ளது. (நீதிமொழிகள், உன்னதப்பாட்டு, சங்கீதம்). வேதாகமத்தின் மையப்பகுதியானது நம்முடைய அன்றாட வாழ்வோடு தொடர்புடைய எளிய மொழிநடையில் இருக்கிறது. இது மொழிபெயர்க்க கடினமானது அல்ல. உண்மை என்னவென்றால் வேதாகமமானது நேரடியானது மற்றும் எளிமையானது இதுவே வேதாகமத்தை விசுவாசிப்பதற்கான காரணமும் ஆகும்.

சில உண்மை கதைகள்.

என்னுடைய மகன் என்னைத் தொலைப்பேசியில் அழைத்தார். அவன் அப்பொழுது மற்றொரு தேசத்தில் நெடுஞ்சாலையின் மத்தியில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கியிருந்தான். அவனுடைய கார் மற்றொரு காரினால் இடிக்கப்பட்டு 180 டிகிரி கோணத்தில் திரும்பி அந்த நெடுஞ்சாலையின் மத்தியில் தவறான திசையை நேக்கி திரும்பி இருந்தது.

அவன் சொன்னான், அப்பா எனக்கு எந்த ஆபத்துமில்லை. ஆனால் இப்பொழுது நான் என்ன செய்வது?

அவன் பிரச்சனையில் இருக்கிறான். அவனுக்கு உதவி தேவை. இந்த நேரத்தில் நான் அவனுக்குக் கவிதை நடையில் இருக்கும் செய்தியை அனுப்புவதற்கு இது தகுந்த நேரம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நான் மனப்பாடம் செய்து வந்திருந்த கவிதையைச் சொல்ல முடியுமா? இல்லை.

இங்கு ஜான் இதைத் தான் நீ செய்ய வேண்டும் என்று நான் அவனுக்கு எளிதாகச் சொல்ல வேண்டும். நீ பெரிய பிரச்சனையிலிருக்கிறாய் இதைச் செய்தால் நீ தப்பித்துக்கொள்ளலாம். இதுவே வேதாகமத்தினுடைய மையப் பகுதியாக இருக்கிறது. மனித இனம் பிரச்சனையில் சிக்கிக்கொண்டு நரகத்திற்கு நேராகச் சென்றுக்கொண்டிருக்கிறது. எல்லோரும் பாவம் செய்து தேவ மகிமை அற்றவர்களானார்கள். எனவே நமக்கு இரட்சிப்பை குறித்த எளிமையான செய்தி தேவை. நம்முடைய பாவ மன்னிப்பை நாம் பெறுவது எப்படி, இப்பொழுது ஆரம்பித்து நித்தியம் வரை இருக்கி நெருங்கிய ஜக்கியத்தைத் தேவனோடு ஏற்படுத்துவது எப்படி என்பதை வேதாகமம் நமக்குப் போதிக்கிறது. இது நம்முடைய வாழ்க்கையை மாற்றும் செய்தியாக இருக்கிறது.

2. இயேசு மற்றும் இஸ்லாம்;: ஒரு மதம் மற்றொரு மதமாக மாறும் என்று தேவன் சென்னாறா?

நாம் யூத மார்க்கத்திலிருந்து ஆரம்பித்து, அது கிறிஸ்தவ மதமாக மாறி, பின்னர் இஸ்லாமியமாக மாறும் என்பது தேவனுடைய நோக்கமா?

இல்லை. தேவன் என்றைக்கும் மாறாதவர். அவர் மதங்களை உருவாக்குவதில் ஈடுபாடு உள்ளவர் அல்ல.

ஆபிரகாமில் ஆரம்பித்து நம்மோடு ஐக்கியத்தை ஏற்படுத்திக்கொள்ளத் தேவன் தன்னை நமக்கு வெளிப்படுத்துவதில் தெளிவானவராகவே இருக்கிறார். ஐக்கியம் ஒரு மார்க்கம் அல்ல, ஆனால் நம்மோடு ஐக்கியப் படவே நம்மைத் தேவன் படைத்தார்.

ஆதாம் மற்றும் ஏவாளிடமிருந்து நாம் பார்ப்போம். அவர்கள் தேவனோடு நேரடியாகப் பேசக்கூடியவர்களாக இருந்தனர் மற்றும் அவர்களுடைய எல்லாத் தேவைகளும் சந்திக்கப்பட்டது.

சாத்தான் பாம்பின் ரூபத்தில் ஆதாம் மற்றும் ஏவாளுக்கு முன்வந்து அவர்களை இச்சித்தான். பரிதாபமாக அவர்கள் தேவனுக்குக் கீழ்படியாது சாத்தானை விசுவாசிப்பதை தெரிந்து கொண்டனர். அதன் விளைவாக ஆதாமும் ஏவாளும் தேவனுடைய ஐக்கியத்திலிருந்து பிரிந்து போனார்கள்.

உடனடியாகத் தேவன் சாத்தானோடு என்ன சொன்னார் என்று உங்களுக்குத் தெரியுமா? ஸ்திரீயின் பிள்ளை சாத்தானுடைய எதிரி என்று தேவன் சொன்னார். பிள்ளையின் குதிங்காலை நசுக்குவதன் மூலம் சாத்தானுக்குப் பாதி வெற்றி கிடைக்கும் என்று தேவன் சொன்னார். ஆனால் அந்தப் பிள்ளை இறுதியாகச் சாத்தானுடைய தலையை நசுக்குவார்.

இதை இங்கு வாசிக்கலாம்:

அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டு மிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்னைத்தின்பாய்; உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.”7

சாத்தான் ஸ்திரீயின் பிள்ளையின் குதிங்களை நசுக்குவதன் மூலம் குறுகிய கால ஜெயத்தைப் பெறுவான்.

சரித்திரம் முழுவதிலும் மனுஷனால் அல்லாமல் ஸ்திரீக்கு பிறந்த ஒரே ஆண் மகன் யார்? அவர் மரியாளின் குமாரனாகிய இயேசு, சரிதானே?

சாத்தான் ஸ்திரீயின் பிள்ளையின் குதிங்காளை நசுக்குவான். ஆனால் அவர் சாத்தானுடைய தலையை நசுக்குவார். தலையை நசுக்குவதே சர்ப்பத்தைக் கொல்வதற்கான ஒரே வழியாகும்.

இதனுடைய அர்த்தம் என்ன? இதற்கு ஒரே ஒர் அர்த்தம் தான் இருக்கிறது.

சிலுவையில் இயேசுவின் கரம் மற்றும் கைகளில் ஆணி அடிக்கப்பட்ட போது சாத்தான் எக்காலமிட்டான். ஆனால் இயேசு சாபத்தின் எக்காலத்தைச் சாத்தானின் மீது வெளிப்படுத்தினார். சிலுவையில் இயேசு சாத்தானை வெற்றிசிறந்தார். இயேசு எல்லா மனிதர்களுடைய பாவத்திற்கும் கிரையம் செலுத்தினார், எல்லாருக்கும் பாவமன்னிப்பு அளித்தார் மற்றும் தேவனிடத்தில் திரும்பி வந்து ஐக்கியப்படுவதற்கான வழியை ஏற்படுத்திகொடுத்தார்.

இந்த பிள்ளையைக் குறித்துத் தீர்க்கதரிசி ஏசாயா எழுதியிருக்கிறார்:

“எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது?

இளங்கிளையைப்போலவும்இ வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமில்லைஇ சௌந்தரியமும் இல்லை; அவரைப் பார்க்கும்போதுஇ நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.

அவர் அசட்டைபண்ணப்பட்டவரும்இ மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்இ துக்கம் நிறைந்தவரும்இ பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டுஇ நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம்.

மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டுஇ நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோஇ அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டுஇ சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.

நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டுஇ நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்துஇ அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.”8

தீர்க்கதரிசி ஏசாயா யாரை குறித்துப் பேசுகிறார்? இது மிகத் தெளிவாக இருக்கிறது. அவர் இயேசுவை குறித்துப் பேசுகிறார். இது எப்பொழுது எழுதப்பட்டது? ஏறத்தாழ இயேசு கிறிஸ்துவுக்கு 600 ஆண்டுகளுக்கு முன்பு.

நாம் ஏசாயாவில் வாசித்தது போல ஆரம்பத்திலிருந்து ஆயிரம் ஆண்டுகளாகத் தேவன் சொன்னது என்னவென்றால், இயேசு வருவார் அவர் மரிப்பார் என்பதே. நீங்கள் தேவனைக் குறித்து நினைக்கிறது என்ன, கடைசி நேரத்தில் தன்னுடைய எண்ணத்தை மாற்றியிருப்பார் என்பதா? ஆயிரம் ஆண்டுகள் வாக்குதத்தத்தைக் கொடுத்து அதன் பின் இயேசு நமக்காக மரிக்க வேண்டாம் என்று தேவன் தன்னுடைய மனதை மாற்றியிருந்தால்? தேவன் தன்னுடைய மனதை மாற்றுபவர் அல்ல.

3. இயேசு மற்றும் இஸ்லாம்: தேவனுக்குக் குமாரன் இருக்கிறார் என்று சொல்லுவது தேவ தூசனம் இல்லையா?

தேவன் ஆவியாக இருக்கிறார். இயேசு தேவனுடைய குமாரன் என்பது ஆவிக்குரிய அர்த்தத்திலேயே அன்றி மாம்சத்தின் படி அல்ல.

“நீ சீடோஸ் -ன் குமாரான் என்றால்” அந்த நபர் லீபனோனிலிருந்து வந்தவர் என்று அர்த்தம். அல்லது எகிப்திலிருந்து வந்தவர்கள் என்றால் “ நீ நேய்;ல் -ன் குமாரன்.” என்று சிலர் சொல்வார்கள். எனவே இயேசு தேவனுடைய குமாரன் என்று சொல்லும் போது அவர் தேவனிடத்திலிருந்து வந்தர் என்று அர்த்தம். இது ஒரு பட்டம் போன்றது. தேவதூதன் மரியாளிடம் “உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும் என்றான்.” இது ஒரு பட்டம். தேவன் எந்தப் பெண்ணுடனும் உறவு வைத்து கொண்டவர் என்பதைக் கிறிஸ்தவர்கள் விசுவாசிப்பதில்லை.

ஏசாயா சொன்னார்: “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும் ; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தர், வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.”9

அவர் தேவன், தேவனான அவர் மரியாளின் மூலம் மனுஷரானார். அவர் தேவன் அதே நேரத்தில் கன்னியாகிய மரியாளின் வயிற்றில் பிறந்த குமாரன்.

ஏன் கன்னியாகிய மரியாளின் வயிற்றில் இயேசு பிறக்க தேவன் அனுமதித்தார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

ஸ்திரீயின் வயிற்றில் பிறந்தார் என்றால் அவர் ஆதாம் ஏவாளிடமிருந்து பாவ சுபாவத்தைப் பெறாதவராய் அவர் ஆணுக்கும் பெண்ணுக்கும் பிறக்கவில்லை. ஆதாமும் ஏவாளும் பாவத்தில் வீழ்ந்த போது அவர்கள் தலைமுறை தலைமுறையாய் அவர்கள் பிள்ளைகளிலிருந்து நாம் வரை அந்தப் பாவ சுபாவம் கடந்து வந்திருக்கிறது.

நாம் அனைவரும் பாவிகளாய்ப் பிறந்திருக்கிறோம். நாம் தேவனுடைய வழியில் அல்ல நம்முடைய சொந்த வழியில் காரியங்களைச் செய்யும் மனபாண்மையோடே பிறந்திருக்கிறோம். நாம் எல்லோரும் பாவம் செய்கிறோம். அதனால் தான் தீர்க்கதரிசி தாவீது கதரி அழுதான், “பாவத்தில் என் தாய் என்னைக் கர்ப்பம்தரித்தாள்.” நாம்மெல்லோரும் பாவத்தோடு பிறந்திருக்கிறோம். நாம் பாவிகளாகவே வாழ்கிறோம் எனவே நமக்கு இரட்சகர் தேவை.

இயேசு நம்மை இரட்சிக்க அவருக்கு வேறோரு தன்மைக்கு மாறவேண்டியது அவசியம். அவர் தேவனுடைய ஆவியினிடத்திலிருந்தும், பரிசுத்த ஆவியினிடத்திலிருந்தும் வந்திருக்க வேண்டும் மற்றும் பாவமற்றவராகவும் இருக்க வேண்டும். ஏசாயா சொன்னார், “அவர் வாயில் வஞ்சனை இருந்ததில்லை.” அவரிடத்தில் பாவமில்லை.

வேதத்தில் வாசிக்கிறோம், தேவன் முட்செடியின் நடுவிலே அக்கினிஜூவாலையாகத் தன்னை மோசேவுக்கு வெளிப்படுத்தினார். ஆபிரகாமோடு பரலோகத்திலிருந்து வருகிற சத்தமாகத் தன்னை வெளிப்படுத்தினார். தேவன் தன்னை நம்மோடு வெளிப்படுத்துவதற்காக மனித ரூபம் எடுக்கக் கூடாது என்று சொல்பவன் யார்?

இயேசு மற்றும் இஸ்லாம்: இயேசு சிலுவையில் மரித்தாரா இல்லையா?

தேவன் ஆபிரகாமை எப்படிச் சோதித்தார்? அவர் ஆபிரகாமுடைய குமாரனை பலிபீடத்தின் மேல் கிடத்தும் படி சொன்னார். அவர்கள் அந்த மலையின் மேல் ஏரிக்கொண்டிருக்கும் போது மகன் கேட்டான், “பலிக்கு ஆடு எங்கே?” அதற்கு ஆபிரகாம் “தேவன் அதைப் பார்த்துக்கொள்வார் என்றான். அவர் பலிக்கு ஆட்டு குட்டியை கொடுப்பார்.” தேவனும் ஆட்டுக்குட்டியை கொடுத்தார் ஆபிரகாம் அதைப் பலியிட்டான்.

தேவன் நமக்குக் கொடுக்கும் தொடர்ச்சியான செய்தியை பாருங்கள்.

தேவன் காப்பாற்றினார், அவர் ஒரு ஆட்டுக்குட்டியை கொடுத்து ஆபிரகாமின் மகனை காப்பாற்றினார்.

யாத்திராகமத்திலும் ஆட்டுக்குட்டியின் முக்கியதுவத்தைப் பார்க்கிறோம். யாத்திராகமத்திலே தேவன் எகிப்திலே தன்னுடைய ஜனங்களிடத்தில் எகிப்தியரை அடிப்பேன் என்று எச்சரித்தார். இதை விசுவாசிப்பவர்கள் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தைத் தங்களுடைய நிலைக்காலிலே பூச வேண்டும் சங்கார தூதன் வரும்போது இதைக் கடந்து சென்று அவர்களை மரணத்திலிருந்து பாதுகாப்பான். விசுவாச தேசத்தார் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலே இரட்சிக்கப்பட்டார்கள்.

லேவியராகமத்திலும் மற்றொரு ஆட்டுக்குட்டியை பார்க்கிறோம். தேவனை விசுவாசிப்பவர்களுக்காக ஆண்டுத் தோறும் ஒரு ஆட்டுக்குட்டியை ஆசாரியன் எடுத்துப் பாலயத்திற்குப் புறம்பே அதை ஜனங்களுடைய பாவத்திற்காகப் பலியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டனர். ஒவ்வொரு வருடமும் ஜனங்கள் ஆட்டுக்குட்டியினால் இரட்சிக்கப்பட்டார்கள்.

பின்பு யோவான் ஸ்நானகன் மக்களிடம் இயேசுவை குறித்துச் சொன்னதை நாம் கோட்டிருக்கிறோம்: “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி!” அவரை விசுவாசிப்பவர்கள் அனைவரையும் இரட்சிக்கிற ஒரு ஆட்டுக்குட்டி.

ஆபிரகாம் தேவனுடைய சத்தத்தைக் கேட்காமல் இருந்திருந்தால் அல்லது இது தேவனுடைய சத்தம் என்பதை விசுவாசியாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? ஆம், அவனுடைய குமாரன் கொல்லப்பட்டிருப்பான்!

ஜனங்கள் தேவனை விசுவாசிக்காமல் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தைத் தங்களுடைய நிலைக்கால்களில் பூசாமல் இருந்திருந்தால்?

இந்தக் கேள்விக்கு வரலாம். ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன்பு தேவனுடைய ஆட்டுக்குட்டியாகிய இயேசு சிலுவையில் அறையப்பட்டு அவருடைய வாழ்க்கையை நமக்காகக் கொடுத்தார். நமக்குத் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது, “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.”11

“இல்லை, அவரைச் சிலுவையில் அறையவில்லை. அவர் மரிக்க வில்லை.” என்று நீங்கள் சொன்னால் என்ன அர்த்தம். தேவனுடைய ஆட்டுக்குட்டியானவர் நம்முடைய மற்றும் இந்த உலகத்திலுள்ள அனைவருடைய பாவத்திற்குக் கிரயம் செலுத்தும் படி பலியிடப்பட்டார். அவர் கொல்லப்படவில்லை இந்தத் தேவனுடைய ஆட்டுக்குட்டி என்னுடைய பாவத்திற்காக மற்றும் என்னுடை மன்னிப்பிற்காக மரிக்கவில்லை என்றால் என்ன அர்த்தம்?

5. இயேசு மற்றும் இஸ்லாம்: இயேசு சிலுவையில் மரித்தாரே ஆனால் மற்றும் மூன்று நாள் அடக்கம் பண்டப்பட்டாரே ஆனால், தேவன் மூன்று நாள் மரித்தார் என்று அர்த்தமா?

இது ஒரு நல்ல கேள்வி. உதாரணம் இதற்குப் பதில் சொல்ல உதவும்.

நம்மிடத்தில் ஒரு பூ ஜாடி இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதனில் பூ இல்லை மற்றும் தண்ணீரும் இல்லை. இதில் முழுவதும் காற்றுதான் இருக்கிறது. இந்தப் பூ ஜாடிக்கு வெளியே உள்ள காற்றுக்கும் அதன் உள்ளே இருக்கும் காற்றுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? இந்தப் பூ ஜாடியின் உள்ளே இருக்கும் காற்றுக்கு உருவம் இருக்கிறது சரியா? வெளியே இருக்கும் அதே காற்றுதான் ஆனால் அது பூ ஜாடிக்கு உள்ளே இருப்பதினால் அதற்கு வடிவம் இருக்கிறது.

அந்தப் பூ ஜாடியை எடுத்து சுவற்றில் விசி உடைத்து விட்டால், அதன் உள்ளே இருக்கும் காற்றுக்கு என்னவாகும்? அது மரித்துபோகுமா? இல்லை, காற்று மரிப்பதில்லை. அந்தப் பூ ஜாடி ஆயிரம் துண்டுகளாக நொறுங்கி இருக்கலாம் ஆனால் அந்தக் காற்றுக்கு உருவம் இழந்ததே தவிரே வேறு ஒன்றும் நடக்க வில்லை.

இயேசு சிலுவையில் மரித்த போது, அவருடைய சரீரம் மரித்தது, ஆனால் இயேசுவின் ஆவி, தேவனுடைய ஆவி ஒரு போதும் மரிப்பதில்லை. தேவன் இயேசுவில் மனித சாயலானார். அவர் மனிதனுடைய உருவம் எடுத்தார் ஆனால் அவர் எப்பொழுதும் மனிதனாக மட்டுமே இருக்கவில்லை.

சிலுவையில் அவர் நம்முடைய பாவத்திற்காகக் கிரயம் செலுத்தி அவருக்கும் நமக்கும் இடையே இருக்கும் தடைகளைத் தகர்த்து போட்டார். அவருடைய மரணத்தினாலே நாம் தேவனோடு சமாதானம் அடைந்தோம். நாம் குற்றவுணர்வுள்ளவர்களாக இருந்தாலும், தேவ ஆட்டுக்குட்டியானவர் நமக்காகப் பாடுபட்டதாலே தேவனுடைய நீதிக்கு பாத்திரவானாக இயேசு நம்மை மாற்றினார். இயேசு முழுமையாகக் கீழ்படிந்து தன்னுடைய ஜுவனைக் கொடுத்ததாலே தேவனுடைய அன்பு பூரணமாக விளங்கிற்று.

“இது செவ்வையானது அல்ல” என்று நீங்கள் சொல்லலாம். நீங்கள் சரி தான். இயேசு நமக்காக மரிப்பதற்கு நாம் தகுதியானவர்கள் அல்ல. ஆனால் நமக்கு இதுவே தேவனுடைய தீர்வு. இது எப்படி இருக்க வேண்டும் என்று நாம் தேவனிடத்தில் சொல்ல முடியுமா?

நாம் நம்முடைய பாவத்திற்காக மரிக்காத படி இயேசு நம்முடைய மரணத்திற்கான கிரயத்தைச் செலுத்தினார். நாம் அவரோடு கூடி ஐக்கியப்பட வேண்டும் அவரை நேசிக்க வேண்டும் மற்றும் நித்திய ஜுவனைப் பெற வேண்டும் என்பதே அவருடைய விருப்பம்.

இன்னும் ஒரு கதை. இயேசு நமக்கு என்ன செய்தார் என்பதைப் புரிந்துகொள்ள ஒர் உண்மை கதை.

ஒரு நேர்மையான மற்றும் லஞ்சமே வாங்காத ஒரு நீதிபதி இருந்தார். அவர் உண்மையும் நேர்மையுமானவர். ஒரு பெண் பிடிக்கப்பட்டு அவரது முன்னால் கொண்டுவரப்பட்டாள். அவளுக்கு மரணதண்டனை அல்லது அவள் செலுத்த முடியாத பணத்தை அவள் தண்டணையாகச் செலுத்த வேண்டும் என்பதே அவளுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை.

நீ குற்றவாளியா அல்லவா? என்று நீதிபதி கேட்டார்.

அவள் உரத்த குரலில், “மதிப்பிற்குரிய நீதிபதியே, இந்தத் தொகையைச் செலுத்த என்னால் முடியாது. எனக்குப் பணம் செலுத்த முடியாது. தயவு செய்து என்மேல் தயவுகூறுங்கள்.” என்று கூறினாள்.

அதற்க்கு நீதிபதி நீ குற்றவாளியா, அல்லவா? நீ அறிக்கை செய்வாயா? என்று அல்லவா நான் உன்னைக் கேட்கிறேன், என்று கூறினார்.

“மதிப்பிற்குரிய நீதிபதியே நான் குற்றவாளி தான்,” என்று கடைசியாக அந்த இளம் பெண் கூறினாள்.

அவர் சொன்னார், அப்படியானால் “நீ அதற்குரிய கிரயத்தைச் செலுத்து. மரணத் தண்டனை அல்லது தண்டனை பணத்தைச் செலுத்து.” என்று சொல்லி அவர் அந்த வழக்கை முடித்தார்.

அவள் கதறி அழுதாள் ஆனால் அவளை அந்தக் குற்றவாளி கூட்டிலிருந்து சிறைச்சாலைக்கு இழுத்து சென்றனர். அந்த நீதிபதி தன்னுடைய ஆடையைக் கழற்றி விட்டு நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்தார். அவர் பணம் செலுத்தும் இடத்திற்குக் கடந்து சென்று அவர் தன்னிடத்திலுள்ள எல்லாப் பணத்தையும் அந்தப் பெண்ணுக்காக மீட்புபணமாகச் செலுத்தினார். ஏன்? அவர் அந்தப் பெண்ணை மிகவும் நேசித்தார். அவள் அவருடைய மகள். அவர் அவரிடமிருந்த எல்லாவற்றையும் கொடுத்து தன்னுடைய மகளை மீட்டுக்கொண்டார்.

நீதிபதி தன்னுடைய ஆடையைக் கழற்றிய போது அவர் மற்ற மனிதர்கள் போலவே மாறுகிறார். இதையே இயேசுவும் செய்தார். அவர் பரலோகத்தை விட்டு வந்து தன்னுடைய மகிமையின் வஸ்திரத்தை கழைந்து நம்மைப் போலவே மனிதரானார். அவர் நமக்காக மரித்தார் அதனால் நம்முடைய பாவம் நம்மைக் குற்றம் தீர்க்காது மற்றும் நம்மைத் தேவனிடத்திலிருந்து என்றைக்கும் பிரிக்கவும் செய்யாது.

எல்லாத் தீர்க்கதரிசிகளும் இயேசு நாமக்காக வந்து நம்முடைய பாவங்களுக்காக மரிப்பார் என்று சொன்னார்கள். நித்திய ஜுவனைப் பெற மனுகுலத்தின் ஒரே நம்பிக்கை இயேசுவே.

ஆதாமுக்கும் ஏவாளுக்கும் நடந்ததைப் பார்க்கும் போது தேவன் சாத்தானிடத்தில் சொன்னார் ஸ்திரீயினுடைய வித்து உன்னுடைய தலையை நசுக்குவார் அதன் மூலம் முழு மனுகுலமும் இரட்சிக்கப்படும் என்று. இயேசுவினுடைய மரணம் மற்றும் உயிர்தெழுதல் சாத்தானுடைய வல்லமையை மேற்கொண்டது. இயேசு பாவத்தை, மரணத்தை மற்றும் தேவனிடத்திலிருந்து நாம் பிரிக்கப்பட்டதை மேற்கொண்டார். சாத்தானுக்குச் சாபத்தை உண்டுபண்ணினார்.

6. இயேசு மற்றும் இஸ்லாம்: இயேசுவை ஏன் தீர்க்கதரிசி என்று சொல்லக்கூடாது?

தேவன் ஒருவரே. உண்மையான தேவன் யார் என்பதை நாம் இங்கு அறிந்துகொள்ளலாம்:

தேவன் நித்தியமானவர் – அவர் எப்பொழுதும் இருக்கிறார், இப்பொழுதும் இருக்கிறார் மற்றும் எப்பொழுதும் இருப்பார்.
தேவன் பரிசுத்தமானவர் –, பழுதற்றவர், குற்றமற்றவர்.
தேவன் உண்மையானவர் – அவருடைய வார்த்தை எப்பொழுதும் நிலைக்கும், மாறாது, நம்பத்தகுந்த உண்மை
தேவன் இருக்கிறார் – எங்கும் இருக்கிறார், எப்பொழுதும் இருக்கிறார்.
தேவன் சர்வவல்லவர் – அவருடைய வல்லமைக்கு அளவு கிடையாது.
தேவன் சர்வவியாவி – அவர் எப்பொழுதும் எல்லாவற்றையும் குறித்துப் பூரண அறிவுடையவர்.
தேவன் சிருஷ்டிகர் – அவரை இன்றி எதுவும் படைக்கப்படவில்லை.

ஒரே ஒரு தேவன் இருக்கிறார். அவரைக் குறித்து மேல் சொல்லப்பட்ட அனைத்தும் உண்மையே. வேதாகமம் இதை உண்மையான தேவனுக்குரிய சுபாவமாக வெளிப்படுத்துகிறது எனவே இது நமக்குத் தெரியும். அவர் மனிதனுக்குத் தன்னை வெளிப்படுத்தும் படி தேர்ந்தெடுத்து அவரைக் குறித்த அனைத்தையும் நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.

இயேசுவும் தேவனுக்கு இருக்கும் இதே சுபாவத்தை உடையவராக இருக்கிறார் என்று வேதாகமம் வெளிப்படுத்துகிறது. அது போலவே தேவனுடைய ஆவியானவரும் இருக்கிறார். உதாரணமாக நித்தியத்தை எடுத்துக்கொள்வோம்.

வேதாகமம் இயேசுவை குறித்துச் சொல்கிறது, “அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று. உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.”12

மேலும், அவர் அதரிசனமான தேவனுடைய தற்சொரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர். ஏனென்றால் அவருக்குள்; சகலமும் சிருஷ்டிக்கப்;பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.”

ஒரே ஒரு தேவன் இருக்கிறார் என்றால் இயேசுவும் எப்படித் தேவனாக இருக்க முடியும்?

இந்தப் பூமியிலே நாம் முப்பரிமான உலகத்திலே வாழ்கிறோம். ஒவ்வொரு நபருக்கும் உயரம், அகலம், மற்றும் ஆழம் உண்டு. இரண்டு நபர்கள் ஓரே மாதிரி இருக்கலாம். அவர்களுக்கு ஒரே ரசனை இருக்கலாம் மற்றும் ஒரே வேலையிலும் இருக்கலாம். ஆனால் ஒரு நபர் முழுமையாக மற்றொரு நபராக இருக்க முடியாது. அவர்கள் தனித்தன்மையில் வேறுபட்டு காணப்படுவர்.

தேவன் இந்த முப்பரிமான உலகத்தின் வரையறைக்கு அப்பாற்பட்டவராக இருக்கிறார். அவர் ஆவியாக இருக்கிறார். அவர் முடிவற்றவர் மற்றும் புரிந்து கொள்ள முடியாதவர். எனவே தான் குமாரனாகிய இயேசு பிதாவை விட வித்தியாசமாக இருக்கிறார் ஆனாலும் ஒரே மாதிரியானவர்.

வேதாகமம் தெளிவாய்ச் சொல்கிறது: குமாரனாகிய தேவன், பிதாவாகிய தேவன் மற்றும் பரிசுத்த ஆவியாகிய தேவன். ஆனால் தேவன் ஒருவர் என்று வேதாகமம் தெளிவாய்ச் சொல்கிறது. நாம் கணித்ததைப் பயன் படுத்துவோமேயானால், 1+1+1=3 ஆகாது இது 1x1x1=1 ஆகும். தேவன் ஒருவரே.

ஏசாயா சொல்கிறார், “ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோஇ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்இ அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.” 14 இம்மானுவேல் என்பதற்கு “தேவன் நம்மோடு இருப்பார் என்று அர்த்தம்.”

இயேசுவை அறிந்து கொள்வது தேவனை அறிந்து கொள்வது என்று இயேசு சொன்னார். அவரைப் பார்ப்பவன் தேவனைப் பார்க்கிறான். அவரை விசுவாசிப்பது தேவனை விசுவாசிப்பது ஆகும்.

இயேசு இதைக் குறித்து என்ன சொல்கிறார் மற்றும் இயேசுவின் வாழ்க்கையை அறிந்துகொள்ள. “குருட்டு விசுவாசத்திற்கு அப்பால்” என்ற இந்தக் கட்டுரையைத் தயவு செய்து பார்க்கவும்.

எனினும் தேவனைக் குறித்து அறிந்து கொள்ள வேண்டிய அநேக காரியங்கள் இன்னும் இருக்கிறது. அவர் உன்னை நேசிக்கிறார் மற்றும் உன் மீது கரிசனை உள்ளவராக இருக்கிறார்.

“பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள். நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோலஇ நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால்இ என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள். என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும்இ உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.”15 என்று இயேசு சொல்கிறார்.

இயேசு நம்மை அழைக்கிறார். “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டுஇ என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுதுஇ உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார்.”16

தேவன் போதுமான முயற்சிகளைச் செய்திருக்கிறார்... இயேசு நமக்குப் புது மீட்பை வழங்குகிறார். நாம் அவருடைய அன்பை அனுபவித்திருக்கிறோம் மற்றும் தேவனைப் பிரியப்படுத்த புதிய உற்சாகம். இது பயத்தினால் அல்ல ஆனால் அவரை அறிவதினால் உண்டாகும் சந்தோஷத்தினால்.

இயேசுவின் சிஷர்களுல் ஒருவரான பவுல் இதை அனுபவித்தது மட்டுமல்ல இதைக் குறித்துச் சொல்கிறார்:

“மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்;லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.”17

இயேசு உங்களுக்கு என்ன தருகிறார் என்று தெரிந்து கொள்ள “குருட்டு விசுவாசத்திற்க்கு அப்பால்” என்ற இந்தக் கட்டுரையைத் தயவு செய்து பார்க்கவும்.

 கடவுளுடன் ஒரு உறவுத் தொடங்குவது எப்படி?
 எனக்கு ஒருக் கேள்வி உண்டு...

(1) மத்தேயு 5:18 (2) மத்தேயு 24:35 (3) 2திமோத்தேயு 3:16 (4) ஏசாயா 40:8 (5) 2கொரிந்தியார் 13:1 (6) 1யோவான் 1:1 (7) ஆதியாகமம் 3:14,15 (8) ஏசாயா 53:1-6 (9) ஏசாயா 9:6 (10) யோவான்1:29 (11) ரோமர் 5:8 (12) யோவான் 1:2,3 (13) கொலோசெயர் 1:15,16 (14) ஏசாயா 7:14 (15) யோவான் 15:9-11 (16) மத்தேயு 11:28-30 (17) ரோமர் 8:38,39

இந்தக் கட்டுரையைப் பகிர  

TOP