வாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.
வாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.

பாலியல் மற்றும் நெருக்கம்த் தேடல்

எப்படி நேசிப்பது மற்றும் நேசிக்கப்படுவது என்பதைக் கண்டுபிடித்தல். உண்மையான நெருக்கத்தை உங்களுடைய உறவில் அனுபவித்தல்...

- டிக் புர்நல்

டாக்டர். ஹென்ரி பிரண்ட், கோலிகேட் செலஞ் இதழில், ஜோடிகள் அவரைப் பார்க்க வரும் போது அங்கு நோய்க்குறி ஒத்திசைவு படிவம் காணப்படுவதாகக் கூறினார். “முதல் பாலுறவு உற்சாகமானதாக இருந்தது என்று அவர்கள் சொன்னார்கள். அதன் பின்பு என்னைக் குறித்து நான் வேடிக்கையாக நினைக்க ஆரம்பித்தேன் அதன் பின் என்னுடைய துணையைக் குறித்து நான் வேடிக்கையாக நினைக்க ஆரம்பித்தேன். நாங்கள் வாதிட ஆரம்பித்தோம் மற்றும் சண்டை போட்டோம் கடைசியாக உறவை முறித்துக்கொண்டேன். இப்பொழுது நாங்கள் எதிரிகள்.”

இந்த நோயை தான் நான் காலைக்குப் பின் நோய் என்று அழைக்கிறேன். எழுந்து பார்க்கிறோம் ஆனால் அந்த நெருக்கம் இல்லை. பாலுறவு இனி திருப்திகரமாக இல்லை மற்றும் எதை நாம் விரும்புகிறது இல்லையோ அதுவே நம்முடைய முடிவாக மாறுகிறது. இரண்டு சுயநலவாதிகள் தங்களுடைய சுய திருப்தியை நாடுவதே இதன் காரணம் ஆகும். உண்மையான அன்பு மற்றும் நெருக்கத்தை எளிதில் அடைந்து விட முடியாது மற்றும் நிலையில்லாத நிலையில் இருந்து நீங்கள் சமாதானத்தைத் தேடுகிறீர்கள்.

நெருக்கம் என்பது உடலுக்கு அப்பாற்பட்டது

நாம் ஒவ்வொருவருக்கும் நம்முடைய வாழ்க்கையில் ஐந்து முக்கியப் பகுதிகள் இருக்கிறது. நமக்குச் சரீரம், உணர்சி, மனம், சமூகம் மற்றும் ஆன்மீகம் இருக்கிறது. இந்த ஐந்து பகுதிகளும் ஒன்றோடு ஒன்று இசைந்து செயல்பட உருவாக்கப்பட்டது. இந்த நெருக்கத்தைத் தேடும் நமக்கு இதற்கான தீர்வு இன்றோ அல்லது நேற்றோ தேவை. நாம் உடனடியான மனநிறைவு நமக்குத் தேவை என்பதே முக்கியப் பிரச்சனையாகும். நம்முடைய உறவில் தேவையான நெருக்கம் கிடைக்காத போது நாம் உடனடியான தீர்வை எதிர்பார்க்கிறோம். எங்கு அதைத் தேடுவது? சரீரம், உணர்சி, மனம், சமூகம் மற்றும் ஆன்மீகத்திலா? இதனால் சரீரல்தில். மற்ற நான்கு பகுதிகளில் நெருக்கம் பெறுவதை விடச் சரீர பிரகாரமான நெருக்கத்தைப் பெறுவது எளிது. நாம் உடல் ரீதியான நெருக்கத்தை எதிர்பாலரோடு கூட ஒரு மணி நேரத்தில் பெற்றுவிடலாம். இது மற்றவருடைய ஒப்புக்கொள்ளுதல் சார்ந்தது. பாலுறவு ஒரு தற்காலிக நிவாரணத்தை உங்களுடைய மேம்போக்கான ஆசைக்குத் தரக்கூடும். சந்திக்கப்படாத ஆழமான தேவை இருக்கிறது.

சுகம் முடிவுக்கு வந்த உடன் என்ன செய்வது, அதிகப் பாலுறவு அதன் மீது இருக்கும் ஆசை குறையும்? இதைக் காரணப்படுத்த நாம் நாங்கள் நேசிக்கிறோம் உண்மையில் நேசிக்கிறோம் என்று சொல்வோம். ஆனால் நாம் இன்னும் குற்ற உணர்வுள்ளவர்களாகவும் மற்றும் சந்தோஷமற்றவர்களாகவும் இருக்கிறோம் என்பதை அறிந்துகொள்கிறோம். அமெரிக்காவில் ஒவ்வொரு வளாகத்திலும் ஆண்கள் மற்றும் பெண்கள் நெருங்கிய உறவுக்காகத் தேடி அழைகிறார்கள் மற்றும் ஒரு உறவில் இருந்து மற்றொரு நம்பிக்கைக்குக் கடந்து செல்கின்றனர். “இதுவே கடைசி முறை, இந்த முறை நான் நிறந்தரமான உறவை கண்டுக்கொள்ளப் போகிறேன்.”

பாலுறவு நமக்கு முக்கிய அவசியம் இல்லை என்பதை நான் விசுவாசிக்கிறேன். நெருங்கிய உறவே நமது முக்கியத் தேவை ஆகும்.

இன்றைய நாட்களில் நெருங்கிய உறவு என்கிற வார்த்தை பாலுறவோடு தொடர்புடையதாகவே கருதப்படுகிறது. ஆனால் இது அதை விட மேலானது. இது வாழ்க்கையின் மற்ற பகுதிகளோடு தொடர்புடையது ஆம், இது உடல் ரீதியானது ஆனால் சமூகம், உணர்வு, மனம், மற்றும் ஆன்மீகத்தோடு தொடர்புடையது. முழுவாழ்கையைப் பகிந்துக்கொள்வதே நெருங்கிய உறவு ஆகும். நமக்கு ஒருவரோடு ஒருவர் நெருக்கமாக இருக்க, ஒற்றுமையோடு இருக்க, ஒருவரோடு நம்முடைய வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ள நாம் எப்பொழுதாவது விரும்பியதில்லையா?

நெருங்கிய உறவை குறித்த பயம் - நேசிக்கபடுவதற்குப் பயம்?

மார்சல் ஹாட்ச் என்பவர் “உன்னுடைய காதல் பயம்” என்கிற புத்தகத்தை எழுதினார். நாம் அன்பை வெளிப்படுத்தும் தருணத்திற்காக, நெருக்கத்திற்காக மற்றும் மென்மைகாக ஏங்குகிறோம், ஆனால் அடிக்கடி முக்கியமான காலகட்டத்தில் அதைத் தவறவிடுகிறோம். நாம் நெருக்கத்தைக் குறித்துப் பயப்படுகிறோம். காதலை குறித்துப் பயப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறார். இதே புத்தகத்தில் ஹாட் சொல்கிறார், ஒருவரிடம் நீங்கள் அதிகமாக நெருங்கும் போது இங்கு அதிக வேதனைகள் உண்டாக வாய்ப்பு இருக்கிறது. இந்த வேதனைக்கான பயம் நம்மை நெருங்கிய உறவை கண்டுக்கொள்வதிலிருந்து திசை மாற்றி நடத்துகிறது.

தெற்கு இல்லிநோஸ் -ல் தொடர்சியான போதனைகளைப் போதித்தேன். ஒரு கூட்டத்திற்குப் பின்பு ஒரு பெண் என்னிடத்தில் வந்து நான் என்னுடைய காதலன் பிரச்சனையைக் குறித்து உங்களிடம் பேச வேண்டும் என்று சொன்னாள். நாங்கள் உட்கார்ந்தோம் அவள் தன்னுடைய பிரச்சனையை என்னிடம் பகிர்ந்துக்கொள்ள ஆரம்பித்தாள். சில நேரத்திற்குப் பின்பு அவள், தான் திரும்பவும் காயப்படாது இருக்கும் வண்ணம் தன்னுடைய தீர்மானங்களை எடுக்கப்போகிறதாகவும் சொன்னாள். அப்படி என்றால் நீ மீண்டும் காதலில் விழாதிருக்க முயற்சிசெய்கிறாய் என்று நான் அவளிடம் சொன்னேன். நான் தவறாகப் புரிந்துக்கொண்டேன் என்று நினைத்து அவள் திரும்பவும் பேச ஆரம்பித்தாள். இல்லை நான் அதைச் சொல்லவில்லை. நான் திரும்பவும் காயப்பட விரும்பவில்லை. என்னுடைய வாழ்க்கையில் மறுபடியும் எனக்கு வேதனை தேவையில்லை என்று சொன்னாள். அது சரி நீ உன்னுடைய வாழ்க்கையில் காதல் வேண்டாம் என்று நீ நினைக்கிறாய் என்று நான் சொன்னேன். வேதனை இல்லாத அன்பு என்று ஒன்று இல்லவே இல்லை. நீ ஒருவரை அதிகமாக நெருங்கும் போது அதனில் வேதனைக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

நீங்களும் உங்களுடைய உறவில் (100 சதவீகித மக்கள்) அநேக முறை காயப்படுத்தப்பட்டிருப்பீர்கள் என்பதை நான் கனிக்க முடியும். அந்தக் காயத்தை எப்படிக் கையாளுகின்றீர்கள் என்பது தான் கேள்வி? அந்த வலியை மறைக்க நான் சொல்வது போல நம்மில் அநேகர் இரட்டை வேடம் போட ஆரம்பிக்கிறோம். இங்குப் பார், நீ என்னிடம் நெருங்கி வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் நேசிக்க மற்றும் நேசிக்கப்பட விரும்புகிறேன்... ஆனால் ஒரு நிமிடம் நான் முன்னதாகவே காயப்படுத்தப்பட்டிருக்கிறேன். இல்லை இதைக் குறித்து எனக்குப் பேச விருப்பமில்லை. இதை நான் கேட்க விரும்பவில்லை.” நம்மிடம் மற்றவர்கள் கடந்து வந்து நம்மைக் காயப்படுத்தாது இருக்க நாம் நம்முடைய இருதயத்தைச் சுற்றி சுவரை எழுப்பி இருக்கிறோம். மற்றவர்களை வெளியே வைக்கும் அதே சுவர் நம்மை அதனுக்குள் வைத்துவிடுகிறது. முடிவு? தனிமை மற்றும் உண்மையான நெருக்கம் மற்றும் காதல் சாத்தியமில்லாததாக மாறிவிடுகிறது.

எது அன்பு?

அன்பு உணர்சிவசப்படுவதை விட மேலானது மற்றும் இது நல்ல உணர்வுகளை விட மேலானது. தேவன் எது அன்பு, பாலுறவு மற்றும் நெருங்கிய உறவு என்று சொன்னாரோ அதை நம்முடைய சமுதாயம் வெறும் உணர்சி மற்றும் உணர்வாக மாற்றிவிட்டது. தேவன் அன்பை குறித்து அதிகமாக வேதாகமத்தில் சொல்லியிருக்கிறார், குறிப்பாக 1கொரிந்தியார் 13-ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். தேவனுடைய அன்பு என்றால் என்ன என்கிற வரைமுறையை நீங்கள் புரிந்துக்கொள்ளும் படி நான்காம் வசனம் முதல் ஏழாம் வசனம் (1 கொரிந்தியர் 13:4-7) வரை இங்கு நான் தருகிறேன். தேவன் நாம் நேசிக்கப்பட வேண்டிய விதம் என்று சொல்லியிருக்கிற பிரகாரமாய் நாம் நேசிக்கப்பட்டால் இது நம்முடைய தேவையைச் சந்திக்கும்.

  • பொறுமையாக, கருணையோடு, மற்றும் பொறாமையில்லாமல் ஒருவர் உங்களுக்குப் பதிலளிக்கும் போது
  • பெறுமை மற்றும் மேட்டிமையில்லாமல் ஒருவர் இருக்கும் போது?
  • ஒருவர் முரட்டுத்தணமாக நடந்து கொள்ளவில்லை என்றால் அல்லது சுயத்தைச் சாராதவராகவும் நீங்கள் சொல்வதை எல்லாம் ஏற்றுக்கொள்பவராகவும் இருந்தால் எப்படி இருக்கும்?
  • உங்களுடைய தவறுகளைக் கணக்கில் வைத்துக்கொள்ளாதவராக ஒருவர் இருந்தால்?
  • ஏமாற்றுபவராக இல்லாமல், எப்பொழுதும் உங்களிடம் உண்மையுள்ளவராக இருந்தால்?
  • உங்களைப் பாதுகாப்பவராக, நம்புகிரவராகவும், எப்பொழுதும் உங்களுக்கு நல்லதை செய்பவராக மற்றும் மோதுதல் மத்தியிலும் உறவை காத்துக்கொள்ளுபவராக இருந்தால்?

இப்படிப்பட்ட அன்பு தான் நம்முடைய உறவி;ல் இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். இந்த அன்பு மற்ற நபரை மையமாகக் கொண்டதை நீங்கள் கவனித்தீர்களா. இது சுயத்தைச் சார்ந்தது அல்ல இது கொடுக்கக் கூடியது. யார் இப்படிப்பட்ட வாழ்க்கையை ஜீவிப்பது என்பதே முக்கியப் பிரச்சனை ஆகும்.

உண்மையான நெருங்கிய உறவுக்கு, நாம் முதலாவது அன்பை உணர வேண்டும்.

இந்த விதமான அன்பை உறவில் நாம் அனுபவிக்க வேண்டும் என்றால் முதலாவது தேவனுடைய அன்பை நேசிக்க வேண்டும். இந்த விதமான அன்பை நீங்கள் அனுபவிக்காதிருந்தால் உங்களால் தொடர்ந்து ஒருவர் மீது இந்த விதமான அன்பை செலுத்த முடியாது. உங்களை அறிந்த தேவன், உங்களைக் குறித்துச் சகலத்தையும் அறிந்த தேவன் உங்களைப் பூரணமாக நேசிப்பார்.

பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசி எரேமியாவின் மூலம் தேவன் சொல்கிறார், “அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன்” (எரேமியா 31:3). தேவன் உன்னை நேசிப்பது மாறப்போவதில்லை.

தேவன் நம்மை அதிகமாக நேசித்தார் அதனால் தான் இயேசு கிறிஸ்து நம்முடைய பாவத்திற்காக நாம் சுத்திகரிக்கப்படும் படி சிலுவையில் (பழமையான மரணத் தண்டணை முறை) அறையப்பட ஒப்புக்கொடுத்தார். வேதாகமத்திலே வாசிக்கிறோம், “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்”(யோவான் 3:16) தேவனிடத்திற்குத் திரும்பி அவருடைய பாவமன்னிப்பை ஏற்றுக்கொள்ளும் போது, நாம் அவருடைய அன்பை அனுபவிக்க ஆரம்பிக்கிறோம்.

தேவன் நமக்குச் சொல்கிறார், “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” (1 யோவான் 1:9). தேவன் நம்முடைய பாவத்தை மன்னிப்பது மட்டும் அல்ல அவைகளை மறக்கிறார் மற்றும் நம்மைச் சுத்திகரிக்கிறார்.

இப்படி நேசிக்கப்படுதல் என்றால் என்ன?

என்ன நாடந்தாலும் தேவன் நம்மைத் தொடர்ந்து நேசிக்கிறார். அநேக நேரங்களில் உறவுகள் மாற்றத்தினால், சேதத்தை உண்டுபண்ணும் விபத்து அல்லது பொருளாதார வீழ்ச்சி ஆகியவைகளால் முடிவுக்கு வந்து விடுகிறது. தேவனுடைய அன்பு நம்முடைய வெளித் தோற்றத்தை வைத்தோ அல்லது நாம் யார் என்பதையோ அல்ல நாம் என்ன செய்கிறோம் என்பதின் அடிப்படியிலே அல்ல.

தேவனுடைய அன்பு என்பது நம்முடைய சமுதாயம் எதை அன்பு என்று சொல்கிறதோ அதைவிட முற்றிலும் மாறுபட்டது என்பதை நாம் பார்க்கிறோம். இந்த அன்பின் அடிப்படையில் நாம் ஒரு உறவை நினைத்துப்பார்க்கலாமா? நாம் கேட்கும் போது தேவனுடைய மன்னிப்பு மற்றும் அவருடைய அன்பும் நம்முடையது என்று தேவன் சொல்கிறார். இது நமக்கு அவருடைய ஈவு. நாம் இந்த ஈவை மறுத்தால், உண்மையான நிறைவேறுதலை தேடுதல், உண்மையான நெருங்கிய உறவு மற்றும் உண்மையான வாழ்க்கையின் நோக்கத்திலிருந்து நம்மைத் துண்டித்துக்கொள்கிறோம்.

தேவனுடைய அன்பு நமக்குப் பதிலை தருகிறது. விசுவாசத்தோடும் மற்றும் அற்பணிப்போடும் அதற்கு நாம் பிரதியுத்திரம் கொடுக்கவேண்டும். வேதாகமம் இயேசுவை குறித்து இப்படியாகச் சொல்கிறது: “அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.” (யோவான் 1:12). தேவன் தம்முடைய ஒரே குமாரனாகிய இயேசுவை நம்முடைய ஸ்தானத்தில் மரிக்கும் படி அனுப்பிவைத்தார். ஆனால் இது முடிவு அல்ல. மூன்று நாளைக்குப் பின் அவர் மரணத்திலிருந்து உயிரோடு எழுந்தார். தேவனைப் போலவே அவரும் உயிரோடு இருக்கிறார் மற்றும் அவர் உங்களுடைய இருதயத்தில் தம்முடைய அன்பினால் நிறப்ப விரும்புகிறார். நீங்கள் அவரை ஏற்றுக்கொள்ளும் போது அவர் உங்களுடைய வாழ்க்கையில் மற்றும் உறவில் அவர் செய்வதைக் கண்டு ஆச்சரியப்படுவீர்கள்.

தேவனுடைய வார்த்தையில் இப்படி வாசிக்கிறோம், குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றார்” (யோவான்3:36). தேவன் நாம் இன்று மட்டுமல்ல ஆனால் நித்திய வாழ்க்கையைப் பெற வேண்டும் என்று விரும்புகிறார். நாம் அவரை நிராகரிப்போமானால் நாம் பாவத்தை முடிவாகப் பெறுவோம். அது என்னவென்றால் மரணம், மற்றும் அவரிடமிருந்து நித்தியமான பிரிவு ஆகியவையே.

இயேசு கிறிஸ்துவை நாம் ஏற்றுக்கொள்ளும் போது, நம்முடைய வாழ்க்கையில் அவரை ஏற்றுக்கொள்கிறோம் மற்றும் அவரை விசுவாசிக்கிறோம் அது நம்முடைய வாழ்க்கையைச் சமநிலை படுத்தும். தேவனை விசுவாசிப்பது தேவனுடைய பாவமன்னிப்பை நமக்குக் கிடைக்கச்செய்கிறது. மறைப்பது அல்லது நம்முடைய வழியில் செல்லுவது தேவையில்லை. அவர் நம்மோடு கூட இருக்கிறார். நாம் அவரோடு சமாதானமாய் இருப்போம்.

நாம் அவரை விசுவாசிக்கும் போது, அவரைச் சார்ந்து இருக்கிறோம். அப்பொழுது அவர் நம்முடைய வாழ்க்கையில் வாசம்பண்ண ஆரம்பிக்கிறார் மற்றும் அவரோடு நமக்கு நெருங்கிய உறவு ஏற்படும். அவருடைய பாவமன்னிப்பு நம்முடைய எல்லாப் பாவங்களையும், சுயத்தை மையாமான வாழ்க்கையையும் மற்றும் நமக்கு இருந்த அல்லது வரப்போகிற ஆழமான பிரச்சனை அல்லது போராட்டத்திலிருந்தும் நம்மை முழுமையாகச் சுத்திகரிக்கிறது.

வேதாகமம் முழுவதிலும் பாலுறவை பற்றிய தேவனுடைய செயல்பாடு மிகத் தெளிவாக இருக்கிறது. தேவன் பாலுறவை திருமணம் மற்றும் திருமணத்திற்காக மட்டுமே வைத்திருக்கிறார். இது நம்மைப் பிரிதாபமான நிலைக்குத் தள்ளுவதற்கு அல்ல, ஆனால் அவர் நம்முடைய இருதயத்தைப் பாதுகாத்துக்கொள்ள விரும்புகிறார். அவர் நமக்குப் பாதுகாப்பு அடித்தளத்தைக் காட்ட நினைக்கிறார், எனவே நாம் திருமணத்தில் நுழையும் போது நம்முடைய நெருக்கமானது தேவனுடைய அன்பு மற்றும் அவருடைய ஞானத்தின் அடிப்படையிலிருக்கும்.

நெருக்கமானது பாதுகாப்பான உணர்வினாலும் நேசிக்கப்படுகிறோம் என்கிற எண்ணத்தினாலும்; உருவாகிறது.

நாம் நம்மை இயேசுகிறிஸ்துவிடம் எப்பொழுது ஒப்படைக்கிறோமோ அப்பொழுது அவர் நமக்குப் புதிய அன்பையும்; புதிய வல்லமையையும் ஒவ்வொரு நாளும் தருகிறார். இந்த விதமான நெருக்கத்தில் தான் நாம் திருப்தியை எதிர்பார்க்கிறோம். தேவன் கொடுக்கும் அன்பு ஒருபோதும் தனிந்து போகாது, வருடங்களும் நாட்களும் மாறினாலும் அது மறையாது. அவருடைய அன்பு அவருடைய ஐக்கியத்தில் இரண்டு நபர்களை ஒன்றாகச் சேர்க்க முடியும். டேட்டிங் உறவில் நீங்கள் வளருவதன் மூலம் ஆவிக்குரிய, சமூக, மனம் சார்ந்த, மற்றும் உணர்வு அடிப்படையிலும் வளரமுடியும். நீங்கள் நேர்மையான, கருசனையுள்ள, நெருக்கமான பூரணமாக நிடித்திருக்கும் உறவை பெறமுடியும். திருமணத்தின் மூலம் உங்கள் உறவு உச்சநிலையை அடையும் போது, பாலுறவு மட்டுமே, முன்னரே நீங்கள் அமைத்த அந்த அடித்தளத்தை மேம்படுத்தும்.

எந்த உறவிலும் நாம் தேவனால் நேசிக்கப்படுகிறோம் என்கிற எண்ணம் நம்மைப் பிறரை விடுதலையோடு உண்மையாக நேசிக்க வைக்கும். உணர்வு அடிப்படையில் தேவை குறைவானவர்களாக இருப்போம். பொறாமை, கசப்பு, மற்றும் உண்மையற்ற தன்மை ஆகியவைகளால் சித்தரிக்கப்படும் உறவுகளைப் போல நம்முடைய உறவு இருக்காது. நாம் இவைகளைச் செய்ய வேண்டாம் என்பதை அறிந்திருக்கிறோம். மாறுதலாக நாம் விளையாட்டைத் தவிர்த்து விட்டு உண்மையுள்ளவர்களாகவும் மற்றும் தவறுகளை மன்னிக்கிறவர்களாகவும் மாறுகிறோம். எளிமையாகச் சொல்வோமே ஆனால், நாம் தேவனுடைய அன்பை அனுபவிக்கும் போது அது நம்மை வேறுபட்ட விதத்தில் மற்றவர்களோடு உறவுவைக்க உதவுகின்றது.

தேவனை அறிய மற்றும் அவர் உங்களையும் உங்களுடைய வாழ்க்கையையும் நடத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களா?

நீங்கள் இயேசுவை இப்பொழுதே விசுவாசிக்கிறதன் மூலமாகவும் ஜெபத்தின் மூலமாகவும் பெற்றுக்கொள்ள முடியும். தேவனோடு பேசுவதே ஜெபம் ஆகும். தேவன் உங்களுடைய இருதயத்தை அறிந்திருக்கிறார் எனவே உங்களுடைய வார்த்தைகளைக் குறித்துக் கவலை வேண்டாம் ஏனென்றால் அவர் உங்களுடைய இருதயத்தின் நினைவில் கவனமாய் இருக்கிறார். ஜெபத்தைச் செய்யும் முறையானது: “ஆண்டவராகிய இயேசுவே, எனக்கு நீர் தேவை. என்னுடைய பாவத்திற்காகச் சிலுவையில் நீர் மரித்ததற்காக நன்றி. என்னுடைய வாழ்க்கையில் உம்மை இரட்சகராகத் தேவனாக ஏற்றுக்கொள்கிறேன். என்னுடைய பாவத்தை மன்னித்ததற்காக மற்றும் எனக்கு நித்திய வாழ்வை தந்ததற்காக நன்றி. என்னுடைய வாழ்க்கையை முற்றிலும் ஆழுகைச்செய்யும் என்னை நீர் விரும்புகிறவண்ணமாக மாற்றும்.

இந்த ஜெபம் உங்களுடைய இருதயத்தின் வாஞ்சையை வெளிப்படுத்துவதாக இருந்ததா? அப்படியே இருக்கிறது என்றால், இப்பொழுதே இந்த ஜெபத்தைச் செய்யுங்கள். அவரை விசுவாசிப்பது அவர் வாக்குபண்ணினது போலவே அவர் உங்களுடைய வாழ்க்கையில் வர உதவியாக இருக்கும். இது அவரோடு நீங்கள் உறவை தொடங்க உதவுகிறது மற்றும் அவரை நீங்கள் அறிய அறிய இது நெருக்கமாக வளரும். அவரை மையமாகக் கொள்ளும் போது உங்களுடைய வாழ்க்கை புதிய கோணத்தில் மாறுகிறது. ஆவிக்குரியதாகவும், சமாதானம் நிறைந்ததாகவும், உங்களுடைய அனைத்து உறவுகளையும் நிறைவேற்றுவதாகவும் இருக்கும்.

தேவன் உங்களுக்கு வைத்திருக்கும் அன்பை அறியும் போதும் அனுபவிக்கும் போதும் நீங்களும் மற்றவர்களைத் தேவனுடைய அன்பை வைத்து நேசிக்க முடியும் அது உங்களை நெருங்கிய உறவுக்குள்ளாக நடத்தும்.

 நான் என் வாழ்வில் இயேசுவைக் கேட்டேன்(சிலப் பயனுள்ளத் தகவல்கள்ப் பின்வருமாறு)...
 நான் என் வாழ்வில் இயேசு வருமாரு வேண்டலாம்,மேலும் முழுமையாக விளக்குங்கள்
 எனக்கு ஒருக் கேள்வி உண்டு...

டிக் புர்நல் 450 பல்கலைகழகம் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களிடம் பேசியிருக்கிறார். அவர் 12 –க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார். அவைகளில் Becoming a Friend and Lover and Free to Love Again: Coming to Terms with Sexual Regret என்ற புத்தகமும் ஒன்று.

© Richard Purnell

இந்தக் கட்டுரையைப் பகிர  

TOP