வாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.
வாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.

சோகத்தின் மத்தியில்க் கடவுள் எங்கே?

தேவனே நீர் எங்கே இருக்கிறீர் என்று எப்போதாகிலும் கேட்டது உண்டோ? எந்த காரியத்தில் நாம் கர்த்தரை சார்ந்து கொள்ள வேண்டும்?

இயக்கியது மேரிலைந் ஆடம்‌ஸன்

தேவன் நம்மோடு இருப்பார் என்று அவரை எந்த அளவிற்கு அவரை சார்ந்துகொள்ள வேண்டும்? அவர் உண்மையாகவே அணுகதக்கவரா...கஷ்ட நேரங்களிலும் மற்றும் அமைதியான நேரங்களிலும்?

தேவன் யார்?

தேவன் இந்த உலகத்தை சிருஷ்டித்தவர் மற்றும் அவர் நம்மோடு உறவுகெள்ள ஏங்குகிறார். ஆகவே நாம் எல்லோரும் இங்கே இருக்கிறோம். அவரின் வலிமை, அன்பு, நீதி, பரிசுத்தம், மற்றும் மனதுருக்கத்தை நாம் சார்ந்துகொள்ளவும் அனுபவிக்கவும் அவர் விரும்புகிறார். ஆகவே அவர் ஆவலாய் இருப்பவர்களை பார்த்து “என்னிடம் வாருங்கள்” என்று சொல்லுகிறார்.

தேவன் நம்மை போல அல்ல: அவருக்கு நாளை, அடுத்த வாரம், அடுத்த வருடம் அடுத்த நூற்றாண்டில் என்ன நடக்கும் என்று அவருக்கு தெரியும். “நானே தேவன் எனக்குச் சமானமில்லை...அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்”1 இந்த பூமியில் என்ன நடக்கும் என்பது அவருக்கு தெரியும். மிக முக்கியமாக, உங்கள் வாழ்வில் என்ன நடக்கும் என்பதை அவர் அறிவார், மற்றும் நீங்கள் அவரை உங்கள் வாழ்கையில் ஈடுபடுத்த தீர்மானித்தால், அவர் உங்களோடும் உங்களுக்காகவும் இருப்பார். “நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமாக” இருப்பேன் என்று தேவன் சொல்லுகிறார்”2 ஆனால் அவரை தேட நாம் உன்மையான முயற்சி எடுக்க வேண்டும். “உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்”3என்று அவர் சொல்லுகிறார்.

கஷ்டமான நேரங்களில் தேவன் ஏங்கே?

தேவனை அறிந்தவர்களுக்கு கஷ்ட நேரங்களே வருவது இல்லை என்று சொல்ல முடியாது. ஒரு தீவிரவாத தாக்குதலால் துன்பமும் மரணமும் உண்டாகும்போது, தேவனை அறிந்தவர்களும் கூட அதனால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் தேவ பிரசண்ணம் அருளும் சமாதானமும் பெலனும் அவர்களுக்கு எப்போதும் உண்டு. இயேசு கிறிஸ்துவை பின்பற்றின ஒருவர் இப்படி சொல்லுகிறார்: “நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை; துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை”4 வாழ்கையில் பாடுகள் அனுபவிப்பது உண்மை. ஆனால், தேவனை அறிந்தவர்களாய் நாம் அந்த பாடுகளை கடந்து செல்லும்போது, நாம் அதை வித்தியாசமான கண்ணோட்டத்தில் எதிர் கொள்வது மட்டுமல்லாமல், நம் பெலத்தினால் அல்ல தேவ பெலத்தினால் அதை எதிர்க்கொள்வோம். தேவனால் ஜெயிக்க முடியாத ஒரு பிரசணையும் இல்லை. நம்மை தாக்கும் எல்லா பிரச்சனைகளை விட தேவன் பெரியவர், மற்றும் அந்த பிரசன்னைகளை நாம் தனியாக சந்திக்க வேண்டியதில்லை.

தேவனின் வார்த்தை இப்படி சொல்லுகிறது: “கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்.”5 matrum, “தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார். அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார்.”6

இயேசு கிறிஸ்து தமது சீடர்களிடம் இந்த ஆறுதலான வார்த்தைகளை சொன்னார்:
“ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.”7 நீங்கள் உன்மையாய் தேவனிடம் திரும்பும்போது, யாரும் உங்கள்மேல் அக்கறை காட்டாத அளவுக்கு அல்லது ஒருவரும் உங்களுக்கு அக்கறை காட்ட முடியாத அளவுக்கு, உங்கள்மேல் அக்கறை கொள்ளுவார்.

தேவனும் மற்றும் நமது சுயாதீன சித்தமும்

தேவன் மனுவர்கத்தை தெரிந்து கொள்ளும் ஆற்றலுடையவர்களாக படைத்தார். அதன் அர்த்தம் என்னவென்றால், தேவனோடு உறவு கொள்ள அவர் நம்மை வற்புறுத்துகிறது இல்லை. அவர் வேண்டாம் என்று எண்ணினால், நாம் அவரை நிராகரிக்கவும் மற்றும் வேறே தீய காரியங்களை செய்யவும் நம்மை விட்டு விடுகிறார். அவர் தம்மை நேசிக்க வற்புறுத்த முடியும். நாம் நல்லவர்களாக இருக்க வற்புறுத்த முடியும். அப்படி அவர் செய்தால், நாம் அவரோடு எப்படிப்பட்ட உறவில் இருப்போம்? அது உறவாகவே இருக்காது, மாறாக வற்புறுத்தி மற்றும் கட்டுப்படுத்தி அவருக்கு கீழ்ப்படிய செய்யும் ஒன்றாக இருக்கும். ஆனால், அவர் நமக்கு சுயாதீன சித்தத்தை தந்திருக்கிறார்.

இயல்பாகவே, நமது உள்ளத்தின் ஆழங்களிலிருந்து கதருவது என்னவென்றால்,
“ஆனால் தேவனே, “நீர் இப்படி இவ்வளவு பெரிய வேதனையான காரியத்தை எனக்கு ஏன் அனுமதித்தீர்?”

தேவன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்? ஜனங்களின் நடக்கைகளை எல்லாம் தேவன் கட்டுப்படுத்த வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? ஒரு தீவிரவாத தாக்கத்தின்போது, எத்தனை நபர்கள் மறிக்க வேண்டும் என்று தேவன் நிர்னயித்தால் நலமாயிருக்கும் என்று எண்ணுகிறீர்களா? சில நூற்றுக்கணக்கானோர் மறித்தால் நலமாயிருக்குமா? தேவன் அந்த தாக்குதலில் ஒருவரை மட்டும் மறிக்க அனுமதித்தால் நல்லது என்றென்ணுகிறீர்களா? ஒருவரும் மறிக்காமல் இருக்க தேவன் தடைப்பன்ணினால், தேர்ந்தெடுப்பது மனிதனின் கரத்தில் மாத்திரமே உள்ளது. ஜனங்கள் தேவனை புறகணிக்கவும், மீறவும், அவர்கள் சொந்த வழியில் சென்று மற்றவர்களுக்கு தீங்கு செய்யும் செய்யல்களை செய்ய தேர்ந்தெடுக்கின்றனர்.

இந்த பூமி ஒரு பாதுகாப்பான இடம் அல்ல. யாராவது நம்மை சுட நேரிடும். அல்லது ஒரு வாகனம் நம்மேல் மோத நேரிடும். அல்லது தீவிர வாத தாக்குதலின்போது, ஒரு கட்டிடத்தில் இருந்து நாம் குதிக்க நேரிடும். தேவ சித்தம் எல்லா நேரத்திலும் நடக்காமலிருக்கும், இந்த பூமியில் நமக்கு எந்த காரியம் ஆனாலும் நேரிடும். ஆனால், தேவன் நம் தயவை சார்ந்து அல்ல, மாறாக நாம் அவர் தயவை சார்ந்தவர்களாக இருக்கிறோம். இந்த கர்த்தர் பூமண்டலத்தையும் எண்ணிக்கை இல்லாத நட்சத்திரங்களையும் “வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது”8 என்ற வார்த்தையால் படைத்தவர். அவர் “ஜாதிகள்மேல் அரசாளுகிறார்.”9 அவர் ஞானத்திருக்கும் வல்லமைக்கும் அளவில்லை. பிரச்சனைகள் நமக்கு பெரிதாக தோன்றினாலும், அவைகளை விட மிக பெரிய தேவன் நமக்கு இருக்கிறார். அவர் சொல்லுகிறார், “இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக் கூடாத அதிசயமானகாரியம் ஒன்றுண்டோ?”10 அவர் கெட்ட மனிதர்களின் பாவம் செய்யும் ஆற்றலை எந்த விதத்திலாவது அடக்கி, தமது சித்தத்தை நடப்பிக்கிறவர். அவர் சொல்லுகிறார்,

“அதைச் சொன்னேன், அதை நிறைவேற்றுவேன்; அதைத் திட்டம்பண்ணினேன். அதைச் செய்து முடிப்பேன்.”11 நம் வாழ்கையை தேவனுக்கு ஒப்பு கொடுத்திருந்தோமானால், இந்த தேவ வார்த்தைகளில் இருந்து ஆறுதல் பெற முடியும். “ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது.”12

தேவனை நிராகரிக்கும்போது அவர் எங்கே இருக்கிறார்?

சில வேலைகளில், நம்மில் அநேகர்—அல்ல, நாம் எல்லோரும்—தேவனையும் அவர் வழிகளையும் எதிர்க்க தேர்ந்தெடுக்கிறோம். மற்றவர்களை விட, தீவிரவாதிகளை விட, நாம் நம்மை மரியாதைக்குரியவர்களாக, அன்புள்ளவர்களாக எண்ணுகிறோம். ஆனால் தேவனுக்கு முன்பாக முக முகமாக நிற்கும்போது, நம் பாவத்தை குறித்த அறிவுள்ளவர்களாக இருக்கிறோம். ஜெபிக்க துவங்கும்போது, திடீரென, நாம் நிறுத்தி யோசிப்பதில்லையா, தேவன் நமது எண்ணங்கள், செயல்கள், மற்றும் சுய நலங்களை அறிந்திருக்கிறார் என்று? நமது வாழ்க்கை மற்றும் கிரியைகளினால் தேவனை விட்டு நாம் தூரம் போயிருக்கிறோம். தேவன் இல்லாமல் நமது வாழ்கையை நாம் நன்றாக நாடத்த முடியும் என்று நாம் எண்னினதில்லையோ? வேதம் சொல்லுகிறது,“நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்.”13

அதன் பலன்கள் என்ன? பாவம் நம்மை தேவனை விட்டு பிரித்திருக்கிறது, மற்றும் அது நம் வாழ்கயை அதிகமாக பாதிக்கிறது. நம் பாவத்திற்கான சிட்சை மரணம் மற்றும் தேவனிடம் இருந்து நித்தியமான பிரிவாகும். ஆனால், நாம் மன்னிப்பு பெறவும் அவரை அறிந்துகொள்ளவும் தேவன் நமக்கு ஒரு வழியை ஏற்படுத்தி இருக்கிறார்.

தேவன் தமது அன்பை நமக்கு அருள்கிறார்.

நம்மை காப்பாற்றுவதற்காக, தேவன் இந்த பூமிக்கு வந்தார். “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.”14

இந்த பூமியில் நாம் சந்திக்கும் வேதனையும் துன்பங்களையும் தேவன் அறிவார். தமது வாசஸ்தலத்தில் இருந்த பாதுகாப்பை விட்டு நாம் வாழும் இந்த மோசமான சூழ்நிலைக்குள் வந்தார். இயேசுவுக்கு சோர்வுண்டானது, பசி தாகத்தை அவர் அறிந்திருந்தார், மற்றவர்களின் குறைசாட்டுகளை சந்தித்தார், குடும்பத்தினரால் மற்றும் நண்பர்களால் ஒதுக்கப்பட்டார். தினசரி கஷ்டங்களான இவைகளை மட்டும் அல்ல இன்னும் அதிகமான பாடுகளையும் அனுபவித்தார். மனித வடிவில் வந்த தேவ குமாரணான இயேசு, நமது பாவங்களை தாமாகவே சுமந்து மற்றும் நமக்கு உண்டான தன்டனையை அவர் சிலுவையில் செலுத்தினார். “அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்.”15

அவர் துன்பப்படுத்தபட்டார், வெட்கத்திற்குறிய சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்டு மூச்சுதினரலினால் மறித்தார். இதெல்லாம் நாம் மன்னிப்படைய வேண்டும் என்பதற்காகவே அவர் சகித்தார்.

அவர் சிலுவையில் ஆராயப்படுவார் என்றும், மறித்து மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்திருப்பார் என்றும், ஆதனால் தாம் தேவன் எனபதை வெளிப்படுத்துவார் என்றும், அவர் ஏற்கனவே ஜனங்களுக்கு சொல்லியிருந்தார். அவர் மருஜென்மம் எடுப்பார் என்று சொல்லவில்லை. (அவர் அப்படி செய்திருந்தால் யாருக்கு தெரிந்திருக்க முடியும்?) அடக்கம் பண்ணின பிறகு அவர் உயிரோடெழும்புவதை பிரத்தியச்சமாய் கான்பிப்பார் என்றும் அவர் சிலுவையில் அரையப்படுவதை பார்த்த அனைவருக்கும் தோன்றுவார் என்றும் சொல்லி இருந்தார்.அந்த மூன்றாம் நாளில், கல்லறை திறந்து இருந்ததாகவும் அவரை உயிருள்ளவராக ஜனங்கள் பார்த்தார்கள் என்று அநேகர் சாட்சி கொடுத்தனர்.

தேவனோடு நாம் பரலோகத்தில் இருக்கும்படி அவர் நம்மை அழைக்கிறார்

இப்போது அவர் நமக்கு நித்திய ஜீவனை அளிக்கிறார். இதை நாம் சம்பாதிக்க வேண்டியதில்லை. இது தேவன் நமக்கு தந்த ஈவு. தேவனை நம் வாழ்க்கையில் ஏற்றுக்கொள்ளும்போது இதையும் பெற்றுக் கொள்வோம். “தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.”16 நாம் பாவத்தை அறிக்கை செய்து அதை விட்டு திரும்பும்போது, கிறிஸ்து இயேசுவினால் உண்டாகும் நித்திய ஜீவனை பெற்றுக்கொள்கிறோம். இது மிகவும் எளிதானது. “குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.”17 அவர் நம் வாழ்க்கையில் உட்பிரவேசிக்க விரும்புகிறார்.

பரலோகத்தை பற்றி என்ன? வேதம் சொல்லுகிறது, தேவன் “உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்.”18 அதன் அர்த்தம் என்னவென்றால், நல்ல ஒரு உலகம் எப்படி இருக்கும் என்று நமது உள்ளத்திலே தெரிய முடியும் என்பதாகும். நாம் நேசிக்கின்றவர்கள் மறிக்கும்போது இந்த வாழ்க்கையிலும் உலகத்திலும் ஏதோ ஒரு தவறு இருக்கிறதென்று நமக்கு தெரிகிறது. இந்த உலகத்தை விட வேறு ஒரு நல்ல இடம் இருக்கிறது என்றும் அதில் நாம் வேதனையில்லாமல் பாடுகள் இல்லாமல் வாழமுடியும் என்றும் நமது உள்ளத்தின் ஆழத்தில் தெரிகிறது. உன்மையாகவே, தேவன் நமக்கு நல்ல ஒரு இடத்தை வைத்திருக்கிறார். அந்த உலக அமைப்பே வித்தியாசமானது: அதில் தேவ சித்தம் மட்டுமே எப்போதும் நடக்கும். இந்த புதிய உலகத்தில், தேவன் ஜனங்களின் ஒவ்வொறு கண்ணீரையும் துடைபார். அழுகையும், துக்கவும், மரணமும், வேதனையும் அங்கு இருப்பதில்லை.19 மற்றும் தேவன் தமது ஆவியினால் எல்லா ஜனங்களிலும் வாசம்பன்னுவார்; ஆகையால் அவர்கள் மீண்டும் பாவம் செய்வதே இல்லை.20

தீவிரவாத தாக்குதல் மிகவும் பயங்கரமான ஒன்று. ஆனால், இயேசு அளிக்கும் தேவனோடுள்ள நித்திய உறவை அசட்டை பண்ணுவது அதை விட பயங்கரமாம். அவரோடிருக்கிற உறவு நித்திய ஜீவனுக்காக மட்டுமல்ல, ஆனால் அவரை அறிகிறதை விட சிறந்த ஒரு உறவு இந்த வாழ்கையில் இல்லை. அவரே நம் குறிக்கோள், அவரே நம் ஆறுதலின் ஊற்று, அவரே நமக்கு ஞானம், நமது பெலன் மற்றும் நம் நம்பிக்கை. “கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து பாருங்கள்; அவர் மேல் நம்பிக்கையாய் இருக்கிற மனுஷன் பாக்கியவான்.”21

தேவன் ஒரு ஊன்றுகோல் மட்டுமே என்று சிலர் சொல்லுகிறார்கள். ஆனால் அவர் ஒருவரே நாம் சார்ந்துகொள்ள தக்கவர்.

இயேசு சொன்னார், “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.”22 இயேசுவை சார்ந்து வாழ்கின்ற அனைவரும், கற்பாறையின்மேல் தங்கள் வாழ்கையை காட்டினவர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். எந்த நெருக்கம் உங்களை தாக்கினாலும், அவர் உங்களை பெலனுள்ளவர்களாக நிறுத்துவார்.

தேவன் எங்கே இருக்கிறார்? அவர் உங்கள் வாழ்வில் வர முடியும்

இப்போதே இயேசுவை உங்கள் வாழ்கையில் நீங்கள் ஏற்று கொள்ள முடியும்.“அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.”23 இயேசு கிறிஸ்துவின் மூலமாக நாம் தேவனிடம் மீண்டும் வர முடியும். இயேசு சொன்னார், “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.”24 அவர் சொல்லுகிறார், “இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.”25

தேவன் உங்கள் வாழ்வில் வர இப்போதே அவரை வேண்டிக்கொள்ளுங்கள். இதை நீங்கள் ஜெபத்தின் மூலம் செய்ய முடியும். ஜெபம் என்பது தேவனிடம் உன்மையாக பேசுகிறதாகும். இந்த நொடியிலே நீங்கள் அவரை நோக்கி கூப்பிட முடியும்; அவரோடு உன்மையாக நீங்கள் இதை சொல்லுங்கள்:

“தேவனே, என் உள்ளத்தினால் நான் உம்மை விட்டு பிரிந்து போனேன், ஆனால் இப்போது நான் மாற விரும்புகிறேன். நான் உம்மை அறிய வேண்டும். இயேசுவையும் அவர் மன்னிப்பையும் நான் பெற்றுக்கொள்ள வேண்டுகிறேன். இனிமேல் நான் உம்மை விட்டு பிரிந்திருக்க விரும்ப மாட்டேன்.இன்றையில் இருந்து நீர் என் தேவனாக இரும். உமக்கு நன்றி தேவன்.”

நீங்கள் உன்மையாக இயேசுவை உங்கள் வாழ்கையில் அழைத்தீர்கள்? நீங்கள் அப்படி செய்திருந்தால், நீங்கள் எதிர் நோக்கி இருக்க அநேக காரியங்கள் உண்டு. அவரை அறிவதினால் உங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்த்தியை தர அவர் வாக்குபன்னுகிறார்.26 தேவன் எங்கே? தேவன் உங்கள் உள்ளத்தை அவர் வீடாக மாற்ற வாக்கு பண்ணுகிறார்.27 அவர் உங்களுக்கு நித்திய ஜீவனை அளிக்கிறார்.28

இந்த உலகத்தில் உங்களை சுற்றி எது நடந்தாலும், தேவன் உங்களுக்காக இருப்பார். தேவனின் வழிகளை ஜனங்கள் பின்பற்றாமல் இருப்பினும், அல்லது அந்த தீமையான சூழ்நிலைகளையும் அவர் திட்டத்தை நிறைவேற்ற வல்லமயுள்ளவர். நீங்கள் தேவனுடையவர்களாய் இருந்தால் அவர் சொல்லுகிறது என்னவென்றால், “அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.”29

இயேசு கிறிஸ்து சொன்னார், “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.”30 உங்களை வட்டுவிடாமலும் கைவிடாமலும் இருப்பேன் என்று அவர் வாக்குபன்னுகிறார். 31

 நான் என் வாழ்வில் இயேசுவைக் கேட்டேன்(சிலப் பயனுள்ளத் தகவல்கள்ப் பின்வருமாறு)...
 நான் என் வாழ்வில் இயேசு வருமாரு வேண்டலாம்,மேலும் முழுமையாக விளக்குங்கள்
 எனக்கு ஒருக் கேள்வி உண்டு...

(1) ஏசாயா 46:9,10 (2) சங்கீதம் 46:1 (3) எரேமியா 29:13 (4) 2 கொரிந்தியர் 4:8-9 (5) நாகூம் 1:7 (6) சங்கீதம் 145:18-19 (7) மத்தேயு 10:29-31 (8) ஆதியாகமம் 1:14 (9) சங்கீதம் 47:8 (10) எரேமியா 32:27 (11) ஏசாயா 46:11 (12) யாக்கோபு 4:6 (13) ஏசாயா 53:6 (14) யோவான் 3:16-17 (15) 1 யோவான் 3:16 (16) ரோமர் 6:23 (17) 1 யோவான் 5:12 (18) பிரசங்கி 3:11 (19) வெளி 21:4 (20) வெளி 21:27; 1 கொரிந்தியர் 15:28 (21) சங்கீதம் 34:8 (22) யோவான் 14:27 (23) யோவான் 1:12 (24) யோவான் 14:6 (25) வெளி 3:20 (26) யோவான் 10:10 (27) யோவான் 14:23 (28) 1 யோவான் 5:11-13 (29) ரோமர் 8:28 (30) யோவான் 14:27 and 16:33 (31) எபிரெயர் 13:5

இந்தக் கட்டுரையைப் பகிர  

TOP