வாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.
வாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.

ஆபாசம்- ஆபாசத்தின் உண்மையானத் தோற்றம்

ஆபாசத்திற்கு அடிமைப்பட்டிருப்பதிலிருந்து விடுதலையைக் கண்டுபிடித்தல்… ஆபாசத்தினுடைய 9 பொய்கள் மற்றும் அவைகளில் இருந்து விடுபடுவது எப்படி.

-ஜெனி மக்கோநல்

ஆபாசம் மற்றும் அடிமைப்படுதல்… தவறான பாலுறவு

ஒரு குளிர் நிறைந்த இருளான இரவு, இதனில் நெருப்பு எரிகிற இடத்தில் நெருப்பைத் தவிர வேறொன்றும் இல்லை. இது பாதுகாப்பானது, வெதுவெதுப்பானது, மனரம்மியமானது மற்றும் காதல்வசப்பட உகுந்தது. இந்த நெருப்பை அது எரியும் இடத்திலிருந்து எடுத்து நம்முடைய அறையின் மத்தியில் வைக்கலாம். ஆனால் அது அழிவை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். பாலுறவும்; இப்படிப்பட்ட நெருப்பு போன்றதே. திருமண உறவுக்குள் ஆக்கபூர்வமான அற்பணிப்பாகப் பாலுறவு இருக்கும் போது அது அற்புதமானது, அழகானது மற்றும் ரசிக்கப்பட வேண்டியது. ஆனால் ஆபாசம் பாலுறவை சூழலுக்குப் புறம்பாக்குகிறது.

ஆபாசத்திற்கு அடிமைபட்டிருக்கும் படி தூண்டுவது எது

நம்முடைய சிந்தை சரியாக இருப்பதே பாலுறவில் நாம் யார் என்பதை வெளிப்படுத்துகிறது. நம்முடைய சிந்தை அசுத்தப்பட்டிருக்குமே ஆனால் அந்த அசுத்தம் நம்முடைய வாழ்க்கையிலும் பிரதிபலிக்கக் கூடியதாக இருக்கிறது. ஆபாச கலாச்சாரம் பாலுறவு, அன்பு மற்றும் நெருக்கம் அனைத்தையும் ஒன்றாகவே பார்க்க சொல்கிறது. முன் பின் அறியாத நபர்களிடம் பாலுறவு வைத்துக்கொள்வதே இந்த ஆபாசத்தின் விளைவு ஆகும். ஆபாசம் உங்களைப் பாலுறவை எப்பொழுது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் மற்றும் யாருடனும் வைத்துக்கொள்ளலாம், இதற்கு விளைவு இல்லை என்கிற எண்ணத்திற்குத் தள்ளுகிறது.

மேலோட்டமான ஆபாசத்தின் பார்வையின் பிரச்சனை என்னவென்றால் உறவுகள் பாலுறவில் கட்டப்படுவதில்லை ஆனால் அற்பணிப்பு, கருசனை மற்றும் பரஸ்பர நம்பிக்கையில் தான் இருக்கிறது என்பதே. முன் சொன்னது போலவே, நெருப்பு அது எரியும் இடத்தில் இருந்தால் அருமை அதுபோலவே பாலுறவும் சரியாகக் கையாளப்படுமேயானால் அது அற்புதமானது. நம்மை நேசிப்பவர்களிடம் மற்றும் ஏற்றுக்கொண்டவர்களிடம், நம்முடைய வாழ்க்கை முழுவதும் நம்மோடு இருக்கும் படி அற்பணித்தவர்களிடம், உங்களிடம் தம்மை முழுமையாக அற்பணித்தவர்களிடம் நாம் பாலுறவு வைத்துக்கொள்ளும் போது அந்தப் பாலுறவு உண்மையாகவே சிறப்பானது.

ஆபாசத்திற்கு அடிமைபடுவதிலிருந்து விடுபட: பொய்களை இனங்கண்டுக்கொள்ள வேண்டும்

ஆபாச படங்களில் இருந்து உண்மையான பாலுறவு என்றால் என்ன என்பதை நீங்கள் கற்றுக்கொள்ள முடியாது. ஆபாசப்படங்கள் போதிப்பதற்காக உருவாக்கப்படவில்லை விற்பனைக்காக உருவாக்கப்படுகின்றன. இது பணம் சம்பாதிப்பதற்காகச் செய்யக் கூடிய பெரிய வணிகம் ஆகும் மற்றும் பணம் எப்படி வருகிறது என்று அவர்கள் கண்டுக்கொள்வதில்லை. அதனில் காட்டப்படும் அணைத்தும் உங்களைத் திரும்பவும் அந்த ஆபாசப்படங்களை வாங்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே உருவாக்கப்பட்டது ஆகும். பார்வையாளர்களைக் கவரக் கூடிய மற்றும் தக்கவைக்கக் கூடிய பொய்களையே ஆபாசப்படங்களில் காட்டுகிறார்கள். பாலுறவு, பெண்கள், திருமணம் மற்றும் பல காரியங்களைக் குறித்த பொய்களை ஆபாசமானது பெருகச்செய்கிறது. அப்படிப்பட்ட சில பொய்களையும் அவைகள் எப்படி உங்களுடைய வாழ்க்கை மற்றும் நடத்தையில் குளறுபடியை கொண்டுவர முடியும் என்பதையும் பார்க்கலாம்.

 • பொய் # 1- பெண்கள் மனிதனைவிட மதிப்பு குறைவானவர்கள்
  பிலேபாய் இதழில் பெண்கள் முயல்குட்டிகள் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்கள் சிறிய அழகிய மிருகமாகவும் அல்லது விளையாட்டு தோழிகளாகவும் பொம்மைகளாகவும் உருவாக்கப்படுகின்றனர். பென்ட்ஹவுஸ் இதழ் செல்லப்பிராணி என அவர்களை அழைக்கிறது. ஆபாசம் பெண்களை விளங்குகளாக, விளையாட்டுபொருளாக மற்றும் உடலின் பாகங்களாகக் குறிப்பிடுகிறது. சில ஆபாசப்படங்கள் உடலை மட்டும் அல்லது பிறப்புறுப்புகளை மட்டும் காட்டுகின்றது ஆனால் முகத்தைக் காட்டுவதில்லை. பெண்கள் உண்மையில் எண்ணம் மற்றும் உணர்வுகள் அடங்கிய மனித இனம் என்பதைப் புறக்கணிக்கின்றனர்.

 • பொய் # 2- பெண்கள் ஒரு விளையாட்டு
  சில விளையாட்டுப் பத்திரிக்கைகளுக்கு நீச்சலுடை பிரச்சனை இருக்கிறது. இது பெண்கள் சில விளையாட்டுக்களைப் போல என்கிறது. ஆபாசம் பாலுறவை விளையாட்டாகக் காட்சி அளிக்கிறதினால் இதிலும் வெற்றி, ஜெயம், இதற்க்கான மதிப்பெண் ஆகியவை உள்ளன. இதை வாங்கும் ஆணுக்கு வெற்றி பெறும் எண்ணத்திலேயே பெண்களோடு பேசுகின்றனர். அவர்கள் தங்களுடைய ஆண்மையை எத்தனை பெண்களை அவர்கள் தங்கள் வசப்படுத்திகின்றனரோ அதன் படி மதிப்பிடுகின்றனர். நான் வசப்படுத்தும் ஒவ்வொரு பெண்களும் என்னுடைய ஆண்மையை நிரூபிக்கும் பரிசுக்கோப்பைகள்.

 • பொய் # 3- பெண்கள் ஒரு சொத்து
  அழகான கார்ருடன் கவர்சியான பெண் நிற்கும் படங்களை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம். சொல்லப்படாத செய்தி என்னவென்றால் “ஒன்றை வாங்கினால் இரண்டையும் பெறுவீர்கள் என்பதே.” ஆபாசப்படங்கள் இதை இதற்கு மேல் எடுத்துச்செல்கிறது. இது பெண்களை அட்டவணையில் இருக்கும் விற்பனை பொருளாகக் காட்டுகிறது, வாடிக்கையாளரை கவரும் வகையில் பெண்களை வெளிப்படையாகவே காட்டுகின்றனர். சில ஆண்கள் பெண்களை வெளியே கூட்டிச்சென்று பணங்களைச் செலவுசெய்தால் அவர்களோடு பாலுறவு கொள்ளும் அதிகாரம் அவர்களுக்கு இருக்கிறது என்று நினைக்கின்றனர். ஆபாசம் பெண்களை வாங்க முடியும் எனச் சொல்கிறது.

 • பொய் # 4- பெண்களின் மதிப்பு அவர்களுடைய உடல் கவர்சியின் அடிப்படையிலேயே இருக்கிறது.
  குறைவான கவர்சியுள்ள பெண்கள் ஆபாச படங்களில் கேலிக்குள்ளாகின்றனர். அவர்கள் நாய்கள், திமிங்கலங்கள், பன்றிகள் அல்லது அதை விடக் கேவலமாக அழைக்கப்படுகின்றனர். ஏனென்றால் அவர்கள் ஆபாசத்திற்கு உகுந்த சரியான பெண்களாக இல்லை என்பதே. ஆபாசம் பெண்களுடைய மனதை அல்லது ஆள்துவத்தை அல்ல உடலையே பொருட்படுத்துகிறது.

 • பொய் # 5- பெண்களுக்குக் கற்பழிப்பது பிடிக்கும்
  ஆபாசபடங்களின் படி பெண்கள் வேண்டாம் என்று சொன்னால் வேண்டும் என்று அர்த்தம். பெண்கள் கற்பலிக்கப்படும் போது முதலில் அடித்து உதைகின்றனர் ஆனால் பின்பு அவர்கள் அதை விரும்புகின்றனர் என்பதாகக் காட்டப்படுகிறது. பெண்களைக் காயப்படுத்துவது மற்றும் திட்டுவது பொழுதுபோக்காக ஆபாசப்படங்களில் காட்டப்படுகிறது.

 • பொய் # 6- பெண்கள் தரக்குறைவாக நடத்தப்பட வேண்டும்
  ஆபாச படங்களில் பெண்கள் வெறுக்கத்தக்கதான பேச்சுகள் நிறைந்திருக்கிறது. பெண்கள் சித்திரவதை செய்யப்படுவதாகவும், அவமானப்படுத்தப்படுவதாகவும் மற்றும் வருந்தி கேட்பது போலவும் காட்டப்படுகின்றனர். இந்த மாதிரியான அனுகுமுறை பெண்களுக்கு மதிப்பை கொடுக்குமா? ஏதேனும் நேசத்தை அல்லது வெறுப்பு அல்லது ஆபாச நோக்கத்தோடு பெண்களை அனுக தூண்டுகிறதா?

 • பொய் # 7- சிறு குழந்தைகள் பாலுறவு கொள்ள வேண்டும்
  குழந்தைகள் ஆபாசத்தில் ஈடுபடுவது போலக் காட்டுவதே ஆபாச உலகில் மிகப் பெரிய விற்பனையாளர்களாக இருக்கின்றனர். பெண்களைச் சிறு பிள்ளைகளைப் போலவே முடி அழங்காரம் செய்துகொண்டு சிறிய சூ அணிந்து கொண்டு பொம்மைகளைக் கையில் வைத்துக்கொண்டிருப்பது போல் காட்டப்படுகின்றனர். இந்தப் படத்தின் மற்றும் சித்திரத்தின் நோக்கம் பெரியவர்கள் சிறு குழந்தைகளுடன் பாலுறவு வைத்துக்கொள்ளாலம் என்பதே. இது ஆபாசத்திற்கு அடிமைப்பட்டவர்களைக் குழந்தைகளைக் கவர்ச்சியாகவே பார்க்க தூண்டுகிறது.

 • பொய் # 8- சட்டவிரோதமான பாலுறவு வேடிக்கை
  ஆபாசமானது சட்டவிரோதமான மற்றும் ஆபத்தான பாலுறவு அதிகச் சுவாரசியம் எனக் காட்டுகிறது. பாலுறவு வித்தியாசமாக, சட்டவிரோதமாக அல்லது ஆபத்தானதாக இல்லாவிட்டால் நீங்கள் அதனில் சந்தோஷமாக இருக்க முடியாது என்பதே இது அறிவுறுத்துகிறது.

 • பொய் # 9- விபச்சாரம் கவர்ச்சிகரமானது
  ஆபாசமானது விபச்சாரத்தை ஒரு அற்புதமாக வர்ணிக்கிறது. உண்மையில் ஆபாசத்திற்குப் பயன்படுத்தப்படும் பெண்கள் அடிமைகளாகப் பிடிக்கப்பட்ட வீட்டை விட்டு ஓடிய பெண்கள். அநேகர் பாலியல் வன்கொடுமைப்படுத்தப்படுகின்றனர். அநேக பெண்கள் சுகமாக்கப்பட முடியாத மற்றும் பரவக் கூடிய வியாதியினால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர் மற்றும் இளவயதிலேயே மரித்தும் இருக்கின்றனர். சமாளிப்பதற்காக அநேகர் போதை மருந்துகளை எடுக்கின்றனர்.

ஆபாசத்திற்கு அடிமைபட்டிருப்பதற்கான அடிப்படை

வாழ்க்கையைச் சீரலித்த இளம் பெண்களின் வாழ்க்கையிலிருந்து ஆபாசப்படங்கள் இலாபத்தைச் சம்பாதிக்கின்றன மற்றும் இவர்களது பொருட்களை வாங்குவது மற்றும் இவற்றில் நேரம் சொலவிடுவது என இளைஞர்களையும் சிக்கவைத்துள்ளனர்.

நாம் பார்ப்பவைகள் மற்றும் கேட்பவைகள் நம்மை எந்த விதத்திலும் தாக்காது என்று நினைக்கிறோம். நல்ல இசை, நல்ல படம், மற்றும் நல்ல புத்தகம் நம்முடைய வாழ்க்கைக்கு வழு சேர்க்கின்றன என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்கிறோம். அவைகள் நமக்கு மன அமைதியை, அறிவை, உற்சாகத்தைத் தரலாம் அல்லது நம்மில் தாக்கத்தை ஏற்படுத்தாலம். நாம் மீடியாவை உயர்த்துவது நமக்கு நன்மையை உண்டாக்கலாம், ஆனால் ஆபாசப்படங்கள் நம்மில் தவறான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

படங்கள் நடுநிலையானவைகள் அல்ல. அவைகளால் நம்மைக் கவர முடியும். தங்களுடைய பொருட்களுக்கு முன் இருக்கும் படங்கள் உங்களைக் கவரும்விதத்தில் இருந்தால் நீங்கள் உணர்சிவசப்படும் சூழலோடு ஒத்துக்போகும் போது அது உங்களுடைய உள்ளான சிந்தையிலே பதிந்துவிடும் என்பது வியாபாரிகளுக்குத் தெரியும். விளம்பர தயாரிப்பாளர்களுக்கு அவர்களுடைய பொருளினுடைய விளம்பரம் எப்படி இருந்தால் நீங்கள் அந்தப் பொருளை வாங்குவீர்கள் என்பது நன்கு தெரியும். சில நேரங்களில் பார்வையாளர்கள் பொருளினுடைய பெயரைக் கூடப் பார்ப்பதில்லை. ரீசிஸ் பீசஸ் தன்னுடைய மிட்டாய் நுவு திரைப்படத்தில் சில நிமிடங்கள் காண்பிக்கப்பட வேண்டும் என்பதற்காகப் பெரிய தொகையைச் செலுத்தியுள்ளனர் மற்றும் அவர்களுடைய விற்பனை வானளவு சென்றது. ஏன்? இந்தச் சிறு பையன் வேற்றுக்கிரக வாசிகளை அடைவதற்கு இந்தச் சிறு மிட்டாயாக மாறுவது உணர்ச்சிப்பூர்வமாக மக்களைச் சென்றடைந்தது. இந்தப் பொருள் மக்களுடைய கவனத்தின் மையப்பகுதியில் இல்லாவிட்டாலும் கூட இதனால் மக்களுடைய கவணத்தை ஈர்க்க முடியுமே ஆனால், உங்கள் கவனத்தைத் திரையில் முழுமையாக வைக்கச்செய்யும் ஒன்னரை மணி நேர ஆபாசப்படத்தினுடைய தாக்கம் என்னவாக இருக்கும் என்பதை நினைத்துப்பாருங்கள்.

ஆபாசப்படங்களின் தாக்கங்கள் என்ன?

எதை இந்த ஆபாசப்படங்கள் உங்களுடைய இருதத்தில் விதைக்கின்றன. தவறான காரியங்கள் உங்கள் சிந்தையில் சேர்க்கப்படுமே ஆனால் நிச்சயம் உங்களுடைய வாழ்க்கை பிரச்சனைக்குள்ளாகக் கடந்து போகும். நம்முடைய சிந்தையின் சரியான சூழல் எதுவென்றால் பாலுறவை குறித்த சரியான சிந்தையோடு இருப்பதே ஆகும். இந்தச் சிந்தை அசுத்தப்படுமேயானால் யாராக நீங்கள் இருக்கிறீர்களோ அதுவும் திரிக்கப்பட்டுபோகும்.

ஆபாசத்திற்க்கு அடிமை: ஆபாசப்படங்களின் ஈர்ப்பு

ஆபாசப்படங்களைப் பார்ப்பவர்கள் எல்லோரும் அதற்கு அடிமையாவதில்லை. சிலர் ஆண்கள். பெண்கள், பாலுறவு, திருமணம் மற்றும் பிள்ளைகளைப் பற்றிய தவறான புரிந்துக்கொள்ளுதலோடு வெளிவருகின்றனர். சிலர் உணர்சிபூர்வமான எண்ணங்கள் அவர்களை அந்த ஆபாசத்திற்கு அடிமைகளாகவே மாற்றிவிடுகின்றது. இந்த ஆபாசத்தைத் தயாரிக்கும் நிறுவனங்கள் நீங்கள் இதற்கு அடிமையாவதை குறித்துக் கவலைப்படுவதில்லை. இது அவர்களுடைய வணிகத்திற்குச் சிறந்தது. டாக்டர் வின்சென்ட் கிலின் அடிமைபட்டிருப்பதன் செயல்பாட்டைப் பல நிலைகளில் பிரித்திருக்கிறார்: அடிமையாதல், விரிவாக்கம், உணர்ச்சி திறன் குறைதல் மற்றும் செயல்படுத்துதல். ஆபாசத்திற்கு அடிமைப்பட்டவர்களுடைய மற்றொரு முறையை நான் அறிந்திருக்கிறேன் அது இளமையிலேயே அறிந்து கொள்ளுதல், இது முதலாவது வருகிறது என்று நினைக்கிறேன். இந்த நிலைகளைப் பார்க்கலாம்

இளமையிலேயே அறிந்துக்கொள்ளுதல்
ஆபாசத்திற்கு அடிமைப்படும் அநேகர் இதை இளம் வயதிலேயே ஆரம்பிக்கின்றனர். அவர்கள் இளம் வயதிலேயே ஆபாசப்படங்களைப் பார்க்க ஆரம்பிக்கின்றனர் மற்றும் வாசலில் அடி எடுத்து வைக்கின்றனர்.

ஆபாசத்திற்கு அடிமை
நீ தொடர்ந்து ஆபாசத்தைப் பார்க்க ஆரம்பிக்கிறாய். அது உன்னுடைய வாழ்க்கையின் ஒரு பகுதி ஆகிறது. நீ மாட்டிக்கொள்கிறாய் இதிலிருந்து வெளிவர முடியாது.

விரிவாக்கம்
நீ அதிகக் கிராபிக்ஸ் ஆபாசத்தைப் பார்க்க ஆரம்பிக்கிறாய். முதலில் உனக்கு வெறுப்பாக இருந்த ஆபாசத்தை இப்பொழுது பார்க்க ஆரம்பிக்கிறாய். இப்பொழுது அது உன்னை உற்சாகப்படுத்துகிறது.

உணர்ச்சி திறன் குறைதல்
ஆபாசத்தைப் பார்க்க பார்க்க உனது உணர்ச்சி திறன் குறைகிறது. இப்பொழுது அதிகக் கிராபிக்ஸ் ஆபாசமும் உன்னை உற்றசாகப் படுத்துவதில்லை. நீங்கள் முன்போலவே அதே அனுவபத்தைப் பெற முயற்சிக்கிறீர்கள் ஆனால் அது இப்பொழுது முடிவதில்லை.

செயல்படுத்துதல்
இந்த நிலையில் தான் மனிதன் முக்கியமான தீர்மானத்தை எடுக்கிறான். அவன் தான் கண்களால் பார்த்ததைச் செயல்படுத்த ஆரம்பிக்கிறான். சிலர் தாழில் மட்டும் அட்டைகளில் படங்களைப் பார்பதிலிருந்து உண்மையான உலகத்தில் உண்மையான மக்களிடம் தவறான வழியில் ஆபசத்தைத் தொடர ஆரம்பிக்கின்றனர்.

ஆபாசத்திற்கு அடிமை: நான் அடிமையா?

நீங்கள் இவைகளில் ஏதேனும் ஒரு நிலையை உங்களில் பார்பீர்களே ஆனால் இப்பொழுதே அதை நிறுத்த வேண்டும். ஆபாசம் அதிகம் அதிகமாக உங்களுடைய வாழ்க்கையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருகிறதா? அதை விட்டுவிடுவதில் உங்களுக்குப் பிரச்சனை இருக்கிறதா? அதன் பின் நீங்கள் அதிகமாகப் போகிறீர்களா?

ஆபாசத்திற்கு அடிமை: என்ன செய்வது?

முதலாவது நீங்கள் ஆபாசத்திற்கு அடிமைப்பட்டிருக்கிறீர்கள் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். இது உங்களிடம் மட்டும் இருக்கும் பிரச்சனை அல்ல. இலட்சக்கனக்கான ஆண்களும் பெண்களும் பல்வேறு நிலையில் இந்த ஆபாசத்திற்கு அடிமைப்பட்டுப் போராடிக்கொண்டிருக்கின்றனர். இது ஆச்சரியப்படுவதற்குரியது அல்ல. ஆபாச நிறுவனங்கள் உங்களை இதற்கு வசப்படுத்துவதற்காக ஆயிரக்கணக்கான டாலர்களைச் செலவிடுகின்றனர். அவர்கள் வெற்றி பெறுகின்றனர் என்பது உண்மையாகவே உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? உங்களில் சிலர் உங்களுடைய பழைய பாதிப்புகள் அதாவது பாலுறவு கொடுமையாக இருக்கலாம் அது உங்களை ஆபாசத்திற்கு அடிமையாக்கி இருக்கும். உங்களால் அதிகமாகச் செய்ய முடிந்தது அதனோடு போராடுவது மட்டுமே.

உங்களுக்கு இந்த அடிமைதனத்திலிருந்து விடுபட யாராவது ஒருவருடைய உதவி தேவை. இரகசியமான பாவங்களை மேற்கொள்வது முக்கியமானது. இதைச் செய்யாமல் நீங்கள் அடிமைப்பட்டிருப்பதிலிருந்து மீள முடியாது. எல்லோருக்கும் நீங்கள் அடிமைப்பட்டிருப்பது தெரிய வேண்டும் என்பது இதனுடைய அர்த்தமல்ல. இப்படி அடிமைப்பட்டிருப்பவர்களுக்கு ஆலோசனை வழங்கும் மற்றும் நீங்கள் விசுவாசிக்கும் யாராவது ஒருவரை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அவர் போதகரோ, வாலிபக் குழுவின் தலைவரோ அல்லது ஆலோசகராகவோ இருக்கலாம். அவர் நீங்கள் முழுமையாக விசுவாசிப்பவராக மற்றும் பாதுகாப்பாக நினைக்கக்கூடியவராகவும் இருக்க வேண்டும். இப்படி அடிமைப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்குபவராகவும் இருக்கவேண்டும்.

ஆபாசத்திற்கு அடிமைப்பட்டிருப்பதிலிருந்து மீள வழியிருக்கிறதா?

ஆபாசமானது உங்களைப் பொய்யோடு சிறைபிடிக்கிறது. முரண்பாடாக, தேவன் உங்களை உண்மையில் நடத்த முடியும். இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்;

சத்தியத்தையும் அறிவீர்கள்இ சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்”1 என்று சொன்னார். அவர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக:நாங்கள் ஒருக்காலும் ஒருவனுக்கும் அடிமைகளாயிருக்கவில்லை; விடுதலையாவீர்களென்று நீர் எப்படிச் சொல்லுகிறீர் என்றார்கள்.”2 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான்”3 என்றார். ஆனால் அவரால் உங்களை விடுதலையாக்க முடியும்.

பாவம் நம்மை அடிமைப்படுத்துவது மட்டுமல்ல தேவனிடமிருந்தும் பிரிக்கிறது. யாரும் பூரணர் அல்ல. தேவனுடைய பார்வையில் யாரும் நீதிமானல்ல. மாறாக “நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்துஇ அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்”4 என்று சொல்லப்பட்டிருக்கிறது. நாம் எல்லோரும் தேவனுடைய நியாயத்தீர்ப்பு மற்றும் தண்டனைக்குப் பாத்திரவான்கள். இருப்பினும் பரிசுத்தமும் அன்பும் நிறைந்த தேவன் நம்முடைய பாவத்திற்குத் தீர்வை தந்திருக்கிறார் எனவே நாம் ஆக்கினைகுள்ளாகத் தீர்க்கப்படுவதில்லை. அவர் நம்முடைய பாவங்களை அவர் மீது சுமந்துக்கொண்டார். நம்முடைய பாவங்களை மன்னிப்பதற்காகத் தேவனுடைய குமாரனாகிய இயேசு பாடுகளை அனுபவிதித்துச் சிலுவையில் அறையப்பட்டார். அவர் சொன்னது போலவே மரித்து மூன்று நாட்களுக்குப் பின் அவர் உயிரோடே எழுந்தார். அவர் இப்பொழுது அவரோடு ஐக்கியப்படும் வாய்ப்பை தந்திருக்கிறார். வேதாகமத்தில் சொல்லப்பட்ட மிக ஆச்சரியமான ஒரு வாசனம் என்னவென்றால், “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால்இ பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.”5

மிக முக்கியமான உறவு

நெருங்கிய உறவு மற்றும் அன்பை குறித்த நம்முடைய உண்மையான தேடுதலில் ஆபாசமானது உண்மையான அன்புக்கு மாறானதே. தேவனிடத்தில் ஐக்கியத்தின் மூலம் நம்முடைய வேற்றுமை நீங்கும் படியாகவே நாம் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறோம். “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.”6 மாறாக ஆபாசமானது இருளையும் அழிவையுமே ஒருவருடைய வாழ்க்கையில் கொண்டுவருகிறது. திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும்இ அது பரிபூரணப்படவும் வந்தேன்” 7 என்று இயேசு கூறுகிறார். தேவனோடு ஐக்கியப்படுவதன் மூலம் தேவன் மன்னிப்பை வழங்குகிறார். அவர் உங்களை மன்னிக்கும் படி மற்றும் உங்களுடைய வாழ்க்கையில் வரும் படி அழைக்க விரும்புகிறீர்களா? இதை நீங்கள் இப்பொழுதே செய்ய முடியும். இதைச் சொல்வதற்கு உதவி தேவை என்றால், இந்த ஜெபத்தைச் செய்யுங்கள்:

ஆண்டவராகிய இயேசுவே, என்னுடைய பாவத்தைக் குறித்து அறிந்திருக்கிறேன் மற்றும் உம்மையும் அறிந்திருக்கிறேன். என்னை மன்னியும் மற்றும் என்னுடைய பாவத்தைக் கழுவும். என்னுடைய பாவங்களுக்காகச் சிலுவையில் நீர் மரித்தபடியினால் உமக்கு நன்றி. என்னுடைய வாழ்க்கையில் நீர் வந்து நீர் கிரியை செய்யும் படி உம்மை வரவேற்கிறேன். உமக்குப் பிரியமான வழியில் என்னுடைய வாழ்க்கையை நடத்தும். உம்முடைய மன்னிப்புக்காக மற்றும் இப்பொழுது என்னுடைய வாழ்க்கையில் வந்ததர்காக நன்றி.

 நான் என் வாழ்வில் இயேசுவைக் கேட்டேன்(சிலப் பயனுள்ளத் தகவல்கள்ப் பின்வருமாறு)...
 நான் என் வாழ்வில் இயேசு வருமாரு வேண்டலாம்,மேலும் முழுமையாக விளக்குங்கள்
 எனக்கு ஒருக் கேள்வி உண்டு...

(1) யோவான் 8:31-32 (2) யோவான் 8:33 (3) யோவான் 8:34 (4) ஏசாயா 53:6 (5) 1 யோவான் 1:9 (6) யோவான் 3:16 (7) யோவான் 10:10

இந்தக் கட்டுரையைப் பகிர  

TOP