வாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.
வாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.

கடவுள் ஒருவர் இருக்கிறாரா?

கடவுள் ஒருவர் உண்டா? கடவுள் உண்டென்று நம்புவதற்கு இங்கு ஆறு நேரடியான காரணங்கள் குறிப்பிடட்டுள்ளன.

மேரிலைந் ஆடாம்சன்

யாராவது ஒருவருக்கு ஒருமுறையாவது கடவுள் இருக்கிறார் என்ற ஆதாரத்தை காண்பிக்க நீங்கள் விரும்பமாட்டீர்களா? வற்புறுத்தல் இல்லாமல். “நீங்கள் சும்மா அப்படியே நம்பவேண்டும் அவ்வளவு தான்,” என்பதல்ல. சரி, இந்த கட்டுரையில் சில காரணங்களை குறிப்பிட்டு அதன் மூலமாக கடவுள் இருக்கிறார் என்று சுட்டிக்காட்ட முயற்சிக்கிறேன்.

முதலாவதாக, இதை கவனியுங்கள். வேதம் சொல்லுகிறது, கடவுள் இருக்கிறார் என்பதற்கு போதுமான ஆதாரங்களை பார்த்த பிறகும், அந்த உன்மையை அடக்கி வைத்தவர்களும் உண்டு.1 ஆனால், கடவுள் இருக்கிறாரா என்று அறியவேண்டும் என்பவர்களுக்கு, கர்த்தர் சொல்லுகிறார்,2 தேவன் இருக்கிறாரா என்ற உன்மையை நீங்கள் பார்ப்பதற்க்கு முன், இந்த கேள்வியை நீங்கள் உங்களிடம் கேளுங்கள்: தேவன் இருந்தால், நான் அவரை அறிய விரும்புகிறேன்? நீங்கள் கவனிப்பதற்க்கு கீழே சில காரணங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது.

1. தேவன் இருக்கிறாரா? நமது கோளை பார்க்கும்போது ஒரு வடிவமைப்பாளர் இந்த உலகத்தை படைத்தது மட்டுமல்லாமல் அதை இந்நாள் வரை தாங்குகிறார் என்பதை சுட்டிக்காட்டுகிறது.

தேவனுடைய செயல் மற்றும் அதின் வடிவமைப்பை பற்றி அநேக (முடிவில்லாத) எடுத்துக்காட்டுக்கள் உண்டு. அதில் சிலவற்றை இங்கு காணலாம்.

பூமி….அதன் அளவு பூரணமானது. இந்த பூமியின் அளவு மற்றும் அதன் ஈர்ப்புச்சக்தி நைட்ரஜன் வாயு மற்றும் ஆக்ஸிஜனையும் கொண்ட ஒரு மெல்லிய படலம் உள்ளது. அது பூமியின் மேற்பரப்பிலிருந்து 50 மைல்கள் மேலே தான் உள்ளது. பூமி மட்டும் புதன் கோளை போல சிறியதாக இருந்தால் ஒரு வளிமண்டலம் அதற்க்கு இருந்திருக்காது. வியாழன் கிரகத்தை போல பெரிதாக இருந்திருந்தால், அதன் வளிமண்டலத்தில் வரம்பற்ற ஜலவாயு இருந்திருக்கும்.3 ஆனால், பூமியில் மட்டுமே செடிகள், மிருகங்கள், மற்றும் மனிதர்கள் வாழும்படிக்கான சரியான வாயு கலவை உண்டு.

பூமி சூரியனை விட சரியான தூரத்தில் தான் இருக்கிறது. நாம் பார்க்கும் சீதோஷ்ண நிலையின் மாற்றங்களை சற்றும் கவனியுங்கள், அது -30இல் இருந்து +120 வரை வெப்ப அளவாகும். சூரியனை விட பூமி இன்னும் தூரமாக இருந்திருந்தால் உறைந்து விடுவோம். பூமி சூரியனை 67,000 mph வேகத்தில் சுற்றினாலும் அது சூரியனை விட சரியான தூரத்தில் இருந்துதான் சுழன்று கொண்டு இருக்கிறது. அது அதின் அச்சில் சுற்றிக்கொண்டிருக்கிறது, அதனால் பூமியின் எல்லா இடங்களும் எல்லா நாட்களும் வெப்பமும் குளிர்ச்சியும் கிடைக்கிறது.

சந்திரனும் சரியான அளவில் உள்ளது மற்றும் பூமியை விட நேர்த்தியான தூரத்தில் தான் இருக்கிறது. கடல் அலைகளையும் அதன் அசைவையும் சந்திரன் நிர்ணயிக்கிறது. அதனால் கடல் தண்ணீர் தேங்குவதில்லை, என்றாலும் பெரிய கடல்களும் பூமியின் கண்டங்களுக்குள் வடியாமல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன.4

தண்ணீர்... நிறம், வாசனை மற்றும், சுவை இல்லாததொன்று, ஆனாலும் எந்த உயிரினங்களும் தண்ணீர் இல்லாமல் வாழவே முடியாது. செடிகள், விலங்குகள், மனிதர்களுக்குள் அதிகபட்சம் தண்ணீர் தான் இருக்கிறது (மனித சரீரத்தில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர் உள்ளது). உயிர் வாழ தண்ணீர் மிகவும் ஏற்றது; தண்ணீரின் பண்புகளை இங்கு பார்ப்போம்:

தண்ணீரின் கொதிநிலை உறைநிலை நடுவில் அதிகமான எல்லைக்கோடு இருக்கிறது. இந்த ஏற்றத்தாழ்வுள்ள வெப்ப நிலை கொண்ட சூழலில் வாழ தண்ணீர் உதவுகிறது, ஏனென்றால் அது நமது சரீரங்கள் 98.6 டிகிரி நிலையில் வைக்கிறது.

தண்ணீர் பொதுவான கரைக்கும் சக்தியுள்ளது. தண்ணீரின் இந்த பண்பு வெவ்வேறு இரசாயன, கனிமங்கள், ஊட்டச்சத்து நமது சரீரத்தில் உள்ள சிறிதான இரத்த நாளங்கள் வழியாக சரீரம் முழுவதும் கொண்டு செல்லுகிறது.5

தண்ணீர் வேதியியல் சார்பற்றது. அது கொண்டு செல்லும் பொருட்களை பாதிக்காமல், தண்ணீரானது உணவு, மருந்து, மற்று கனிமங்களை சரீரம் உட்கொள்ள வைக்கிறது.

செடிகளில்: தண்ணீர் ஈர்ப்பு சக்தியை மீறி மேல்நோக்கி சென்று செடிகளின் மற்றும் பெரிய மரங்களுக்கும் கூட உயிர்வாழ தண்ணீரையும் சத்துக்களையும் தருகிறது.

தண்ணீர் உரையும்போது, அது மேல் துடங்கி உறைந்துகொண்டே கீழ் செல்லுகிறது, ஆதினால் மீன்கள் குளிர்காலத்திலும் கூட உயிர் வாழ முடிகிறது.

பூமியிலுள்ள 97% தண்ணீர் கடலில் உள்ளது. ஆனால், நமது பூமியில் தண்ணீரில் இருந்து உப்பை நீக்கும் அமைப்பு உள்ளது, மற்றும் அந்த நல்ல தண்ணீர் பூமி எங்கும் வினியோகப்படுத்த படுகிறது.

நீராவியாகுதல் மூலமாக கடலில் இருக்கிற தண்ணீரிலிருந்து உப்பை நீக்கி, அந்த மேலே செல்லும் தண்ணீர் மேகமாக மாறி, காற்றினால் கொண்டு செல்லப்பட்டு, மழையாக பூமிக்கு திரும்புகிறது, மற்றும் அதினால் செடிகள், விலங்குகள், மனிதர்கள் பயணடைகிறார்கள். இது நமது கோளை தாங்குகிற மற்றும் சுத்தம் செய்து பகிர்ந்தளிக்கும் அமைப்பாகும், தண்ணீரை மீண்டும் உபயோகிக்க உதவும் அமைப்பாகும்.6

மனித மூளை...ஒரே நேரத்தில் ஆச்சரியமாக அதிகமான தகவல்களை செயல்முறைப்படுத்துகிறது. நீங்கள் பார்க்கும் எல்லா வண்ணங்கள் மற்றும் பொருட்களை, உங்களை சுற்றி உள்ள சீதோஷ்ண நிலை, தரை மற்றும் பாதத்திற்கு நடுவில் உள்ள அழுத்தம், உங்களை சுற்றிலும் இருக்கும் சத்தம், வாயின் வறட்சி, உங்கள் விசைப்பலகையின் தொட்டுணர்வு இவை எல்லாவற்றையும் உங்கள் மூளை எடுத்துக்கொள்ளுகிறது. உங்கள் மூளை உங்கள் எல்லா உணர்வுகளையும், எண்ணங்களையும், மற்றும் நினைவுகளை வைத்துக்கொள்ளுகிறது. அதே நேரத்தில் உங்கள் மூலையானது உங்கள் சரீரத்தின் செயல்களான உங்கள் சுவாச முறை, கண்ணிமை அசைவு, பசி, மற்றும் கை தசைகளின் அசைவை எல்லாம் கவனிக்கிறது.

மனித மூலையானது ஒரு வினாடியில் மில்லியனுக்கும் அதிகமான செய்திகளை செயலாற்றுகிறது.7 அந்த செய்திகளின் முக்கியத்தை உங்கள் மூளை ஆராய்ந்து பார்த்து முக்கியமில்லாதவைகளை வெளியேற்றுகிறது. அதனால் தான் நீங்கள் ஒரு காரியத்தில் சரியாக கவனம் செலுத்தவும் இயக்கவும் முடிகிறது. உங்கள் சரீரத்தின் மற்ற அவயவங்களை விட வித்தியாசமாக உங்களை மூளை கிரியை செய்கிறது. மூளைக்கு அறிவு இருக்கிறது, அதற்கு பகுத்தறிய முடிகிறது, உணர்வுகளை உண்டாக்க முடியும், சொப்பனம் கானவும் மற்றும் திட்டமிடவும் முடியும், மற்றும் மற்றவர்களோடு உறவு கொள்ள உதவுகிறது.

உங்கள் கண்… 7 மில்லியன் வண்ணங்களை வேறுபடுத்தி பார்க்கும் ஆற்றல் உடையது. அதற்க்கு தனியாக கவனம் செலுத்த முடியும் மற்றும் ஒரே நேரத்தில் 1.5 மில்லியன் செய்திகளை கையாலுகிறது.8 உயிரினங்களின் மாற்றங்களை பற்றி பரிணாமம் பேசுகிறது. ஆனால் பரிணாமதாள் மட்டும் கண் அல்லது மூளை எங்கு இருந்து உண்டானத்தென்று முழுமையாக விளக்கமுடியாது. உயிரினங்கள் உயர்தர பருபொருளில் இருந்து உண்டானது.

2. தேவன் இருக்கிறாரா? உலகத்திற்கு ஒரு ஆரம்பம் இருந்தது—அதை தோன்ற செய்தது எது?

நமது பிரபஞ்சம் ஆற்றல் மற்றும் ஒளியின் ஒரு மகத்தான வெடிப்பயினால் தொடங்கியது என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். இதுவே பெரு வெடிப்புக்கொள்கை: அண்டமும் (universe), வெளியும் (space), காலமும் (time) தோன்றினது இப்படியே.

விண்வெளியைப் பற்றி ஆய்வு செய்பவரான ராபர்ட் ஜஸ்ர்ரோவ் (தன்னை யதார்த்தவாதி என்று அழைத்துக்கொள்பவர்), இப்படி சொல்லுகிறார்: “பிரபஞ்சத்தில் சம்பவித்த எல்லாவற்றின் விதையும் அந்த முதல் நொடியிலே நடப்பட்டதாகும்: எல்லா நட்சத்திரங்கள், எல்லா கோள்கள், மற்றும் எல்லா உயிரணுக்களும் வெடித்தல் நடந்த அந்தமாத்திரத்தில் உண்டான நிகழ்வுகளின் முடிவால் தோன்றப்பட்டவைகளாகும். உலகம் அப்படி சடுதியாய் தோன்றினது. அது நடந்ததின் காரணம் என்ன என்று எங்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.”9

நோபல் பரிசு பெற்ற ஸ்டீவன் வைந்‌பர்க் இப்படி சொல்லுகிறார், இந்த வெடிப்பின்போது “பிரபஞ்சத்தில் நூறு ஆயிரக்கணக்கான மில்லியன் டிகிரி சென்டிகிரேட் வெப்பம் இருந்தது மற்றும் பிரபஞ்சத்தில் ஒளி நிறைந்தது.”10

உலகம் எப்போதும் இருந்த ஒன்றல்ல. அதற்கு ஒரு துவக்கம் இருந்தது… அதை தோன்ற செய்தது எது? இந்த வெளிச்சம் மற்றும் பருபொருள் எப்படி திடீரென வெடித்தது என்பதற்கான விளக்கம் விஞ்ஞானிகளிடம் இல்லை.

3. தேவன் இருக்கிறாரா? இந்த உலகம் சரி நிலையான இயற்கையின் விதிகளின்படி செயல்படுகின்றது. ஏன் அப்படி செயல்படுகிறது?

வாழ்க்கையில் அநேகமான காரியங்கள் நிச்சயமற்றதாக தோன்றலாம், ஆனால் நாம் அனுபவிக்கும் நல்ல காரியங்களை கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்: புவி ஈர்ப்பு சக்தி நிலையாக உள்ளது, அடுப்பில் இருந்து இறக்கி வைத்த சூடான காப்பி கொஞ்ச நேரத்தில் ஆறி விடுகிறது, அதே 24 மணி நேரம் பூமி சுழல்கிறது, மற்றும் ஒளியின் வேகதை, பூமியிலும் நட்சத்திர மண்டலத்திலும் மாற்ற முடியாததாகும்.

இந்த மாற்றப்படாத இயற்கையின் விதிகளை நாம் எப்படி அடையாளம் காண முடியும்? ஏன் இந்த பிரபஞ்சம் இவ்வளவு ஒழுங்கான மற்றும் நம்பக்கூடியதாக இருக்க முடிகிறது?

“இது எவ்வளவு வினோதமானதென்பதை பார்த்து விஞ்ஞானிகள் ஆச்சரியப்படுகின்றனர். பிரபஞ்சம் விதிகளுக்கு கட்டுப்படுகிறதென்று அறிய தர்க்கசாஸ்திரம் வேண்டியதில்லை, அது ஒரு கணிததின் விதிகளை கடைப்பிடிப்பது போல. ஆனால் ஆச்சரியம் உண்டாக்கும் காரணம் என்னவென்றால், பிர்பஞ்சம் இப்படி செயல்படவேண்டிய தேவை இல்லை. உடனடியாக, நொடிக்கு நொடி மாறும் நிலைகளுள்ள உலகத்தை நம்மால் கற்பனை செய்ய முடியும். பொருட்கள் உடனடியாக தோன்றும் அல்லது மறையும் உலகத்தையும் கற்பனை செய்ய கூடும்.”11

குவாண்டம் மின்னியக்கவிசையிலில் நோபல் பரிசு பெற்ற ரிச்சர்ட் பைன்மான் சொல்லுகிறார், “பிரபஞ்சம் ஏன் கணிதத்திற்குரியதாக இருப்பது என்பதுவே ஒரு பரம இரகசியம்...விதிகள் இருக்கிறது என்ற உன்மையே ஒரு அற்புதமாகும்.”12

4. தேவன் இருக்கிறாரா? டி.என்.ஏ குறியீடு தகவல் தருகிறது, ஒரு உயிரனுவின் நடத்தையை திட்டுமிடுகிறது

அனைத்து வழிமுறைகளை, அனைத்துவகை கற்பித்தல், அனைத்து பயிற்சியும் ஒரு நோக்கத்துடன் வருகிறது. ஒரு கற்பிப்பு கையேடு எழுதுகிறவர் ஒரு நோக்கதுடன் அப்படிச் செய்கிறார். நம் சரீரத்தில் உள்ள உயிரணு ஒவ்வொன்றிலும் மிக விரிவான கற்பிப்பு குறியீடு உள்ளது, ஆதவது ஒரு கணினி நிரல் (கஂப்யூடர் ப்ரோக்ர்யாம்) போல, என்று உங்களுக்கு தெரியுமா?

உங்களுக்கு தெரிந்தபடி, கணினி நிரல் (கஂப்யூடர் ப்ரோக்ர்யாம்) ஒன்று மற்றும் பூஜ்யங்களை கொண்டது, இதைப்போல: 110010101011000. அவைகள் அடுக்கப்பட்ட விதம் ஒரு கணினி நிரல் (computer program) செய்யவேண்டியதை கற்ப்பிக்கிறது.நம் சரீரத்தில் உள்ள உயிரணுவில் உள்ள குறியீடும் இதை போலவே செய்கிறது. அதில் நான்கு ரசாயனங்கள் உள்ளன. இதை விஞ்ஞானிகள் ஆங்கில எழுத்துகளான A, T, G, மற்றும் C என்று குறித்துள்ளனர். அது மனிதனின் உயிரணுவில் இப்படியாக வகைபடுத்தபட்டுள்ளது: CGTGTGACTCGCTCCTGAT. ஒவ்வொரு உயிரணுவிலும் மூன்று ஆங்கில எழுத்துக்கள் இருக்கின்றன!

சில காரணங்களுக்காக உங்கள் மொபைல் போன் “பீப்” செய்ய அமைக்கிறது போல, டி.என.ஏ-வும் உயிரணுவை கற்ப்பிக்கிறது. டி.என.ஏ. என்பது மூன்று பில்லியன் எழுத்துக்களடங்கிய நிகழ்ச்சி நிரல் ஆகும். அது ஒரு கற்பிப்பு கையேடு.13

இது ஏன் இவ்வளவு ஆச்சரியமானது? இந்த தகவல் நிரல் எப்படி ஒவ்வொரு மனித உயிரணுவிலும் உண்டானது? என்ற கேள்வியை எழுப்புகிறது. இவைகள் வெறும் ரசாயனங்கள் அல்ல. இவைகள் ஒரு நபரின் சரீரம் எப்படி வளர வேண்டும் என்று கற்பிக்கும் ரசாயனங்கள் ஆகும். இந்த கற்பிக்கும் நிரல்கள் எப்படி உண்டாயிற்றென்று அறிய இயற்கையான உயிரியல் காரணங்கள் இல்லை. ஒருவர் இதை திட்டமிட்டு நிர்ணயிக்காமல் இப்படிப்பட்ட தெளிவான கற்பித்தல் உண்டாகவே முடியாது.

5. தேவன் இருக்கிறாரா? தேவன் நம்மை பின்தொடர்ந்து வருகிறததினால் தேவன் இருக்கிறார் என்று நாம் அறிகிறோம். நாம் அவரிடம் வரவேண்டும் என்று அவர் தொடர்ந்து நம்மை நாடுகிறார்.

ஒரு காலத்தில் நான் நார்திகனாக இருந்தேன். மற்ற அநேக நாத்திகர்கள் போல, ஜனங்கள் தேவன் இருக்கிறார் என நம்பும் காரியம் எனக்கு வேதனையாக இருந்தது. நாத்திகர்களாக நாம் இல்லை என்று நம்பும் ஒன்றை மறுக்க ஏன் நமது நேரம், கவனம், மற்றும் பெலனை அதிக அளவில் செலுத்துகிறோம்? எதினால் நாம் அப்படி செய்கிறோம்? நான் நார்திகளாக இருக்கும்போது, நான் இந்த பாவப்பட்ட, தவறான நம்பிக்கையுள்ள ஜனங்கள் மேல் அக்கறை காட்டி, அவர்கள் நம்புவது உன்மையல்ல என்று உணர வேண்டும் என்பதன் நோக்காத்திற்காகவே விவாத்திப்பேன். நான் இப்படி மறுத்து பேசுவதற்கு வேறொரு நோக்கமும் எனக்கு இருந்தது. தேவனை நம்புகிறவர்களிடம் நான் சவால் விட்டு பேசும்போது, தேவன் இருக்கிறார் என்று என்னை நம்பவைக்க அவர்கள் முடியுமா என்று ஆர்வமுற்றிருந்தேன். என் தேடலின் ஒரு நோக்கம் என்னவென்றாள், இந்த தேவனை பற்றிய கேள்வியில் இருந்து விடுதலை பெறுவதாகும். விசுவாசிகள் தாங்கள் நம்புவது பொய் என்று என்னால் முற்றும் நிரூபிக்க முடிந்தது என்றால், என் வாழ்க்கையில் நான் சுயாதீனமாக எனக்கு பிடித்ததை செய்து வாழலாம் என்று எண்ணினேன்.

இந்த கேள்வி என் மனதை பாரப்படுத்தியத்தின் காரணம் என்னவென்றால் தேவன் இந்த விஷயத்தை எனக்குள் வைத்தபடியால் என்பதை நான் அறியாமல் இருந்தேன். நாம் அவரை அறிய வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார் என்பதை நான் அறிந்துகொண்டேன். தேவன் இருக்கிறார் என்ற திருஷ்டாந்தங்களை தேவன் நம்மை சுற்றிலும் வைத்து இருக்கிறது மட்டும் அல்லாமல், அவர் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வியை நமக்கு முன் வைத்திருக்கிறார். நாம் அவரை அறிய வேண்டும் என்ற நோக்கத்துக்காக உண்டாக்கப்பட்டவர்கள். தேவன் இருக்கிறார் என்று நான் அங்கீகரித்த நாளில், என் ஜெபம் இப்படி துடங்கியது: “சரி தேவனே, நீர் ஜெயித்தீர்.” தேவன் இருக்கிறார் என்று ஜனங்கள் நம்புவது நாத்திகர்களை சஞ்சலப்படுத்துவத்தின் காரணம் என்னவென்றால், தேவன் அவர்களை தொடர்ந்து வருவதின் நிமித்தமாகும்.

இதை நான் மட்டும் அனுபவிக்கவில்லை. பொது உடைமைக் கோட்பாடு மற்றும் தத்துவ ஆசிரியரான மால்கம் முக்கேரிட்ஜ் எழுதி இருக்கிறார்: “நான் தேடுகின்ற அதே நேரத்திலேயே எப்படியோ நான் தொடரப்படுகின்றேன் என்ற உணர்வு எனக்கு இருந்தது.”

ஸீ.யஸ். லூயிஸ் இப்படி சொன்னார்: ஒவ்வொரு இரவிலும் வேலை செய்யும்போது ஒரே ஒரு வினாடி என் மூளை வேலையை பற்றி சிந்திப்தை நிறுத்தின உடனே, என் வாழ்க்கையில் சந்திக்கக்கூடாது என்ற ஒருவர் என்னை தொடர்ந்து, விடாமல் அனுகுவதை உணர்வேன். அப்போது நான் தேவனே தேவன் என்று ஒத்துக்கொண்டு, முழங்காற்படியிட்டு ஜெபித்தேன்: ஒருவேளை, அன்று இரவு இங்கிலாந்திலேயே ஒரு மனத்தளர்வுற்ற விருப்பமற்ற மனமாற்றமடைந்தவன்.”

பின்னர், அவர் இயேசுவை அறிந்ததின் விளைவாக, லூயிஸ் ஒரு புத்தகம் எழுதினார்: “சந்தோஷத்தால் ஆச்சரியமாக்கப்படேன்” (“Surprised by Joy"). தேவனை ஏற்றுக்கொண்ட பிறகு நானும் பெரிதாக ஒன்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் மாதங்கள் செல்ல செல்ல, அவர் என்மேல் வைத்த அன்பை பார்த்து வியந்து போனேன்.

6. தேவன் இருக்கிறாரா? தேவன் தம்மை வெளிப்படுத்தின எல்லாவிதத்தை விட, இயேசு கிறிஸ்து மட்டுமே தேவன் தம்மை வெளிப்படுத்தும் மிக தெளிவான, திட்டவட்டமான சொருபமானவர்.

ஏன் இயேசு? உலகத்தில் உள்ள முக்கிய மதங்களை பாருங்கள். புத்தர், முகமது, கன்பியூசியஸ் மற்றும் மோசே ஆகியோர் தங்களை போதகர்கள் அல்லது தீர்க்கதரிசிகள் என்று அழைத்துகொண்டனர். ஒருவரும் தாங்கள் தேவனுக்கு சமமானவர்கள் என்று சொல்லவே இல்லை. ஆனால் இயேசு அப்படி சொன்னார். இதுவே மற்ற எல்லோரை விட இயேசுவை வேறுபடுத்துகிற ஒன்று. அவர் தேவன் இருக்கிறார் என்றும் நீங்கள் அவரை பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்றும் அவர் சொன்னார். அவர் தனது தகப்பனை பற்றி பேசி இருந்தாலும், அது அவர் வேறு, இயேசு வேறு என்ற நிலையை குறிப்பிடுகிறதல்ல மாறாக அது நெருங்கிய உறவை குறிப்பிடுகிறது. அவரை பார்த்தவர்கள் பிதாவை பார்த்தவர்கள் என்றும் அவரை நம்புகிறவர்கள் பிதாவை நம்புகிறவர்கள் என்றும் அவர் சொன்னார்.

அவர் சொன்னார், “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.”14 தேவனுக்கடுத்த குணாதிசயங்கள் உடையவராக இருந்தார்: அவரால் ஜனங்களின் பாவங்களை மன்னிக்கவும், பாவத்தினின்று ஜனங்களை விடுவிக்கவும், அவர்களுக்கு பரிபூரண ஜீவனை கொடுக்கவும், அவரை நம்புகிறவர்களுக்கு நித்திய ஜீவனை அளிக்கவும் முடியும் என்று சொன்னார். மற்ற எல்லா போதகர்களும் அவர்கள் வார்த்தைகளை ஜனங்களுக்கு சுட்டிக்காட்டினார்கள், ஆனால் இயேசுவோ தம்மை சுட்டிக்காட்டினார். “என் வார்த்தைகளை பின்பற்றுங்கள் அப்போது சத்தியத்தை கண்டடைவீர்கள்” என்று அவர் சொல்லவில்லை. மாறாக, அவர் சொன்னது, “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.”15

தான் தேவன் என்று நிரூபிக்க இயேசு என்ன ஆதாரத்தை தந்தார்? மனிதர்களால் செய்யமுடியாததை அவர் செய்தார்.

அவர் ஜனங்களை...குருடர், ஊனமுற்றோர், செவிடர்களை சுகமாக்கினார், மரித்த இரண்டு பேரை எழுப்பினார், எல்லாவற்றின் மேல் அவருக்கு அதிகாரம் இருந்தது...ஆயிரக்கணக்கான மக்கள் சாப்பிடும் அளவிற்க்கு ஆகாரத்தை பெருகப்பன்ணினார். இயற்கையில் அற்புதங்களை செய்தார்...தண்ணீர் மேல் நடந்தார், காற்றையும் கடலையும் அமைதலாக்கினார். இயேசு சென்ற இடத்தில் எல்லாம் ஜனங்கள் அவரை பின் தொடர்ந்தார்கள். ஏனென்றால், அவர் ஜனங்களின் தேவைகளை அற்புதமாக சந்தித்தபடியால். என்னை விசுவாசிக்கா விட்டாலும், என் கிரியைகளை பார்த்து என்னை விசுவாசியுங்கள் என்றார்.16

தேவன் அன்புள்ளவர், சாந்தமுள்ளவர், நாம் குறைகளையும் சுயநலத்தையும் அறிந்தவர், என்றாலும் நம்மோடு உறவுக்கொள்ள விரும்புகிறவா் என்பதை இயேசு காண்பித்தார். தேவன் நம்மை பாவிகள் என்றும், தண்டிக்க படத்தக்கவர்கள் என்றும் அறிந்திருந்த போதும், அவர் அன்பின் நிமித்தம் நமக்காக வேறொரு திட்டத்தை அவர் தீட்டினதை இயேசு வெளிப்படுத்தினார். தேவன் நமக்காக மனு உருவெடுத்து நம் பாவத்திற்கான தன்டனையை தாமே ஏற்றுக்கொண்டார். வேடிக்கைக்குரியதாக தோன்றுகிறதா? சிலவேளை, நல்ல தகப்பன்மார்கள் தங்கள் பிள்ளையின் புற்றுநோயை தாங்கள் எடுத்து பிள்ளை சுகமடைய நினைப்பார்கள். தேவன் நம்மை முதலாவதாக நேசித்ததினால்தான் நாம் அவரை நேசிக்கிறோம் என்று வேதம் சொல்லுகிறது.

நாம் மன்னிப்படைய அவர் நம் இடத்தில் மரித்தார். உலகில் நாம் காணும் மற்ற எல்லா மதங்களில் பார்க்காத ஒன்றை இயேசுவில் பார்க்கலாம். தேவன் இயேசு மூலமாக மனிதர்களுக்கு கைகொடுப்பது அவரோடு உறவு கொள்ள வழி உண்டாக்கினதையும் பார்க்கலாம். இயேசுவானவர் தெய்வீக அன்பின் வடிவானவர்.

அவர் நம் தேவைகளை சந்திக்கிறார் மற்றும் அவரன்டை நம்மை சேர்த்துகொள்கிறார். அவர் மரித்து உயிர்த்தெழுந்ததினால், நமக்கு புதிய வாழ்க்கையை இன்றும் தருகிறார். நாம் மன்னிப்படைய முடியும், தேவனால் முற்றும் அங்கீகரிக்க பட முடியும், மற்றும் தேவனால் அன்பு கூறப்பட முடியும். அவர் சொல்லுகிறார், “ஆம் அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருண்யத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன்.”17 இதுவே தேவன், செயலில் காட்டுபவர்.

தேவன் இருக்கிறாரா? நீங்கள் அதை அறியவேண்டுமானால் இயேசுவை ஆராய்ந்து பாருங்கள். “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்”18 என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அவரை விசுவாசிக்கும்படி தேவன் நம்மை வலியுறுத்துவதில்லை, அவரால் அதை செய்ய முடியும் என்றாலும் அப்படி செய்வதில்லை. ஆனால் நாமே விருப்பதோடு அவருக்கு பதிலளிக்கும்படிக்கான அநேக திருஷ்டாந்தங்களை வைத்திருக்கிறார். சூரியனுக்கும் பூமிக்கும் இருக்கும் சரியான தூரம், தண்ணீரில் உள்ள ரசாயனங்களின் பண்புகள், டி.என.ஏ., தேவனை அறிந்த ஜனங்கள், தேவன் உன்மையிலேயே இருக்கிறாரா என்பதை அறியும் வரை நம் உள்ளங்களிலும் மனதிலும் இருக்கும் நச்சரிப்பு, தேவனை இயேசு கிறிஸ்து மூலமாக அறிவதற்கு இருக்கும் விருப்பம் இவைகளெல்லாம் தேவன் இருக்கிறார் என்பதை காட்டுகிறது. நீங்கள் இயேசுவை இன்னும் அறிந்து அவரை விசுவாசிக்க வேண்டும் என்று விரும்பினால், குருட்டு நம்பிக்கைக்கு அப்பால் என்ற கட்டுரையை பார்க்கவும்.

தேவனோடு உறவை ஆரம்பிக்க நீங்கள் விரும்பினால், இப்போதே அதை செய்யலாம்.

தீர்மானம் உங்களுடையது மட்டுமே, வலியுறுத்தல் இல்லை. ஆனால் நீங்கள் தேவனால் மன்னிக்கப்பட்டு அவரோடு உறவுகொள்ள விரும்பினால், இப்போதே அதை செய்யலாம்: உங்களை மன்னித்து அவர் உங்கள் வாழ்க்கையில் வர அவரிடம் கேளுங்கள். இயேசு சொன்னார், “:இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவை திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசி[ப்பேண்].”19 நீங்கள் அவரை ஏற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள், ஆனால் அதை எப்படி சொல்வது என்று தெரியாமல் இருந்தால், இது உங்களுக்கு உதவும்: “ இயேசுவே, என் பாவத்திற்காக நீர் மரித்ததற்காக உமக்கு நன்றி. உமக்கு என் வாழ்க்கை தெரியும் மற்றும் எனக்கு உமது மன்னிப்பு தேவை. இப்போதே என்னை மன்னித்து என் வாழ்வில் வாரும். நித்திய வழியை அறிய நான் விரும்புகிறேன். என் வாழ்க்கையில் இப்போதே வாரும். என்னோடு உறவுகொள்ள நீர் விரும்பினதற்க்காக உமக்கு நன்றி. ஆமென்.”

தேவனோடு நமக்கு உள்ள இந்த உறவை தேவன் நிரந்தர உறவாக பார்க்கிறார். அவரை விசுவாசிக்கிறவர்களை பற்றி அவர் இப்படி சொல்லுகிறார்: “என் ஆடுகள் என் சத்தத்திற்கு செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது.”20

இந்த எல்லா உண்மைகளை பார்த்த பிறகு நாம் ஒரு முடிவுக்குள் வருகிறோம்: ஒரு அன்புள்ள தேவன் இருக்கிறார் மற்றும் நாம் அவரை நெருங்கிய விதத்தில் அறிய விரும்புகிறார் என்பதே.

 நான் என் வாழ்வில் இயேசுவைக் கேட்டேன்(சிலப் பயனுள்ளத் தகவல்கள்ப் பின்வருமாறு)...
 நான் என் வாழ்வில் இயேசு வருமாரு வேண்டலாம்,மேலும் முழுமையாக விளக்குங்கள்
 எனக்கு ஒருக் கேள்வி உண்டு...

ஆசிரியரை பற்றி: மேரிலைந் ஆடாம்சன் அவர்கள் நாத்திகராக இருந்த போது அவர்களின் நெருங்கிய நன்பர் ஜெபதிற்கான பதில்களையும் வாழ்க்கையின் தரத்தை பற்றியும் தொடர்ந்து எதிர்த்து பேசுவார். அவர்கள் நண்பரின் நம்பிக்கைகளை சவால் செய்துகொண்டிருந்த இவருக்கு, தேவன் இருக்கிறார் என்று சுட்டிக்காட்டும் பல ஆதாரங்கள் ஆச்சரியமாக தோன்றினது. ஒரு வருடம் தங்களுக்குள்ளே கேள்வி கேட்ட பிறகு, தேவனை தனது வாழ்க்கையில் அனுமதித்தார். மற்றும் தேவன் மேல் உள்ள விசுவாசம் மிக உறுதியானதும் பயனளிக்கிறதுமாக கருதுகிறார்.

(1) ரோமர் 1:19-21 (2) எரேமியா 29:13-14 (3) ஆர்.இ.டி. க்லார்க், க்ரியேஷன் (லன்டன்: டின்டேல் ப்ரெஸ், 1946), பி. 20 (4) த வன்டர்ஸ் ஆஃப் கோட்ச் க்ரியேஷன் , மூடீ இந்ஸ்டிட்யூட் ஆஃப் ஸைந்ஸ் (சிகாகோ, ஐ.எல்) (5) ஐபிட். (6) ஐபிட். (7) ஐபிட். (8) ஹ்யூ டேவ்சன், ஃபிஸியாலஜீ ஆஃப் த ஐ, 5த் இ.டி. (ந்யூ யார்க்: மெக்ரவ் ஹில், 1991) (9) ராபர்ட் ஜஸ்ற்ரோவ்; "மெசேஜ் ஃப்ரம் ப்ரொஃபெசர் ராபர்ட் ஜஸ்ற்ரோவ்"; லீடர்யு.காம்; 2002. (10) ஸ்டீவன் வைந்‌பர்க்; த ஃபர்ச்ட் த்ரீ மிநிட்ச்: எ மாடர்ன் வ்யூ ஆஃப் த ஆரிஜின் ஆஃப் த யூநிவர்ஸ்; (பேசிக் புக்ஸ்,1988); பி 5. (11) திணேஷ் டி'சூஸா, வாட்ச் சோ க்ரேட் அபௌட் க்றிஸ்சியானிட்டீ; (ரெக்னெறி பப்லிஷிங், இங்க், 2007, சேப்டர் 11). (12) ரிச்சர்ட் ஃபேன்மன், த மீநிங்க் ஆஃப் இட் ஆல்: தாட்ஸ் ஆஃப் எ சிடிசன்-சைன்டிஸ்ட் (ந்யூ யார்க்: பேசிக் புக்ஸ், 1998), 43. (13) ஃப்ரான்ஸிஸ் ச். காலிந்ஸ், டைரெக்டர் ஆஃப் த ஹ்யூமன் ஜீநோம் ப்ராஜெக்ட், அண்ட் ஆதர் ஆஃப் த லாங்க்வேஜ் ஆஃப் கோட், (ஃப்ரீ ப்ரெஸ், ந்யூ யார்க், ந்.வை), 2006 (14) யோவான் 8:12 (15) யோவான் 14:6 (16) யோவான் 14:11 (17) எரேமியா 31:3 (18) யோவான் 3:16 (10) வெளி 3:20 (20) யோவான் 10:27-29.

இந்தக் கட்டுரையைப் பகிர  

TOP