வாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.
வாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.

யார்க் கடவுள்?

தேவன் யார்? அவர் எப்படி இருக்கிறார்? தேவனின் ஆறு பண்புகள்....

அவர் அறியப்படுபவர்.

இந்த உலகத்தை அதன் சகல பரிமாணங்களிலும் மற்றும் படைப்பின் விவரங்களோடு படைத்த தேவன் நம்மால் அறியப்படதக்கவர். அவரை பற்றி அவர் நமக்கு சொல்லுகிறதும் அன்றி, அவரை நாம் தனிப்பட்ட முறையில் அறியும்படி நம்மை அவரோடு உறவு கொள்ள வரவேற்கிறார். அவரை பற்றி மட்டும் அல்ல,அவரையே நெருங்கிய முறையில் அறிய முடியும்.

“ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்துமேன்மைபாராட்டவேண்டாம்; மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (எரேமியா 9: 23, 24).

அவர் அனுகத்தக்கவர்.

தேவனோடு பேசவும் மற்றும் நமது விஷயங்களில் அவரை இணைத்து உட்படுத்தி நம்மோடு தொடர்புக்கொள்ள அழைக்கிறார்.அவரை அனுக, முதலாவதாக நமது செயல்களை சீர்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.நாம் இறையியலில் சரியாகவோ அல்லது பரிசுத்தமாகவோ இருக்கவேண்டிய அவசியம் இல்லை.நாம் அவரிடம் செல்லும்போது நம்மை அன்போடு ஏற்றுகொள்வது அவரது குணமாகும்.

“தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்” (சங்கீதம் 145:18).

அவர் படைப்பவர்.

ஏற்கனவே இருக்கும் பொருட்கள் மற்றும் யோசணைகளில் இருந்து தான் நாம் எல்லாவற்றையும் உண்டுபன்னுகிறோம். ஆனால் தேவனோ தமது வார்த்தையின் மூலமாக உயிரினங்களையும், விண்மீன்களையும் படைபது மட்டுமல்ல,இன்றைய பிரச்சனைகளுக்கான தீர்வுகள் அவருடைய வாயின் வார்த்தையில் உண்டு. அவரே படைப்பவர், அவரது வல்லமையை நாம் அறிந்து கொள்ளவும், அவரை சார்ந்து கொள்ளவும், தேவன் விரும்புகிறார்.

“நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாயிருக்கிறார்; அவருடைய அறிவு அளவில்லாதது” (சங்கீதம் 147:5).
“எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்.
வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்” (சங்கீதம் 121:1,2).

அவர் மன்னிக்கிறவர்.

நாம் பாவம் செய்கிறோம். சில விஷயங்களை தேவனின் விருப்பத்தின்படி அல்லாமல் நமது சொந்த விருப்பத்தின்படி செய்கிறோம். அவர் இவற்றை பார்த்தும் அறிந்தும் இருக்கிறார்.தேவன் இந்த பாவங்களை அரிந்தும் அரியாமல் இருப்பது இல்லை; அவர் ஜனங்களை அவர்கள் பாவத்தினிமித்தம் நியாயம் தீர்க்கவும், ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவும் தயாராக இருக்கிறார்.எனினும், தேவன் மன்னிக்கிறவர் மற்றும் நாம் அவரோடு உறவுகொள்ளும் சமயத்தில் இருந்து நம்மை மன்னிக்கிறார். தேவனின் குமாரனான இயேசு, நமது பாவத்தின் பரிகாரத்தை தமது சிலுவை மரணத்தின் மூலம் செலுத்தினார். அவர் மரித்தோரில் இருந்து எழுந்து, நமக்கு மன்னிப்பை அருள்கிறார்.

“அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை….கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார்” (ரோமர் 3:22,26)

அவர் உண்மையானவர்

தனது எண்ணங்களையும், உணர்வுகளையும் உங்களுக்கு தெரிவிக்கும் ஒருவரை போல, தேவன் தம்மை பற்றி நமக்கு தெளிவாக சொல்லுகிறார்; ஆனால், அவர் எப்போதும் உண்மையானவர். அவர் அவரை பற்றி மற்றும் நம்மை பற்றி சொல்லும் எல்லா உண்மையான தகவல்களாகும். நமது எண்ணங்கள், சிந்தனைகள், மற்றும் கருத்துக்களை விட, தேவன் சொல்வது மிகவும் நேர்த்தியும் உண்மையானவைகள். நமக்கு அவர் சொல்லும் ஒவ்வொரு வாக்குதத்தங்களும், முற்றிலும் நம்பக்கூடியவைகள் ஏனெனில் அவர் சொல்வதை அவர் செய்வார்.

“உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும்.
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது” (சங்கீதம் 119:130,105).

அவரால் எல்லாம் செய்ய முடியும்.

எப்போதும், எல்லாவற்றிலும் 100% சரியாக இருக்க விருப்பம் உண்டா? தேவன் அப்படிபட்டவர். அவர் ஞானத்திற்கு எல்லை இல்லை. ஒரு நிலமையின் எல்லா அம்சங்களும், அதற்க்கு சம்மந்தப்பட்ட சரித்திரத்தையும் மற்றும் எதிர்கால நிகழ்வுகளையும், அவர் அறிந்திருக்கிறார். அவருக்கு நாம் ஆலோசனை தரவும் நமக்கு நலமானதை செய்ய அவருக்கு அறிவுறை சொல்லவும் வேண்டியது இல்லை. அவர் நன்மையானதை செய்வார். ஏனெனில் அவரால் நன்மை செய்ய முடியும் மற்றும் அவர் நோக்கங்கள் தூய்மையானது. அவரை நாம் நம்பும்போது, அவர் ஒருபோதும் தவறு செய்யமாட்டார் மற்றும் நம்மை ஏமாற்ற மாட்டார். அவர் எப்போதும், எல்லா சூழ்நிலைகளிலும் நமக்கு நன்மையானதையே செய்வார் என்று நாம் முற்றிலும் நம்பமுடியும்.

உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும்… (சங்கீதம் 25:3).


இதுவே கர்த்தர் தம்மை பற்றி சொல்லுகிறவைகள். இப்பொழுதே தேவனோடு உறவு கொள்ள துவங்குவதற்கு இது விவரிக்கிறது: தேவனை தனிப்பட்ட முறையில் அறிவது.

 கடவுளுடன் ஒரு உறவுத் தொடங்குவது எப்படி?
 எனக்கு ஒருக் கேள்வி உண்டு...
இந்தக் கட்டுரையைப் பகிர  

TOP