வாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.
வாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.

குருட்டு நம்பிக்கைக்கு அப்பால்

இயேசு யார்? இயேசு தேவனா? தம்மை பற்றி இயேசு என்ன சொன்னார் என்பதையும், தேவனுக்கு அவர் சமமானவர் என்பதையும், மற்றும் இயேசு எப்படி அதை நிரூபித்தார் என்பதையும் பாருங்கள்.

பவுல் ஏ. லிட்டில்

தேவன் இருக்கிறாரா இல்லையா என்பதும் அவர் எப்படிப்பட்டவர் என்பதையும் தேவன் தம்மை நமக்கு வெளிப்படுத்தாமல் நம்மால் நாமே அறிந்துகொள்ள முடியாது.

தேவன் அப்படி தம்மை வெளிப்படுத்தி இருக்கிறார் என்பதை அறிய சரித்திரத்தை சற்று ஆராய்ந்து பார்ப்போம். இதற்கு தெளிவான ஒரு தடயம் உண்டு. பாலஸ்தீன நாட்டில் ஒரு கிராமத்தில், 2,000 வருடங்களுக்கு முன்னார், ஒரு குழந்தை மாட்டு தொழுவத்தில் பிறந்தது. இன்று முழு உலகமும் இயேசுவின் பிறப்பை கொண்டாடுகிறார்கள், அது ஒரு நல்ல காரணத்திற்காக கொண்டாடுகிறார்கள்.

இயேசு தேவனா? இயேசு தம்மை தேவன் என்று சொன்னாரா?

“ஜனங்கள் அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்” என்றும் “அவர்… அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதி[த்தார்]1 என்றும் சொல்லப்படுகிறது.

மிக சீக்கிரத்தில் அவர் தம்மைக்குறித்து வியப்பதிர்ச்சியூட்டுகிற காரியங்களை சொல்ல துடங்கினார். ஒரு போதகர் அல்லது தீர்கதரிசியைவிட இயேசு மேன்மையானவர் என்று தம்மை குறித்து சொன்னார். அவர் தேவன் என்பதை தெளிவாக சொல்ல துடங்கினார். அவர் யார் என்பது அவர் போதனைகளின் மைய்யமான குறிப்பாக இருந்தது. அவரை பின்பற்றுவார்களை பார்த்து இந்த கேள்வியை கேட்டார்: “நான் யார் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள்?” பேதுரு அவரை பார்த்து “நீர் தேவனுடைய குமாரனான கிறிஸ்து”2 என்று சொன்னபோது இயேசு ஆச்சரியப்படவுமில்லை அவனை கடிந்து கொள்ளவும் இல்லை. மாறாக, அவனை பாராட்டினார்!

இயேசு அநேக நேரம் “என் பிதா” என்று சொல்லுவார், மற்றும் அந்த வார்த்தையின் தாக்கத்தை கேட்டவர்கள் புரிந்துகொண்டனர். ஆதலால் வேதத்தில் சொல்லப்பட்ட படி, “அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மை தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்.”3

வேறு ஒரு சந்தர்ப்பத்தில் “நானும் பிதாவும் ஒன்று” என்று அவர் சொன்னார். உடனடியாக மத அதிபர்கள் அவரை கல் எறிய வந்தார்கள். அப்போது இயேசு அவர்களை பார்த்து தான் செய்த எந்த நற்கிரியைகளின் நிமித்தம் தம் மேல் கல் எறிய பார்க்கிறார்கள் என்று கேட்டார். அவர்கள் சொன்னார்கள், “நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னை தேவன் என்று சொல்லி இவ்விதமாக தேவதூஷணஞ் சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள்.”4

இயேசு தேவனா? அவர் வாழ்க்கையை பாருங்கள்.

இயேசுவால் சுகமாக்கப்படும்படி ஒரு திமிர்வாதக்காரானை அவன் நண்பர்கள் வீட்டு கூரையை பிரித்து கீழே இரக்கினபோது, இயேசு அந்த மனிதனை பார்த்து “மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டன” என்று சொன்னார். அதற்க்கு மத அதிகாரிகள், “இந்த மனிதன் ஏன் இப்படி பேசுகிறார்? இவன் தேவ தூஷணம் சொல்லுகிறார்! தேவனை அல்லாமல் யாரால் பாவங்களை மன்னிக்க முடியும்?” என்றனர்.

இயேசு விசாரணைக்காக பிரதான ஆசாரியனிடம் அழைத்து சென்றபோது, அந்த பிரதான ஆசாரியன் அவரை பார்த்து, “நீ ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா?” என்று கேட்டபோது.

“நான் அவர்தான்” என்றும் “மனுஷகுமாரன் சர்வ வல்லவரின் வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள்” என்றும் இயேசு சொன்னார்.

அதார்க்கு பிரதான ஆசாரியன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, “இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன?” என்று கேட்டான். “தேவதூஷணத்தைக் கேட்டீர்களே,” என்று சொன்னான்.5

இயேசு தேவனோடு மிகவும் நெருங்கின தொடர்புகொண்டிருந்ததால், ஒரு நபர் அவரோடுள்ள அணுகுமுறையை தேவனோடு உள்ள அணுகுமுறைக்கு சமமானதாக கருதினார். ஆகையால், அவரை அறிந்தவர்கள் தேவனை அறிந்தவர்கள் என்றும்,6 அவரை கண்டது தேவனை கண்டதுபோலவும்,7 அவர்மேல் விசுவாசமாய் இருப்பது தேவனோடு விசுவாசமாக இருப்பது போலவும்,8 அவரை ஏற்றுக்கொள்வது தேவனை ஏற்றுக்கொள்வது போலவும்,9 அவரை வெறுப்பது தேவனை வெறுப்பது போலவும்,10 மற்றும் அவர் கனப்படுத்துவது தேவனை கனப்படுத்துவதாகும்11 என்று என்னப்பட்டது.

இயேசு தேவனா? இதைக்குறித்த விவரங்கள்.

கேள்வி என்னவென்றால், அவர் சொன்னது உண்மையா?

இயேசு தேவன் என்று சொன்னது பொய்யாக கூட இருக்கலாம். அல்லது அவர் தேவன் இல்லை என்று அறிந்திருந்தும், தமது வார்த்தைகளை கேட்டவர்கள் மேல் அதிகாரம் செலுத்தும்படி இப்படி சொல்லி ஏமாற்றினார் என்றும் இருக்கக்கூடும். சிலர் இந்த கருத்துள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர் தேவத்துவத்தை மறுக்கிறவர்கள் கூட அவர் ஒரு பெரிய தார்மீக போதகர் என்று எண்ணுகின்றனர். ஆனால் இந்த இரண்டு வாக்கியங்களும் எதிர்மறையானவை என்று அவர்கள் அறிந்துக்கொள்வதில்லை. அவரது போதனையில் மிக முக்கியமான குறிப்பாக இருந்த "தான் யார்" என்ற வார்த்தைகள் பொய்யாக இருந்தால், அவர் பெரிய தார்மீக போதகராக இருக்கவே முடியாது.

“கிறிஸ்து தம்மை பற்றி கூறிணவைகளை நாம் எதிர்கொள்ளும்போது, இந்த நான்கு சாத்தியங்கள் இருக்கக்கூடும்: அவர் பொய்யராக இருக்கக்கூடும், அவர் மன நிலை சரியில்லாதவராக இருக்கக்கூடும், அவர் ஓர் கட்டுகதையாக இருக்கக்கூடும் அல்லது அவர் சத்தியமானவராக இருக்கக்கூடும்.”

இதுவும் சாத்தியமாக இருக்க கூடும்: இயேசு தான் தேவன் என்பதை உண்மையாக நம்பி இருந்தார் ஆனால் அவர் சுய ஏமாற்றத்தினால் அப்படி எண்ணி இருக்கக்கூடும். இன்று நாம் உலகில், தன்னை தேவன் என்று சொல்லி கொள்கிறவர்களுக்கு ஒரு பெயர் உண்டு: முட்டாள்கள். ஆனால் இயேசுவின் வாழ்க்கையை பார்க்கும்போது, மனநிலை சரியில்லாத ஒருவரில் கானும் நிலை அற்ற அல்லது இயல்பு கடந்த நிலையோ இருந்ததாக எந்த ஆதாரமும் இல்லை. மாறாக, பிரச்சனை நேரத்திலும் மிக மன அமைதி உடையவராக பார்கிறோம்.

மூன்றாவதாக இந்த சாத்தியம் உண்டு: அவரை பின்பற்றும் உணர்ச்சிவசப்பட்ட நபர்கள், கேட்பதற்கு அவருக்கே ஆச்சரியமான வார்த்தைகளை அவர் வாயில் போட்டதாகவும் இருக்கக்கூடும். அவர் திரும்பி வந்தால், அவர்கள் சொன்னது உண்மையல்லவென்று மறுதலிபார் என்று நாம் நினைக்கலாம்.

ஆனால் இந்த கோட்பாடு உண்மையல்லவென்று நவீன தொல் பொருள் சாஸ்திரம் சொல்லுகிறது. இயேசுவை பற்றி எழுதப்பட்ட நான்கு வாழ்க்கை வரலாறும் அவரை பார்த்த, அவர் வார்த்தைகளை கேட்ட, அவரை பின்பற்றினவர்களால் எழுதப்பட்டவைகள். இயேசுவை கண்கூடாக பார்த்தவர்கள் தான் இந்த நான்கு சுவிசேஷங்களில் உள்ள உண்மைகளையும் விவரங்களையும் எழுதினார்கள். ஆகவே தான் முதலில் எழுதப்பட்ட மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்ற நான்கு சுவிசேஷங்கள் அதிகமாக பரவின, வாசிக்கப்பட்டன, மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தின. பின்னர் அநேக நூற்றாண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்ட சுவிசேஷங்கள் எடுக்கப்படவில்லை.

இயேசு ஒரு பொய்யரோ, அல்லது ஒரு முட்டாளோ, அல்லது சரித்திர உண்மைக்கு அப்பாற்பட்டவரோ இல்லை. அவர் தன்னை தேவன் என்று சொல்லும்போது உண்மையை தான் சொன்னார்.

இயேசு தேவனா? அதற்க்கு ஆதாரம் என்ன?

கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும்போது, வார்த்தையில் பேசுகிறது மிகவும் அர்த்தம் உள்ளதாக இருக்காது. பேச்சு சாதாரனமானது. யாரும் என்ன வேண்டுமென்றாலும் பேசலாம். அநேகர் தங்களை தேவன் என்று சொன்னவர்கள் உண்டு. நான் என்னை தேவன் என்று சொல்ல முடியும், நீங்களும் தேவன் என்று உங்களை சொல்லிக்கொள்ள முடியும், ஆனால் கேள்வி என்னவென்றால், "நாம் கூறுவது சத்தியம் என்பதற்கு என்ன ஆதாரங்கள் இருக்கின்றன." என்னை பொருத்தவரையில், நான் என்னை தேவன் என்று சொல்வது உண்மையல்ல என்று நிரூபிக்க 5 நிமிடங்கள் போதும். உங்களையும் அப்படியே தான்.

ஆனால் நசரேயனாகிய இயேசுவை பற்றி சொல்லும்போது, அது அவ்வளவு சுலபம் அல்ல. அவர் சொன்னது உண்மை என்று காட்ட அவருக்கு ஆதாரங்கள் இருந்தன. அவர் சொன்னார், "பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கும்படி அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள் என்றார்."12

இயேசுவின் வாழ்க்கை — அவர் தனித்தன்மை வாய்ந்த நீதியான குணம்

அவர் தன்னைப்பற்றி சொன்ன எல்லாம் அவர் குணத்திற்க்கு ஒத்துப்போயிற்று. அவர் வாழ்க்கை தரம் எப்படி இருந்ததென்றால், அவர் தனது எதிரிகளை பார்த்து இப்படி கேட்டார்: “என்னில் பாவம் உண்டென்று உங்களில் யாராவது சொல்லமுடியுமா?”13 அவர் குணத்தில் குற்றங்களை பார்க்க விரும்புகிறவர்களை பார்த்து அவர் இப்படி கேட்டபோது, ஒருவரும் அதற்கு பதில் சொல்லவே இல்லை.

இயேசு பிசாசினால் சோதிக்கப்பட்டார் என்று நாம் வாசிக்கிறோம், ஆனால் இயேசு தனது பாவத்தை அறிக்கை செய்தார் என்று நாம் எங்கும் வாசிப்பதில்லை. ஆனால் பாவத்தை அறிக்கை செய்யவேண்டும் என்று தன்னை பின்பற்றினவர்களுக்கு சொன்னார்.

அநேக சாதுக்கள் மற்றும் பரிசுத்தவான்களின் அனுபவங்களை பார்க்கிலும் இயேசுவின் இந்த பாவமற்ற வாழ்க்கை முற்றிலும் எதிர் மாறானதாக இருந்தது. ஆண்களும் பெண்களும் தேவனிடம் நெருங்க நெருங்க அவர்கள் தோல்விகள், பாவங்கள், குறைவுகளை பற்றி அதிகமாக வருந்துவார்கள். ஒரு பிரகாசிக்கும் ஒளியினிடம் வரும்போது, ஒருவன் தான் குளிக்கவேண்டும் என்பதை உணருவான். சாதாரண மனிதர்களுக்கும் நீதியின் பிரகாரத்தில் செல்லும்போது இப்படிதான் உணருவார்கள்.

யோவான், பவுல், பேதுரு, இவர்கள் சிறு வயதுமுதல் எல்லாரும் பாவம் செய்தார்கள் என்ற போதனையை கற்று வளர்ந்தவர்கள். ஆனால் இவர்களும் கூட இயேசுவின் பாவமற்ற வாழ்க்கையை பற்றி பேசுவது மிகவும் அதிர்ச்சியை உண்டுபன்னுகிறது. “அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை.”14

இயேசுவை சிலுவையில் அறைய கட்டளையிட்ட பிலாத்துவும் கூட “ஏன், என்ன பொல்லாப்புச் செய்தான் என்றான்.” கூட்டத்தின் அமளியை கேட்டபிறகு இப்படி முடிவெடுத்தான்: “இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன், நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.” ஜனக்கூட்டமோ இயேசுவை சிலுவையில் அறைய வேண்டும் (தன்னை தேவன் என்று சொன்னதால் தேவ தூஷணம் சொன்னதற்காக) என்று கேட்டுக்கொண்டார்கள். இயேசுவை சிலுவையில் அறைய அழைத்து சென்ற ரோம நூற்றுக்கு அதிபதி இப்படி சொன்னார்: “மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன்”15 என்றான்.

இயேசுவின் வாழ்க்கை—அவர் வியாதியஸ்தரை குணமாக்கினார்

இயேசு எப்போதும் வியாதிகள் மேலும் நோய்கள் மேலும் தமது வல்லமையை செயல்படுத்தினார். அவர் நொன்டியை நடக்க செய்தார், உமையை பேச செய்தார், குருடனை பார்க்க செய்தார். சில வியாதிகள் பிறப்பில் உண்டானவைகள்; அதை உள மருத்துவத்தாள் சரிப்படுத்த முடியாதவைகள். உதாரணமாக, இயேசு குருடனாக பிறந்தவனுக்கு பார்வை அளித்தார். அவன் ஆலயத்திற்க்கு வெளியே பிச்சைகேட்டு கொண்டிருந்தான். அதை எல்லாரும் அறிந்திருந்தார்கள். இயேசு அவனை குணமாக்கினதினால் அதிகாரிகள் அவனுக்கு என்ன நடந்தது என்று கேள்வி கேட்டுக்கொண்டு இருந்தார்கள். அவனோ “நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்” என்றான். அந்த சுகமளித்தவர் தேவகுமாரன் என்று மத அதிகாரிகள் கண்டுகொள்ளாததினால் அவன் ஆச்சரியப்பட்டு, “பிறவிக்குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தானென்று உலகமுண்டானதுமுதல் கேள்விப்பட்டதில்லையே” என்று சொன்னான்.16 அவனுக்கு அந்த ஆதாரம் வெளிப்படையாக இருந்தது.

இயேசுவின் வாழ்க்கை—அவர் இயற்கையை கட்டுப்படுத்த வல்லவராக இருந்தார்

இயேசு இயற்கை மேல் இயற்கைக்கு அப்பாற்பட்ட வல்லமையை செயல்படுத்தினார். வெறும் வார்த்தைகளால் அவர் கலிலேயா கடலில் சீரும் காற்றையும் கடலையும் அமைதலாக்கினார். படகில் இருந்தவர்கள், “இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே”17 என்று ஒருவரிடம் ஒருவர் கேட்டுக்கொண்டார்கள். அவர் ஒரு கல்யாணத்தில் தண்ணீரை திராட்ச ரசமாக மாற்றினார். அவர் ஐந்து அப்பத்தையும் இரண்டு மீன்களையும் பெருக செய்து 5,000 பேரை போஷித்தார். அவர் அழுதுக்கொண்டிருந்த விதவைக்கு மரித்துபோன அவளுடைய ஒரே மகனை மரித்தோரில் இருந்து எழுப்பி மீட்டுகொடுத்தார்.

இயேசுவின் சிநேகிதனான லாசரு மரித்துப்போய் நான்கு நாட்கள் கல்லறையில் வைக்கப்பட்டிருந்தான். அவனை பார்த்து இயேசு. “லாசருவே வெளியே வா!” என்று சொல்லி மரித்த அவனை எழுப்பினார். இதை அனேகர் கண்டார்கள். அவரை விரோதித்தவர்களும் இந்த அற்புதத்தை மறுக்கவில்லை. மாறாக, அவரை கொலை செய்ய தீர்மாணித்தார்கள். “நாம் இவனை இப்படி விட்டுவிட்டால், எல்லாரும் இவனை விசுவாசிப்பார்கள்” என்று சொன்னார்கள்.18

அவர் தன்னை பற்றி சொன்னதுபோல, இயேசு தேவனா?

இயேசு தேவன் என்ற மிகவும் மேலான ஆதாரம் என்னவென்றால் அவர் மரித்தோரில் இருந்து எழுந்தார். அவர் உயிரோடு இருக்கும்போதே, அவர் எப்படி கொலை செய்யப்படுவார் என்றும் மூன்று நாட்களுக்கு பின் உயிர்த்தெழுவார் என்றும் அவர் முன்னறிவித்தார்.

உண்மையாக இது ஒரு பெரிய சோதனை. இது நடந்தாலும் நடக்கலாம் அல்லது நடக்காமல் போகலாம். அவர் தேவ குமாரன் என்று தம்மை குறிப்பிட்டதை இது உறுதிப்படுத்தவும் முடியும் அல்லது அழிக்கவும் முடியும். எனக்கும் உங்களுக்கும் முக்கியமாக, இயேசு உயிரோடு எழும்புவது அவர் சொன்ன கீழ்க்காணும் வார்த்தைகளை உறுதிசெய்யவும் முடியும் அல்லது நகைப்புக்குறியதாகவும் மாறக்கூடும்.

“நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்.”19 “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.”20 நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்.”21

மற்றும் அவர் வார்த்தைகளில் அதற்கு ஆதாரத்தையும் தருகிறார், “மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றும், அவர்கள் அவரைக் கொன்று போடுவார்கள் என்றும்; கொல்லப்பட்டு, மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார் என்றும்”22 சொன்னார்.

அதன் அர்த்தம் என்ன?

கிறிஸ்து உயிர்த்தெழுந்ததினால், தேவன் இருக்கிறார் என்று, அவர் எப்படி இருக்கிறார் என்று, அவரை தனிப்பட்ட விதத்தில் எப்படி அறிய முடியும் என்பதையும் நாம் நிச்சயமாக அறிந்திருக்கிறோம். இந்த உலகத்திற்கே அர்த்தமும் நோக்கமும் உண்டாகிறது, மற்றும் இந்த உயிருள்ள தேவனை நம் வாழ்நாளில் அனுபவிக்க முடிகிறது.

மாறாக, கிறிஸ்து உயிர்த்தெழவில்லை என்றால், கிறிஸ்தவம் ஒரு உண்மையானதாகவும் சரியானதாகவும் இருக்காது. சிங்கங்களுக்கு இரயாகும்படி பாட்டு பாடிகொண்டே போன இரத்த சாட்சிகள், தங்கள் வாழ்க்கையை சுவிசேஷத்திற்கென்று அர்ப்ணித்த மிஷ்னரிகள் எல்லாம் ஏமாந்துபோன மூடர்களாக இருந்திருப்பார்கள்.

மிக பெரிய ஆபோஸ்த்தலனான பவுலும் இப்படி எழுதினார்: “கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா.”23 பவுல் தனது முழு வழக்கையும் கிறிஸ்துவின் சரீர உயிர்மீட்சியின் அடிபடையில் வைத்தார்.

இயேசு தேவன் என்று நிரூபித்தாரா?

இயேசுவின் உயிர்த்தெழுதலின் ஆதாரத்தை பார்க்கலாம்.

இயேசு செய்த அற்புதங்களை பார்க்கும்போது, அவர் சிலுவையை தவிர்திருக்க முடியும். ஆனால் அவர் சிலுவையை தெரிந்துகொண்டார். அவர் கைது செய்யப்படுவதற்கு முன் அவர் இப்படி சொன்னார், “ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரமுண்டு.”24

அவர் கைது செய்யப்படும்போது, இயேசுவின் சிநேகிதனான பேதுரு அவரை பாதுகாக்க முயற்சித்தபோது, இயேசு பேதுருவை பார்த்து, “இயேசு அவனை நோக்கி: உன் பட்டயத்தை திரும்ப அதின் உறையிலே போடு… நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா?”25 அவருக்கு அப்படிப்பட்ட வல்லமை வானத்திலும் பூமியிலும் இருந்தது. ஆனால் இயேசுவே தான் விருப்பத்தோடு மரணத்தை சந்தித்தார்.

இயேசு சிலுவையில் அறையப்பட்டதும் அவர் அடக்கமும்.

இயேசு பகீரங்கமாக சிலுவையில் அறையப்பட்டு மரித்தார். அது பல நூற்றாண்டுகளாக ரோம அரசாங்கம் உபயோகித்துவந்த தண்டனையாகும். இயேசு மீது வந்த குற்றசாட்டு தேவதூஷனமாகும் (அவர் தன்னை தேவன் என்று கூறியதாகும்). நம் பாவத்தை பரிகரிக்கவே அவர் மரித்தார் என்று இயேசு சொன்னார்.

“பேச்சு சாதாரனமானது. யாரும் என்ன வேண்டுமென்றாலும் பேசலாம். … ஆனால் நசரேயனாகிய இயேசுவை பற்றி சொல்லும்போது, அவர் சொன்னது உண்மை என்று காட்ட அவருக்கு ஆதாரங்கள் இருந்தன.”

அநேக கயிறுகள் உள்ள சாட்டையினால் அடிக்கப்பட்டார்; அந்த சாட்டையின் நுனிகளில் உலோகமும் எலும்பு துண்டுகளும் இருந்தன. ஒரு முள் கிரீடம் போல செய்து அதை அவர் தலையின் மேல் வைத்து அடித்தார்கள். எருசலேமுக்கு வெளியே இருக்கும் ஒரு கொலை செய்யப்படுகிற மலைக்கு அவரை வற்புறுத்தி நடத்தி சென்றார்கள். அவரை ஒரு சிலுவையின் மேல் கிடத்தி, கைகளிலும் கால்களிலும் ஆணிகளை துளைத்தார்கள். அங்கே அவர் மரிக்கும் வரை தொங்கினார். ஒரு ஈட்டியை அவர் விலாவில் குத்தி அவர் மரித்தார் என்பதை உறுதி செய்தனர்.

அவர் சரீரம் சிலுவையில் இருந்து இரக்கப்பட்டு, வாசனை திரவியங்களால் மூடப்பட்ட மெல்லிய துணிகளால் சுற்றப்பட்டது. ஒரு கற்பாறை கல்லறையில் அவர் சரீரத்தை வைத்தார்கள். மற்றும் அதன் வாசலை அடைக்க, ஒரு பெரிய கல்லை அதன் வாசல் அருகே வைத்தார்கள்.

இயேசு மூன்றாம் நாள் உயிரோடு எழும்புவேன் என்றதாக சொன்னதை எல்லாரும் அறிந்திருந்தார்கள். ஆகவே பயிற்சிப்பெற்ற ரோம போர் சேவகர்களை அந்த கல்லறையை காக்க நிறுத்தினார்கள். ஒரு ரோம முத்திரையும் போட்டு அது அரசாங்கத்தின் சொத்து என்றார்கள்.

மூன்று நாட்களுக்கு பின், அந்த கல்லறை வெருமையாக இருந்தது.

இவை எல்லாம் செய்த பிறகும் கூட, மூன்று நாட்களுக்கு பின் அந்த முத்திரை திறக்கப்பட்டு இருந்தது. அந்த சரீரம் காணப்படவில்லை. சரீரத்தை சுற்றி வைத்த வஸ்திரங்கள் மட்டும் இருந்தது. முக்கியமாக ஒன்றை கவனிக்க வேண்டும்: இயேசுவின் சீடர்களும் அவரை குற்றப்படுத்தினவர்களும் கல்லறை காலியாக இருந்ததையும் அவர் சரீரம் காணாமல் போனதையும் ஒத்துகொண்டார்கள்.

முதலாவது, அந்த போர் சேவகர்கள் நித்திரை செய்யும்போது அவர் சீடர்கள் அவர் சரீரத்தை திருடினார்கள் என்று சொன்னார்கள். ஆனால் அது அர்த்தமற்றதாக இருந்தது. ஏனென்றால், மிகவும் பயிற்சிப்பெற்ற ரோம சேவகர்களின் கூட்டம் அந்த கல்லறையை காத்துக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் தூங்கினால் மரணதண்டனை அடைவார்கள்.

மட்டுமல்லாமல், ஒவ்வொரு சீடர்களும் (தனித்தனியாக ஒருவரை விட்டு ஒருவர் பிரிக்கப்பட்ட நிலையில்) துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள்: காரணம் என்னவென்றால் அவர் எல்லாரும் இயேசு மரித்தோரில் இருந்து எழுந்து உயிரோடு இருக்கிறார் என்றதற்காக. பெண்களும் ஆண்களும் அவர்கள் உண்மை என்று நம்புகிற ஒன்றுக்காக தான் மரிக்க துனிவார்கள், சிலவேளை அது பொய்யாக இருக்கவும் சாத்தியம் உண்டு. ஆனால் பொய்யானது என்று அவர்கள் அறிந்த ஒன்றுக்காக யாரும் மரிப்பதில்லை. ஒருவன் தன் மரணப்படுக்கையில் உண்மையை சொல்லுவான்.

அதிகாரிகள் அவர் சரீரத்தை மாற்றி இருக்க கூடும்? ஆனால் அவர்கள் அல்லவா ஜனங்கள் இயேசுவை விசுவாசிக்க கூடாது என்று அவரை சிலுவையில் அறைந்தார்கள். அதனால் அதுவும் ஒரு பெலனற்ற தர்க்கம். அவர்களிடம் இயேசுவின் சடலம் இருந்திருந்தால், அவர்கள் அதை எருசலேமின் வீதிகளில் கொண்டு சென்று இயேசு மரித்து தான் இருக்கிறார் என்று நிரூபித்து கிறிஸ்தவத்தை ஆரம்பத்திலேயே அழித்திருக்க கூடும் அல்லவா. அவர்களிடம் அவரின் சரீரம் இருக்கவில்லை. அதுதான் உண்மை.

மற்றொரு வாதம் இதுவே: அந்த வேதனையிலும் சஞ்சலத்திலும் இருந்த ஸ்திரீகள் தங்கள் வழியை மறந்து அதிகாலை வெளிச்சம் குறைந்ததாக இருந்ததால் மற்ற ஏதோ ஒரு கல்லறையில் போய் பார்த்திர்பார்கள் என்பதாகும். ஆனால், அவர்கள் தவறான கல்லறையில் சென்று பார்த்திருந்தால், ஏன் அந்த பிரதான ஆசாரியர்களும் இந்த விசுவாசத்தின் விரோதிகளான மற்றவர்களும் சரியான கல்லறைக்கு சென்று அவரது சரீரத்தை கொண்டுவந்து காண்பிக்கவில்லை?

மூர்ச்சை வாதம் என்று ஒன்று இருக்கிறது. அதன்படி, கிறிஸ்து உண்மையில் மரிக்கவில்லை. அவர் வலியினாலும், ரத்தம் சிந்துதலினாலும், களைப்பினாலும் மயக்கமானார்; அவர் மரித்துபோனார் என்று தவறாக அறிவித்தார்கள். ஆனால், கல்லறையின் குளிர்ச்சியினால் மீண்டும் மயக்கம் தெளிந்தார் என்கிறார்கள். (இதை ஆதரிக்க அவர் விலாவில் ஈட்டியை குத்தின சம்பவத்தை கவனிக்க தவறி இருக்க வேண்டும்.)

ஆனால், அவர்கள் சொல்லுகிறபடி இயேசு மயக்கமாயிருந்தார், உயிரோடு அடக்கம்பண்ணப்பட்டார் என்பது உண்மை என்றே வைத்துக்கொள்வோம். ஒருவர் தண்ணீர், உணவு, கவனிப்பு இல்லாமல் மூன்று நாள் அந்த கல்லறைக்குள் இருக்க முடியுமா? அவருக்கு அவர் சரீரத்தை சுற்றி இருந்த வஸ்திரங்களை மாற்றவும், அந்த கல்லை புரட்டி போடவும், ரோம சேவகர்களை மேற்கொள்ளவும், பல மயில்கள் ஆணிப்பாய்ந்த கால்களால் நடக்கவும் முடிந்திருக்குமா? இதில் எந்த அர்த்தமும் இல்லை.

ஆனால் அந்த வெருமையான கல்லறையை பார்த்ததினால் மாத்திரம் இயேசுதான் தேவன் என்று அவர் சீடர்கள் நம்பவில்லை.

வெருமயான கல்லறை மட்டும் அல்ல

இயேசு மரித்தோரில் இருந்து எழுந்தார் என்றும் அவர் உயிரோடு இருக்கிறார் என்றும் அவர் தேவன் என்றும் இயேசுவின் சீடர்கள் நம்புவதற்கு அந்த வெருமையான கல்லறை மட்டும் ஆதாரம் அல்ல. அவர்களை நம்ப செய்தது என்னவென்றால், இயேசு அவர்களுக்கு அநேக முறை தம்மை தனிப்பட்ட விதத்தில் சரீரப்பிரகாரமாக வெளிப்படுத்தி, அவர்களோடு புசித்து, அவர்களோடு இருந்து, மற்றும் அவர்களோடு பேசினார்.

ஒரு சுவிசேஷத்தை எழுதினவரான லூக்கா இப்படி சொல்கிறார்: “அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி, தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை அவர்களுடனே பேசி, அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்.”26

இயேசு தேவனா?

இயேசு அடக்கம்பண்ணப்பட்ட பின், உயிரோடு எழுந்து, தம்மை சரீரப்பிரகாரமாக காண்பித்தார் என்பதை நான்கு சுவிசேஷங்களை எழுதினவர்களும் கூறுகின்றனர். இயேசு சீடர்களை சந்தித்த ஒரு தருணத்தில், தோமா அவர்களோடு இருக்கவில்லை. அவர்கள் தோமாவிடம் அதை பற்றி சொன்னபோது, அவன் அதை நம்பவில்லை. அவன் சொன்னான், “அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு, அந்தக் காயத்திலே என் விரலையிட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன் என்றான்.”

“பெண்களும் ஆண்களும் அவர்கள் உண்மை என்று நம்புகிற ஒன்றுக்காக தான் மரிக்க துனிவார்கள், சிலவேளை அது பொய்யாக இருக்கவும் சாத்தியம் உண்டு. ஆனால் பொய்யானது என்று அவர்கள் அறிந்த ஒன்றுக்காக யாரும் மரிப்பதில்லை.”

ஒரு வாரத்திற்கு பிறகு, இயேசு அவர்களை மீண்டும் சந்தித்தார், அப்போது தோமா அவர்களுடன் இருந்தான். இயேசு தோமாவை நோக்கி, “நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றார்.” தோமா அவரை பார்த்து “என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்.”

அதற்கு இயேசு அவனை பார்த்து, “தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்” என்று சொன்னார்.27

உங்கள் தருணம்

ஏன் இயேசு இவை எல்லாவற்றையும் அனுபவித்தார்? நாம் தேவனை இந்த வாழ்க்கையில் அறிந்து விசுவாசிக்கும்படியாக தான். இயேசு நமக்கு மிகவும் அர்த்தமுள்ள வாழ்க்கையை தருகிறார். அவரோடு உறவுகொள்ள வைக்கிறார். “நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்”28 என்று இயேசு சொன்னார். அவரோடு ஒரு நெருங்கிய உறவை இப்போதே நீங்கள் ஆரம்பிக்க முடியும். அவர் இந்த வாழ்க்கையில் இந்த பூமியில் அறியமுடியும் மற்றும் மரித்த பின்பு நித்தியமாக அவரை அறிய முடியும். இதுவே தேவன் நமக்கு தந்த வாக்குதத்தம்: “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.”29

இயேசு நம் பாவத்தை சிலுவையில் தாமே சுமந்தார். நம் பாவத்திற்கான தண்டனையை அவர் பெற்றுக்கொள்ள முன் வந்தார். அதனால் நமக்கும் அவருக்கும் நம் பாவங்கள் தடுப்பு சுவராக இருக்க கூடாது என்று அவர் அப்படி செய்தார். அவர் உங்கள் பாவத்திற்கான பலனை முற்றும் செலுத்தினபடியால், அவர் உங்களுக்கு முழுமையான மன்னிப்பையும் அவரோடுள்ள ஐக்கியத்தையும் தர விரும்புகிறார்.

நீங்கள் இப்படி அந்த உறவை ஆரம்பிக்க முடியும்.

இயேசு சொன்னார் “இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசி[ப்பெண்]”30 என்று.

இப்போதே நீங்கள் இயேசு கிறிஸ்துவை உங்கள் வாழ்க்கையில் ஏற்றுக்கொள்ள முடியும். நீங்கள் எப்படி வார்த்தைகளில் சொல்லப்போகிறீர்கள் என்பது முக்கியம் அல்ல. அவர் உங்களுக்காக செய்த எல்லாவற்றையும் மற்றும் இப்போது உங்களுக்கு அவர் தருகிற எல்லாவற்றின் வெளிச்சத்தில் பார்த்து, அவருக்கு நீங்கள் என்ன மறு உத்தரவு கொடுக்க இருக்கிறீர்கள் எனப்து தான் முக்கியம். நீங்கள் இப்படி அவரிடம் சொல்லலாம்: இயேசுவே, நான் உம்மை விசுவாசிக்கிறேன். என் பாவங்களுக்காக நீர் சிலுவையில் மரித்ததற்காக உமக்கு நன்றி. நான் உம்மை அறிந்து பின்பற்ற விரும்புகிறேன். என்னை மன்னித்து என் வாழ்க்கையில் இப்போதே வாரும். நீர் என் வாழ்க்கையில் வந்ததற்காகவும் எனக்கு உம்மோடு உறவுகொள்ளும் சிலாக்கியத்தை தந்ததற்காகவும் உமக்கும் நன்றி. உமக்கு நன்றி.”

நீங்கள் இயேசுவை உங்கள் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டீர்கள் என்றால், நீங்கள் இன்னும் அவரை அறிகிற அறிவில் வாழ நாங்கள் உங்களுக்கு உதவி செய்ய விரும்புகிறோம். எந்த வழியிலாகிலும் உங்களுக்கு உதவி செய்ய, கீழ் காணும் இனயதளம் இணைப்பு ஒன்றை அழுத்துங்கள்.

 நான் என் வாழ்வில் இயேசுவைக் கேட்டேன்(சிலப் பயனுள்ளத் தகவல்கள்ப் பின்வருமாறு)...
 நான் என் வாழ்வில் இயேசு வருமாரு வேண்டலாம்,மேலும் முழுமையாக விளக்குங்கள்
 எனக்கு ஒருக் கேள்வி உண்டு...

இதில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது: நோ வை யூ பிலீவ், பால் ஏ. லிட்டில், விக்டர் புக்ஸ், © 1988, எச்.பி. பப்லிகேஷன்ஸ், இங்க்., வீடன், ஐ.எல். 60187. அனுமதியுடன் உபயோகிக்கப்பட்டுள்ளது.

(1) மத்தேயு 7:29 (2) மத்தேயு 16:15-16 (3) யோவான் 5:18 (4) யோவான் 10:33 (5) மாற்கு 14:61-64 (6) யோவான் 8:19; 14:7 (7) 12:45; 14:9 (8) 12:44; 14:1 (9) மாற்கு 9:37 (10) யோவான் 15:23 (11) யோவான் 5:23 (12) யோவான் 10:38 (13) யோவான் 8:46 (14) 1 பேதுரு 2:22 (15) மத்தேயு 27:54 (16) யோவான் 9:25, 32 (17) மாற்கு 4:41 (18) யோவான் 11:48 (19) யோவான் 14:6 (20) யோவான் 8:12 (21) யோவான் 10:28 (22) மாற்கு 9:31 (23) 1 கொரிந்தியர் 15:14 (24) யோவான் 10:18 (25) மத்தேயு 26:52,53 (26) அப்போஸ்தல நடபடிகள் 1:3 (27) யோவான் 20:24-29 (28) யோவான் 10:10 (29) யோவான் 3:16 (30) வெளிப்படுத்தின விசேஷம் 3:20

இந்தக் கட்டுரையைப் பகிர  

TOP