வாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.
வாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.

திரித்துவத்தை நீங்கள் விளக்க முடியுமா?

கே: பரிசுத்த திரித்துவத்தைக் குறித்த உபதேசம், என்றால் என்ன?

எங்களின் பதில்:  நீங்களும் நானும் முப்பரிமான உலகத்தில் வாழ்கிறோம். எல்லாத் திடப்பொருளுக்கும் குறிப்பிட்ட உயரம், அகலம் மற்றும் ஆளம் இருக்கிறது. ஒரு நபர் மற்ற நபரை போல இருக்க முடியும், மற்றவரை போல நடந்துகொள்ள முடியும், மற்றவரை போலப் பேச முடியும். ஆனால் ஒரு நபர் மற்றவர் இருப்பது போலவே எல்லா விதத்திலும் இருக்க முடியாது. தனித்துவத்தில் அவர்கள் வேறுபட்டவர்கள்.

இம் முப்பரிமாண உலகத்திற்கு வரைமுறைக்குட்படாதவராகவே தேவன் வாழ்கிறார். அவர் ஆவியாக இருக்கிறார். அவர் நம்மை விடச் சிக்கலான வரையறைக்குட்படாதவராக இருக்கிறார்.

அதனால் தான் குமாரனாகிய இயேசு பிதாவை விட வித்தியாசமானவராக இருக்க முடிகிறது. ஆனாலும் ஓரே மாதிரியானவராக இருக்கிறார்.

வேதாகமத்தில் பிதாவாகிய தேவன், குமாரனாகிய தேவன் மற்றும் பரிசுத்த ஆவியாகிய தேவன் என்று தெளிவாக வாசிக்கிறோம். ஆனாலும் ஒரே ஒரு தேவன் என்பது வலியுறுத்தப்படுகிறது.

கணிதத்தின் படி பார்த்தால் 1+1+1=3 தவிர 1 அல்ல ஆனால் 1x1x1=1 -ஆக இருக்க முடியும். தேவன் திரித்துவத் தேவன்.

எனவே இதன் ஆங்கிலப் பதம்: “Tri” (திரி) மூன்று என்று அர்த்தம் மற்றும் “unity” (யூனிடி) ஒன்று என்று அர்த்தம், “Tri” + “unity” = Trinity (திரித்துவம்). இப்படித்தான் வேதாகமம் தேவனை நமக்கு வெளிப்படுத்துகிறது, தேவன் மூன்று நபராக இருந்தாலும் அவர்கள் ஒரே இறையாண்மையின் தன்மையை உடையவர்களாக இருக்கிறார். மனிதனாக நாம் இந்தத் திரித்துவத்திற்குச் சில உதாரணங்களைக் கொடுக்க முடியும் அதாவது H2O தண்ணீராகவும், ஜஸ் மற்றும் ஆவியாகவும் மாறுவது போல (எல்லாம் வித்தியாசமான வடிவம் ஆனால் அவை H2O). சூரியனே மற்றொரு உதாரணம். அதிலிருந்து நாம் வெளிச்சத்தை, வெப்பத்தை மற்றும் கதிர்களைப் பெறுகிறோம். மூன்று வித்தியாசமான பண்புகள் ஆனால் ஒரே ஒரு சூரியன்.

எந்த ஒரு உதாரணமும் நேர்த்தியானதாக இருக்க முடியாது.

ஆனால் அதியிலிருந்தே தேவன் திரித்துவத் தேவன் என்பதை நாம் பார்க்கிறோம். ஆதியாகமம் 1:26 –ல் குறிப்பிடப்பட்ட “நாம்” மற்றும் “நம்முடைய” என்கிறதான பன்மை பெயர்சொல்லை கவணிக்க. பின்பு தேவன், “நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக, அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.”

தேவன் ஒன்றான திரித்துவத் தேவன் என்பதைக் குறிக்கும் சில வசன ஆதாரங்களைக் கீழே காணலாம்.

  • இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர் (உபா. 6:4).

  • நானே கர்த்தர், வேறோருவர் இல்லை, என்னைத்தவிரத் தேவன் இல்லை (ஏசா. 45:5)

  • ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லை (1 கொரி8:4)

  • இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது, தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தன்மேல் வருகிறதைக் கண்டார். அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தார் (மத். 3:16-17)

  • ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய். சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து. (மத். 28:19)

  • நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார். (யோவான் 10:30)

  • என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான். (யோவான் 14:9)

  • என்னை காண்கிறவன் என்னை அனுப்பினவரைக் காண்கிறான். (யோவான் 12:45)

  • கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல. (ரோமர் 8:9)

  • தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. (மத். 1:20)

  • தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்தஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் எனப்படும் (லூக்கா 1:35)

  • (இயேசு சீஷர்களோடு பேசினார்) நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறோரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ள மாட்டாது: அவர் உங்களுடனே வாசம் பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்... “ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவர் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்: நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.” (யோவான் 14:16-17, 23)
 கடவுளுடன் ஒரு உறவுத் தொடங்குவது எப்படி?
 எனக்கு ஒருக் கேள்வி உண்டு...
இந்தக் கட்டுரையைப் பகிர  

TOP