வாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.
வாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.

தவிர்க்க முடியாததை எதிர்கொள்ளுவது

மரணத்தைச் சந்திப்பது எப்படி மற்றும் பயப்படாமல் மரிப்பது எப்படி

- பிரன்டன் மார்கேட்டி

வாழ்நாட்களில் எல்லோரும் அனுபவிக்கும் ஒரு காரியம், முழு வரலாற்றிலும் உலகம் முழுவதிலும், மனித இனத்தை ஒன்றினைக்கும் ஒரு காரியம் மரணமே. நாம் எல்லோரும் ஒரு நாள் சாந்திக்க வேண்டிய காரியம் மரணம். எந்த உடற்பயிற்சியும் அல்லது உணவு பழக்க கட்டுப்பாடும், மருத்துவத் தொழில்நுட்பமும், எவ்வளவு பணமும் இந்த மரணத்தைத் தடுக்க முடியாது. இது ஒரு சிறந்த சமநிலையாக்கி.

மரணத்துடைய முடிவு மரணத்திற்குப் பின் இருக்கும் வாழ்க்கையைக் குறித்த நிச்சயமில்லாமையோடு இணையும் போது இது அநேகருக்குப் பயத்தைக் கொடுக்கிறது. நாம் வயதாவதை தடுக்க முடியாததினால் இதை நாம் நம்மைச் சுற்றிலும் பார்க்கிறோம். அடுத்த மாத்திரை, அடுத்த அறுவை சிகிச்சை, அல்லது அடுத்த மரபணு கண்டுபிடிப்பு இவை அனைத்தும் நம்முடைய வாழ்நாட்களை நீடிக்க உதவும் என்பது நம்முடைய நம்பிக்கை.

சமாதானத்தோடு மரணத்தைச் சந்தித்தல்... மரணத்திற்குப் பின்பு வாழ்க்கை

எல்லோரும் அல்ல அனால் அநேகர் மரணத்தைப் பயத்தோடும் மற்றும் நிச்சயமில்லாமலும் எதிர்கொள்ளுகின்றனர். 16 வயதில் அவனுக்கு வயிற்றில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவர்கள் எத்தனையோ சிகிச்சையைக் கொடுத்தாலும் அது பயனற்றுப் போனது. ராப் ஒன்றரை ஆண்டுகள் மூன்று வேறுபட்ட மருத்துவமனையில் இரண்டு வேறு பட்டணங்களில் இருந்தார். இந்த நேரத்தில் அவர் தன்னுடைய 90 கிலோ எடையையும் மற்றும் தன்னுடைய முடியையும் இழந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் மற்றும் புறநோயாளியாகவும் இருந்தார். 18 மாதத்திற்குப் பின் அவருக்குச் செய்ய வேண்டியது எதுவும் இல்லாமல் போனது வருத்தத்திற்குரியதே.

வாழ்க்கையின் முடிவை அடைந்த ராப் -க்கு மருத்துவர்கள் கடைசியாகச் செய்யக் கூடிய ஒரே காரியம், அவரை அவருடைய வீட்டிற்கு அனுப்பிக் கடைசி நாட்களைச் சந்தோஷமாகச் செலவிடச் செய்வதே. இந்த நிலையில் என்னுடைய நெருங்கிய நண்பனை இழக்கப்போவதினால் மிகுந்த வருத்தப்பட்டுத் தேவன் மீது அதிகக் கோபமானேன். தேவன் அவனைச் சுகப்படுத்தவில்லை என்பதினால் நான் தேவன் மீது மிகுந்த கோபம் அடைந்தேன். ராப் அநேக காரியங்களை இழந்து போவான் என்பதை நினைத்தும் நான் மிக வருத்தப்பட்டேன்.

இதனில் ஆச்சரியம் ராப் என்னைப் போலக் கோபப்படவில்லை. உண்மையில் இந்தப் பரிதாபமான முடிவை சந்தோஷத்தோடு சந்திக்க எதிர்பார்ப்போடு இருப்பவனைப் போல நடந்து கொண்டான். இந்தப் பெரிய பிரச்சனையின் மத்தியில் சமாதானமாய் இருப்பதைப் பார்த்த எனக்கு மிக ஆச்சரியமாய் இருந்தது.

அவனுடைய வாழ்க்கையைப் பார்க்கும் போது இந்தச் சமாதானம் அவனோடு கூடப் பிறந்தது அல்ல. இது ஏதோ எதைக்குறித்தும் கவலைப்படாதா ஒரு நடத்தையும் அல்ல. ராப் ஒரு மாதத்திற்கு முன்பு இந்த வியாதி தனக்கு இருக்கிறது என்று அறிந்து கொண்ட ஆரம்பக் காலத்தில் தான் இந்தத் தீர்மானத்திற்குள் வந்தான். இந்தத் தீர்மானத்;தினால் அவன் தேவனிடத்தில் சமாதானத்தைக் கண்டுக்கொண்டான்.

மரணத்திற்குப் பின் வாழ்க்கையைப் பெறுவது எப்படி என்பது ராப் -க்கு தெரியும்.

ராப் தன்னுடைய சமாதானத்தை வேதாகமத்தில் காண்டுகொண்டான். எல்லோரும் பாவம் செய்து தேவ மகிமையற்றவர்கள் ஆனார்கள் என்று ரோமரில் வாசித்தான் (ரோமர் 3:23). பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன் (ரோமர் 6:23) என்ற வசனத்தையும் வாசித்தான்.

அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும் (ஏசாயா 9:6) என்று இயேசுவை குறித்து ஏசாயா எழுதியிருக்கிறார். சமாதானப்பிரபு இந்தப் பூமிக்கு வந்தார் எனவே தான் நாம் தேவனோடு சமாதானமாய் இருக்க முடியும். ராப் இயேசுவின் மீது தன்னுடைய விசுவாசத்தை வைக்கத் தீர்மானித்தான் அதானால் இந்தச் சமாதானம் அவனுடைய வாழ்க்கையில் வந்தது.

மரணத்திற்குப் பின் வாழ்க்கை... நம்முடைய தீர்மானம்

ராப் மட்டும் தான் இந்தத் தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்பது இல்லை நாம் அனைவரும் இந்தத் தீர்மானத்தை எடுக்கலாம். தேவன் நமக்கு ஈவாகக் கொடுத்திருக்கும் நிந்திய வாழ்க்கையை ஏற்றுக்கொள்வதன் மூலம் இந்தத் தீர்மானத்தை எடுக்கிறோம். நாம் தேவனுடைய ஈவை புறக்கணிப்போமானால் நாம் ஆவிக்குரிய மரணத்திற்குள்ளாகத் தீர்க்கப்படுவோம் நித்தியமாகத் தேவனிடத்திலிருந்து பிரிக்கப்படுவோம். நாம் இதை ஏற்றுக்கொண்டால், நித்திய வாழ்வு நம்முடையது.

இந்த நித்திய ஜீவன் என்பது ஏதோ சரீரப்பிரகாரமான மரணத்தில் இருந்து தப்புவிப்பது அல்ல, நாம் நித்திய ஜீவனைப் பரலோகத்தில் செலவிடப் போகிற படியினால் மரணத்தை எளிதாய்ச் சந்திக்கமுடியும். இந்த உண்மையை ராப் தெரிந்துகொண்டான் மற்றும் தேவனோடு அவருக்கு இருக்கும் ஐக்கியத்தை உறுதிசெய்வதன் மூலம் உலகத்தில் வித்தியாசமாய் இருக்க உதவியது. இந்த உண்மையை நான் காண்டுபிடித்தேன் மற்றும் இந்த ஐக்கியம் என்னுடைய அனுதின வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது.

நீங்கள் மரணத்தைச் சந்திப்பீர்களே ஆனால், மரணத்திற்குப் பின்புள்ள வாழ்க்கையைக் குறித்து ஆச்சரியப்படுவீர்களே ஆனால் அல்லது வாழ்க்கையை வாழ தடுமாறுவீர்களே ஆனால் நீங்கள் இன்னும் சமாதானத்தையும் நம்பிக்கையையும் பெற முடியும். தயவு செய்து பார்க்க: தேவனைத் தனிப்பட்ட முறையில் அறிந்துக்கொள்ளுதல்.

 கடவுளுடன் ஒரு உறவுத் தொடங்குவது எப்படி?
 எனக்கு ஒருக் கேள்வி உண்டு...
இந்தக் கட்டுரையைப் பகிர  

TOP