வாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.
வாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.

இயேசுவுக்கும் உலக மதங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன?

இந்த உலகிலுள்ள மற்ற மதங்களை விட இயேசு எப்படி வித்தியாசமானவர் என்பதைச் சுருக்கமாக இங்குக் காணலாம்.

இந்த உலக மதங்களை விட இயேசு கிறிஸ்துவிடம் காணப்படும் சில முக்கியப் பண்புகளை இங்குச் சுருக்கமாகக் காணலாம்.

1. இயேசு கிறிஸ்து நம்மோடு ஐக்கியப் பட விரும்புகிறார். நீங்கள் எப்பொழுதாவது நீங்களே முயற்சி செய்து இணைந்திருக்கக் கூடிய ஐக்கியத்தில் இருந்திருக்கிறீர்களா? அப்படிப்பட்ட உறவுகள் நீண்ட நாள் நிலைப்பதில்லை அது சோர்வையே ஏற்படுத்தும். சிறந்த நட்பு என்பது ஒருவரோடு ஒருவர் சந்தோஷமாயிருந்து சரிசமமாக நேரங்களை ஒருவருக்காக ஒருவர் செலவு செய்து இந்த உறவை நிலைத்திருக்கப் பிரயாசப்படுவதே ஆகும். மற்ற மதங்களைப் போலத் தேவனைத் தேடி செல்லவேண்டியது இல்லை இங்கு இயேசுவில் தேவன் நம்மைத் தேடி வந்தார். இயேசு தான் ஏன் வந்தேன் என்று சொல்கிறார்: “நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.” அவரை விசுவாசிப்பவர்கள் அவரோடு கூட நித்தியஜீவனைப் பெறவே அவர் வந்தார்.

2. இயேசு தன்னைத் தேவன் என்று அறிக்கைசெய்யத் தகுதியானவர். இந்த உலக மார்க்கத்தின் எந்தத் தலைவர்களும் தன்னைத் தேவன் என்று அறிக்கையிட தகுதியற்றவர்கள்.

3. இயேசு பரிசுத்தமான வாழ்க்கை வாழ்ந்தார் மற்றும் தான் செய்த அற்புதங்களின் (குருடர்களைச் சுகமாக்கினார், கடலின் அலைகளை அமைதலாக்கினார், மரித்தவர்களை உயிரோடு எழுப்பினார், ஆயிரக்கணக்கான மக்களுக்கு உடனடியாக உணவு வழங்கினார்) மூலம் அவருடைய தெய்வீக தன்மை விழங்கியது. இவ்வுலக மதத்தலைவர்கள் சுவாரசியமான செய்திகளைக் கொடுத்தனர் ஆனால் இயேசு அற்புதங்கள் மூலம் வெளிப்படுத்தின வல்லமையைப் போல யாரும் வெளிப்படுத்தவில்லை. இயேசு சொன்னார், “நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள். அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்.”

4. இவ்வுலக மார்க்கத்தில் ஜனங்கள் தங்களுடைய பாவங்களுக்காகத் தங்களைக் கழுவுவார்கள் மற்றும் சுயத்தைப் பலியாகச் செலுத்தி சடங்காசாரத்தை நிறைவேற்றுவார்கள். இயேசு நம்முடைய பாவத்திற்கான கிரயத்தைச் செலுத்தி, தேவனாக நம்முடைய பாவங்களை மன்னித்தார். “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல்வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.” சிலுவையில் நம்முடைய பாவங்களை எல்லாம் சுமந்து அதற்குக் கிரயம் செலுத்தினார்.

5. இயேசு சிலுவையில் அறையப்பட்ட பின்பு மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார். அநேக மதங்கள் அவதாரத்தைக் குறித்துப் பேசுகின்றன. இயேசு அநேக இடங்களில் தன் சிலுவையில் அறையப்பட்டு மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்திரிப்பேன் என்று சொன்னார். இயேசு வெளிப்படையாகத் தன்னுடைய இறைத்தன்மை எந்த ஒரு தடையும் இல்லாமல் நிரூபிக்க விரும்பினார். எனவே ரோம அதிகாரிகள் எச்சரிக்கையாக 11-14 காவலர்களை அவருடைய கல்லரையின் முன் காவல் வைத்து, ரோம முத்திரையிடப்பட்ட கல்லரையைக் கவனமாகக் காவல் காக்கும் படி எச்சரிக்கப்பட்டனர். எனினும் மூன்று நாளைக்குப் பின் அவருடைய சரீரம் கல்லரையிலிருந்து காணாமல் போனது மற்றும் அதன் பின் அவர் 500 –கும் மேற்ப்பட்ட மக்களுக்குத் தன்னை இயேசு வெளிப்படுத்தினார். எந்த ஒரு மதத்தின் முக்கியத் தலைவர்களும் தான் உயிர்தெழுவதாகச் சொன்னதுமில்லை உயிர்தெழுந்ததுமில்லை.

6. வேதாகமத்தின் செய்தி தனித்தன்மைவாய்ந்தது. இது பாடல் அல்லது துண்டு துண்டான கருத்துக்களின் தொகுப்பு அல்ல. வேதாகமம் தேவனையும் அவர் நமக்காக வைத்திருக்கும் திட்டத்தையும் வெளிப்படுத்துகிறது. வரலாற்றில் ஏற்பட்ட பிழையினால் நமக்கும் தேவனுக்கும் இருக்கும் உறவில் பிளவு ஏற்பட்டது என்பதை நமக்குத் தெரிவிக்கிறது. இந்த உறவை எப்படிப் புதுபித்துக்கொள்வது மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இது நமக்குச் சொல்கிறது. சுருக்கமாக வேதாகமம் இதைக் குறித்து என்ன சொல்கிறது என்பதை அறிய இதைப் பார்க்கவும்: தேவனைத் தனிப்பட்ட முறையில் அறிந்துகொள்ளுதல்.

இவைகளே இயேசு கிறிஸ்துவை குறித்த சில வித்தியாசங்கள். உலக மதங்களைக் குறித்து மேலும் அறிய, தயவு செய்து தேவனோடு தொடர்புகொள்ளுதல் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

 கடவுளுடன் ஒரு உறவுத் தொடங்குவது எப்படி?
 எனக்கு ஒருக் கேள்வி உண்டு...
இந்தக் கட்டுரையைப் பகிர  

TOP