வாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.
வாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.

இயேசு தான்க் கடவுள் என்றுக் கூறினாறா?

இயேசு மேற்கோள் காட்டுகிறார்- இயேசு தேவனா? இந்தச் சுவாரசியமான அறிக்கையை ஆய்வு செய்க…

அநேகர் இயேசு தேவன் என்பதை விசுவாசிக்கின்றனர்:
பவுல்: “கிறிஸ்து அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமானவர்.”1
யோவான்: “அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.”2
பேதுரு: “கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்”3

ஆனால் தன்னைக் குறித்து இயேசு என்ன சொன்னார்?

அவர் எப்பொழுதாவது தன்னைத் தேவன் என்று அடையாளப்படுத்தி இருந்தாரா? வேதத்தின் படி நிச்சயமாகச் செய்தார் என்று சொல்ல முடியும்! அவர் சொன்ன சில வார்த்தைகளைக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அவர் தேவனுக்குச் சமமானவர் என்று இயேசு சொன்னார். இயேசுவின் வாக்கியம்…

ஆபிரகாமுக்கு முன்பாகவே இருந்ததாக இயேசு சொன்னார்
“உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளை காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார். அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையேஇ நீ ஆபிரகாமைக் கண்டாயோ என்றார்கள். அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.”4

அவரைக் காண்கிறவன் பிதாவை காண்கிறான் என்று இயேசு சொன்னார்
“அப்பொழுது இயேசு சத்தமிட்டு: என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் என்னிடத்தில் அல்லஇ என்னை அனுப்பினவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறான். என்னைக் காண்கிறவன் என்னை அனுப்பினவரைக் காண்கிறான். என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்குஇ நான் உலகத்தில் ஒளியாக வந்தேன்.”5

“அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார்.

பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரேஇ பிதாவை எங்களுக்குக் காண்பியும்இ அது எங்களுக்குப் போதும் என்றான்.

அதற்கு இயேசு: பிலிப்புவேஇ இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்கஇ பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?”6

அவரால் பாவத்தை மன்னிக்க முடியும் என்று இயேசு சொன்னார்
“பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லிஇ திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டுஇ உன் வீட்டுக்குப் போ என்றார். உடனே அவன் எழுந்துஇ தன் வீட்டுக்குப்போனான். ஜனங்கள் அதைக்கண்டு ஆச்சரியப்பட்டுஇ மனுஷருக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவனை மகிமைப்படுத்தினார்கள்.”7

“அவர் அவர்களை நோக்கி: நீங்கள் தாழ்விலிருந்துண்டானவர்கள்இ நான் உயர்விலிருந்துண்டானவன்; நீங்கள் இந்த உலகத்திலிருந்துண்டானவர்கள்இ நான் இந்த உலகத்திலிருந்துண்டானவனல்ல. ஆகையால் நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்; நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார்.”8

>நான் நியாயாதிபதி மற்றும் நித்தியஜீவனைத் தருகிறேன் என்று இயேசு சொன்னார்
“பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறதுபோலஇ குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார். அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்குஇ பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல்இ நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம்பண்ணாதவனாயிருக்கிறான்.”9

“இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்இ என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்.”10

“என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன்இ அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லைஇ ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை.”11

“குமாரனைக் கண்டுஇ அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ அவன்இ நித்தியஜீவனை அடைவதும்இ நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும்இ என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார்.”12

தேவனைப் போலவே இருக்கிறேன் என்று இயேசு சொன்னார்.
“நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.

அப்பொழுது யூதர்கள் மறுபடியும் அவர்மேல் கல்லெறியும்படிஇ கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள்.

இயேசு அவர்களை நோக்கி: நான் என் பிதாவினாலே அநேக நற்கிரியைகளை உங்களுக்குக் காண்பித்தேன்இ அவைகளில் எந்தக் கிரியையினிமித்தம் என்மேல் கல்லெறிகிறீர்கள் என்றார்.

யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்கஇ உன்னைத் தேவன் என்று சொல்லி இவ்விதமாகத் தேவதூஷணஞ் சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள்.”13

நம்முடைய வாழ்க்கையின் ஆதாரமாக இருக்கிறார் என்று இயேசு சொன்னார். இயேசு சொன்ன வார்த்தையிலிருந்து…

“ஜீவ அப்பம் நானே”
இயேசு அவர்களை நோக்கி: “ஜீவ அப்பம் நானேஇ என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான்இ என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்.”14

>“நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாய் இருக்கிறேன்”
அதற்கு இயேசு: “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.”15

“நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்”
“மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்இ என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.”16

“நீங்கள் சத்தியத்தை அறிவீர்கள்”
“இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள்இ சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.”17

“ஜீவன் உண்டாயிருக்கும், அது பரிபூரணப்படும்”
“திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும்இ அது பரிபூரணப்படவும் வந்தேன். என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன்இ அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லைஇ ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை.”18

“நான் அவனை நேசிப்பேன்”

“என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்கிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான்இ என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்துஇ அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார்.”19

“சகல நாட்களிலும் உங்களுடனேகூட இருக்கிறேன்”
“இதோஇ உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார்.”20

இயேசு தேவனா என்று இன்றும் ஆச்சரியப்படுகிறீர்களா? குருட்டு விசுவாசத்திற்கும் அப்பால் என்கிற இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள கீழ்கானும் அடையாளங்களைத் தயவுசெய்து பாருங்கள்.

 கடவுளுடன் ஒரு உறவுத் தொடங்குவது எப்படி?
 எனக்கு ஒருக் கேள்வி உண்டு...

(1) கொலோசெயர் 1:15 (2) யோவான் 1:2 (3) 1பேதுரு 3:15 (4) யோவான் 8:56-58 (5) யோவான் 12:44-46 (6) யோவான் 14:6-9 (7) மத்தேயு 9:6-8 (8) யோவான் 8:23,24 (9) யோவான் 5:21-23 (10) யோவான் 11:25 (11) யோவான் 10:27,28 (12) யோவான் 6:40 (13) யோவான் 10:30-33 (14) யோவான் 6:35 (15) யோவான் 14:6 (16) யோவான் 8:12 (17) யோவான் 8:31,32 (18) யோவான் 10:10,27,28 (19) யோவான்14:21 (20) மத்தேயு 28:20

இந்தக் கட்டுரையைப் பகிர  

TOP