வாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.
வாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.

ஏதாவது

இந்த கட்டுரை "எதுவும் இல்லை என்று எப்பொளுதாவது இருந்திருக்கிறதா?" என்பதின் தொடர்ச்சியாகும்.

எப்பொழுதாகிலும் “ஒன்றும் இல்லாதிருந்தால்,” இப்பொழுதும் ஒன்றும் இல்லாமல் தான் இருந்திருக்கும். ஏதோ ஒன்று (உதாரணமாக நீங்கள்) இருப்பதினால், “ஒன்றும் இல்லாமல்” இறுந்த நிலை ஒருப்போதும் இருந்திருக்க சாத்தியமில்லை. அப்படி இருந்திருந்தால், நீங்கள் இதை இப்போது வாசித்துகொண்டிருக்க முடியாதே. மாறாக “ஒன்றும் இல்லை” என்பது இருந்திருக்குமே.

ஆகையால், “ஒன்றும் இல்லாதிருந்தது” என்று எப்போதும் இருந்ததில்லை. ஆகையால், எப்போதும் “ஏதோ ஒன்று” இருந்துகொண்டே இருக்கிறது. ஆனால் அது என்ன? ஆரம்பத்தை பார்க்கும்போது, அப்போதிருந்த “ஏதோ ஒன்று” எது? அது ஒரே ஒரு “ஒன்றா” அல்லது அதிகமான “ஒன்றா"? இப்போது இருக்கிறதின் அடிப்படையில் பார்க்கும்போது, அன்று அது எப்படி இருந்திருக்கும்?

முதலாவதாக நாம் அளவின் பிரச்சனையை ஆராய்ந்து பார்ப்போம். நமது பெரிய, அடைக்கப்பட்ட, இருட்டான அறையை நினைவில் கொண்டுவருவோமாக. அந்த அறைக்குள் பத்து டென்னிஸ் பந்துகள் இருக்கிறதாக கற்பனை செய்வோம். நாம் நேரத்தில் செல்ல முடிகிற எவ்வளவு நூற்றாண்டுகளுக்கு முன் சென்றாலும், இந்த பத்து டென்னிஸ் பந்துகள் மட்டுமே இருந்ததென்று வைத்துக்கொள்வோம்.

பிறகு என்ன நடக்கிறது? ஒரு வருட காலமாக காத்திருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். அறையில் என்ன இருக்கிறது? இன்னும், அந்த பத்து டென்னிஸ் பந்துகள் மட்டுமே, அல்லவா? ஏனென்றால், வேறெந்த சக்தியும் அங்கில்லை. பின்னும், எவ்வளவு நேரம் கழிந்தாலும், அந்த பத்து டென்னிஸ் பந்துகள் புதிய பத்து டென்னிஸ் பந்துகளை மட்டுமல்ல புதிதாக மற்ற ஒன்றயும் கொண்டுவர முடியாது.

சரி, ஆறு டென்னிஸ் பந்துகள் மட்டும் இருந்ததாக இருந்தால் அந்த சூழ்நிலையை மாற்ற முடியுமா? இல்லை, உன்மையாக இல்லை. சரி, மில்லியன் டென்னிஸ் பந்துகள் இருந்தால் எப்படி? இன்னும் எந்த மாற்றமும் இல்லை. அந்த அறைக்குள் இருப்பதெல்லாம் டென்னிஸ் பந்துகள் மட்டுமே, வேறொன்றும் இல்லை.

நாம் இதில் என்ன புரிந்து கொள்கிறோம் என்றால், அளவு ஒரு பிரச்சனை இல்லை. எல்லாம் உண்டான அந்த ஆதி நாட்களில் சென்றால், அந்த “ஒன்றின்” அளவு இருந்திருக்குமா இல்லையா என்பது முக்கியமல்ல.அல்லது அது முக்கியமா?

இப்போது அந்த டென்னிஸ் பந்துகளுக்கு பதிலாக அந்த அறைக்குள் ஒரு கோழியை வைத்துவிடுங்கள். ஒரு வருடம் காத்திருங்கள். இப்போது உள்ளே என்ன இருக்கிறது? ஒரு கோழி அல்லவா? ஆனால், ஒரு கோழியையும் ஒரு சேவலையும் அங்கே விடுங்கள்.இப்போதும் ஒரு வருடம் காத்திருந்த பிறகு,உள்ளே என்ன இருக்கிறது? ஒரே கோழி கூட்டம் தான் இருக்கும்.

ஆகையால், ஒரு அறையில் இரு காரியங்கள் மற்ற ஒன்றை உண்டாக்க முடியுமென்றால், அளவு அல்லது எண்ணிக்கை முக்கியமானதாக ஆகும். கோழி+சேவல்=கோழி குஞ்சு. ஆனால் மூன்றாவது ஒன்றை உண்டாக முடியாத இரு பொருட்களை பார்க்கும்போது, அளவு அல்லது எண்ணிக்கை முக்கியமல்ல. டென்னிஸ் பந்து+கால்பந்து = ஒன்றுமில்லை.

ஆகையால் எண்ணிக்கை அல்லது அளவைவிட ஒரு பொருளின் பண்புகள் முக்கியமானது. “ஏதோ ஒன்றின்” பண்புகள் என்ன? அது மற்றொன்றை உண்டாக்க முடியுமா?

நாம், மீண்டும் கோழிகளை பற்றி துல்லியமாக கவனிப்போம், ஏனெனில் அப்படியே ஆதியில் இருந்தது. ஒரு கோழியும் ஒரு சேவலும் அந்த அறைக்குள் இருக்கிறது. அவைகள் அறையின் வெவ்வேறு பகுதிகளில் இருக்கின்றன. அப்போது அவைகளால் குஞ்சுகளை பொறிக்க முடியுமா?

இல்லை. ஏன்? ஏனெனில் இனப்பெருக்கம் செய்ய சூழல் இல்லை. அந்த அறைக்குள் கோழி மற்றும் சேவலை தவிர வேறொன்றும் இல்லை. சுவாசிப்பதற்கும், பறப்பதற்கும் கூட காற்று இல்லை, நடக்க தரை இல்லை, சாப்பிட உணவு இல்லை. அவைகளால் சாப்பிடவோ, நடக்கவோ, பறக்கவோ, சுவாசிக்கவோ முடியாது. அந்த சுற்றுப்புற சூழல் மற்றும் வெருமையானதாக இருக்கிறது.

இப்போது கோழிகள் வெளியேறின. சூழல் இல்லாமல் கோழிகளால் வாழவோ, இனம்பெருக்கம் செய்யவோ முடியாது. ஒரு சூழல் இருந்தால், குஞ்சு பொரிக்க முடியும். சூழல் தாக்கத்தினால் சில வேலை, சில நேரம், பொருத்தம் இல்லாதிருந்தாலும், கால போக்கில் அது வேறு விதமான கோழிகளாக மாறவும் முடியும், ஒட்டகச்சிவிங்கி அல்லது நீர்க்கீரியை போல.

நமக்கு ஒரு சூழல் இல்லாத ஒரு அறை மட்டுமே உள்ளது. ஆகையால், சூழல் இல்லாமல் வாழமுடிகின்ற “ஏதோ ஒன்று” நமக்கு தேவை. அது வாழ்வதற்கு காற்று, உணவு, நீர் தேவைப்படாததாக இருக்க வேண்டும். இவை இருந்தால் உயிரினங்களாக இருக்க தகுதியற்றவைகளாக மாறிவிடும்.

பின்னும், உயிரற்ற பருபொருளை பற்றி என்ன? அதற்கு ஒரு சூழல் வேண்டியதில்லை, அது தான் உண்மை. டென்னிஸ் பந்தை போலவே இருக்கும். உயிரற்றவைகள் ஒன்றயும் உண்டாக்க முடியாது. பத்து டென்னிஸ் பந்துகளுக்கு பதிலாக ட்ரில்லியன் கணக்கான ஹைட்ரஜன் மூலக்கூறுகள் இருந்தால் என்ன நடக்கும்? காலப்போக்கில், ட்ரிலியன் ஹைட்ரஜன் மூலக்கூறுகள் மட்டுமே இருக்கும், அதை விட வேறொன்றும் இல்லை.

நாம் உயிரற்ற பருபொருளை பற்றி பேசும்போது, அது வாழ்வதற்க்கு வேண்டியவைகள் என்னவென்று பார்ப்போம். அதீத மோதலை பற்றி கேள்விப்பட்டதுண்டோ? பல வருடங்களுக்கு முன் பருபொருளை கண்டுபிடிபதற்கான ஆராய்ச்சியை மேற்க்கொள்ள அரசாங்கம் தீர்மானித்தது. அதீத மோதல் என்பது நிலத்தடியில் இருக்கும் பல மைல் கணக்கான சுரங்கப்பாதை; இதில் அநேக அணுக்கள் வேகமாக பிரயாணம் செய்து மோதுவத்தின் மூலம் துகளை உண்டாக்க முடியும். இவ்வளவு பிரயசமும் நுண்னியலான அந்த பருபொருளை கண்டுபிடிப்பதற்காகவே.

இதன் மூலம் நாம் அறிந்துக்கொள்வது என்ன? நமது டென்னிஸ் பந்தின் எடுத்துக்காட்டு நாம் நினைப்பது போல சுலபமானது அல்ல. ஒரே ஒரு டென்னிஸ் பந்தை உண்டுபன்ன திகைக்கப்படத்தக்க அளவில் சக்தி தேவை. ஆனால் நம்மிடம் இருப்பதெல்லாம் “ஒன்றும் இல்லை” ஆகும். அறைக்குள் ஒன்றுமே இல்லை.

ஆகையால் நமது நிலை இதுவே: ஆதியில் இருந்து வாழ்கின்ற “ஒன்று” வேறொன்றயும் சார்ந்திருக்க கூடாது. அது முற்றும் முழுமையாக தன்னிறைவானதாக இருக்க வேண்டும். ஏனென்றால் அதுதான் ஆதியில் இருந்து வாழ்கின்ற ஒன்றாகும். அதற்கு வாழ ஒரு சூழ்நிலை தேவை படவில்லை.

இரண்டாவதாக, ஆதியில் இருந்து இருகின்ற “ஒன்று” மற்றொன்றை உண்டாக்க வலிமை உள்ளதாக இருக்க வேண்டும். அப்படி ஆதியில் இருந்த ஒன்று வேறொன்றை உண்டாக்காமல் இருந்தால், அது மட்டும் இன்றும் தனித்திருக்கும். ஆனால், இன்று “வேறொன்றும்” இருக்கிறதே. உதாரணமாக: நீங்கள்.மூன்றாவதாக, ஒன்றும் இல்லாதத்தில் இருந்து வேறொன்றை உண்டாக்க மிகவும் பெரிய வல்லமை வேண்டியதாயிருக்கிறது. ஆகையால் அந்த “ஒன்றுக்கு” பெரிய சக்தி இருக்கவேண்டும். ஒரு மிக சிறு துகளை உண்டாக்க, அநேக மைல்கள் மற்றும் அதிகமான சக்தி வேண்டியதாயிருந்தால், இந்த உலகத்தில் உள்ள பருபொருளை உண்டாக எவ்வளவு சக்தி வேண்டியதாகும்?

நாம் நமது அறையை பற்றி மீண்டும் பார்ப்போம். ஒரு விசேஷித்த டென்னிஸ் பந்து அறைக்குள் இருப்பதென்று வைத்துக்கொள்வோம். அந்த டென்னிஸ் பந்து மற்ற அநேக டென்னிஸ் பந்துகளை உண்டாக்க வேண்டிய மிக வலிமையும் சக்தியும் உண்டு. அது முற்றிலும் தன்னிறைவு பெற்றதாகையால், அது வாழ்வதற்கு மற்ற ஏதும் வேண்டியதில்லை. இந்த ஒரு டென்னிஸ் பந்து தான் “நித்தியமான ஒன்று.”

இந்த டென்னிஸ் பந்து வேறொரு டென்னிஸ் பந்தை உண்டாக்குகிறதென்று வைத்துக்கொள்வோம். “நேரத்தின்” அடிபடையில், இந்த இரண்டில் எது உயர்ந்தது? பந்து #1. அது “நித்தியமான ஒன்று.” அது எப்போதுமே இருந்ததாகும். பந்து #1 உண்டாக்கினதினால் பந்து #2 தோன்றினது. ஆகையால் நேரத்தின் அடிபடையில் பார்க்கும்போது, ஒன்று எல்லை உள்ளது; மற்றொன்று எல்லை இல்லாதது.

“வலிமையின்” அடிபடையில் பார்க்கும்போது, எது உயர்ந்தது? மீண்டுமாக, பந்து #1 தான். இதற்கு பந்து #2-ஐ இல்லாததில் இருந்து உண்டாக்கும் ஆற்றல் உள்ளது, ஆகையால் அதற்கு பந்து #2-ஐ அழிக்கவும் வல்லமை உண்டு என்று புரிந்துகொள்ளலாம். ஆகையால், பந்து #2-ஐ விட பந்து #1-க்கு அதிக வலிமை உண்டு. உன்மையிலேயே, எல்லா நேரத்திலும், பந்து #2 தான் வாழ்வதற்க்காக பந்து #1-ஐ சார்ந்துதான் இருக்க வேண்டும்.

ஆனால், பந்து #1 பந்து #2 இடம் தனது வல்லமையை—அதாவது பந்து #1-ஐ அழிக்க கூடிய வல்லமையை—பகிர்ந்தால் என்ன என்று நீங்கள் கேட்கலாம்? அப்படியானால், பந்து #1 அழிந்து போவதினால், பந்து #2 பெரிதாக இருக்கும் அல்லவா?

இதில் ஒரு பிரச்சனை உண்டு. பந்து #1 தனது வல்லமையை பந்து #2-இடம் பகிர்ந்துகொண்டால், அதும் உன்மையில் பந்து #1-இன் வல்லமையாகவே தான் இருக்கும். இப்போது கேள்வி என்னவென்றால், பந்து #1 தனது வல்லமையை பயன்படுத்தி தன்னையே அழித்துக்கொள்ளுமா? இல்லை. ஏனென்றால், முதலாவதாக, தனது வல்லமையை உபயோகிக்க, பந்து #1 இருக்கவேண்டிய அவசியம் உண்டு.

இரண்டாவதாக, பந்து #1 மிக வல்லமை உள்ளது, ஆகையால் எதை செய்தாலும் அந்த பந்தினால் மாத்திரம் செய்ய முடியும். ஆனால், பந்து #1 முற்று பெறுகின்ற ஒன்று அல்ல. ஆகையால், இதை அதினால் நிறைவேற்ற முடியாது.

பந்து #1-யை அழிக்க முடியாது, ஏனென்றால் அது உண்டாக்கப்பட்ட ஒன்று அல்ல. பந்து #1 எப்போதும் இருந்ததாகும். அது “நித்தியமான ஒன்று.” ஆகையால், அதுவே வாழ்வு. அது தான், ஜீவன், எல்லையற்ற ஜீவன். பந்து #1-ஐ அழிக்க அதை விட பெரிதான ஒன்று வேண்டும்; ஆனால், அதை விட பெரிதானது வேறொன்றும் இல்லை, இனி இருக்க போவதும் இல்லை. அது வாழ்வதற்க்காக வேறொன்றும் அதற்கு வேண்டியதில்லை. ஆகையால், வேறு சக்திகளால் அதை மாற்றவும் முடியாது. அதற்கு முடிவும் இல்லை, ஆரம்பமும் இல்லை. அது இருக்கிறதாகவே இருக்கிறது மற்றும் அதை மாற்ற முடியாது. அது இல்லாமற்போக முடியாது, ஏனென்றால் “இருப்பதே” அதன் இயல்பாகும். அந்த அர்த்தத்தில், அதை தொடவே முடியாதென்று சொல்லலாம்.

இப்படியிருக்க, நாம் பார்ப்பது இதுவே: ஆதியில் இருந்து இருக்கின்ற “ஒன்று” அது உண்டாக்கின “வேறொன்றை” விட பெரிதாகும். அந்த “ஒன்று” தானாகவே உயிர் வாழ்கின்றது. உருவாக்கப்பட்ட “வேறொன்றுக்கு” வாழ அந்த “ஒன்று” தேவை. ஆகையால், அது ஆதியிலிருந்து வாழும் அந்த “ஒன்றை” விட கீழானதாகும், ஏனெனில் அந்த “நித்தியமான ஒன்றுக்கு” வாழ வேறொன்றும் வேண்டியதில்லை.

அந்த “ஒன்று” அதை போல “வேறொன்றை” உண்டாக்க முடியும்; அப்படியிருந்தும், சில விஷயங்களில் அந்த “வேறொன்று” “ஒன்றை” போல இருக்கலாம், ஆனால் மற்ற எல்லா விஷயங்களிலும் “வேறொன்று” அந்த “ஒன்றை” போல இருப்பதில்லை. நேரம் மற்றும் வலிமையின் அடிப்படையில் பார்க்கும்போது, அந்த “நித்தியமான ஒன்று” எப்போதுமே மேன்மையாகவே இருக்கும். ஆகையால், அந்த “நித்தியமான ஒன்று” அதை போல சமனான ஒன்றை படைக்க முடியாது. ஏனெனில் அது மட்டும் ஆதியில் இருந்து வாழ்கின்ற ஒன்று. மற்றும் அது வாழ்வதற்க்கு வேறொன்றும் அவசியப்படுவதில்லை.

இந்த “நித்திய ஒன்றை” பற்றி ஆராய விரும்புகிறீர்களா? யார் என்ற கட்டுரையை பாருங்கள்.

 கடவுளுடன் ஒரு உறவுத் தொடங்குவது எப்படி?
 எனக்கு ஒருக் கேள்வி உண்டு...
இந்தக் கட்டுரையைப் பகிர  

TOP