வாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.
வாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.

யார்

இது ஏதோ ஒன்று என்ற கட்டுரையின் தொடர்ச்சி.

நித்தியமானதாக இருக்கிற ஒன்று என்பது உண்டு. அந்த ஒன்று எப்போதுமே இருந்ததாகும். அந்த ஒன்றுக்கு ஆரம்பம் இல்லை. அந்த ஒன்றுக்கு தேவைகள் ஏதாகிலும் இருந்தால், அதன் தேவைகளை “அதுவே” தீர்த்துக்கொள்ள முடியும். அது வாழும்படிக்கு அதற்கு வேறொன்றும் அவசியம் இல்லை. அதை விட மேலானதை அல்லது அதற்கு சமமானதை அதனால் உண்டுபன்ன முடியாது. ஏனென்றால் உண்டாக்கப்பட்ட எதுவும் நித்தியமானதல்ல. அதனால் அந்த “நித்தியமான ஒன்றுக்கு” “நித்தியமான ஒன்றை” உண்டாக்க முடியாது. இருக்கின்ற எல்லாவற்றையும் விட அந்த “நித்தியமான ஒன்று” மேலானதாகும்.

இப்போது, இந்த நித்தியமான ஒன்று பன்மையாக இருக்கமுடியுமா? அப்படி இருக்கக்கூடும். முதலில் அசலாக ஐந்து “நித்தியமான ஏதோ சிலவற்றை” இருந்ததாக வைத்துக்கொள்வோம். அப்படியிருந்தால், காலம் மற்றும் சக்தியின் அடிபடையில் பார்க்கும்போது அந்த ஐந்தும் ஒரே போல இருந்திருக்கும். இவை ஐந்தும் உண்டாக்கப்படாததும், எல்லாம் நித்தியமானதும், எல்லாம் செய்ய முடியும் என்கிற எல்லாவற்றையும் செய்ய வலிமையுள்ளதாகவும் இருக்கும். இது என்ன காட்டுகிறது என்றால் அளவு அல்ல பண்பு தான் உண்மையான பிரச்சனையாகும்.

ஆகையால், இந்த “நித்தியமான சிலவற்றை” பற்றி நமக்கு என்ன தெரியும்? அது தனிமையாக இல்லை. ஏனென்றால் “வேறு ஏதோ ஒன்றும்” இருக்கிறது. உதாரணமாக, நீங்கள் இருக்கிறீர்கள். இப்போது நீங்கள் உங்களை பார்த்து இப்படி கேளுங்கள்: நீங்கள் அந்த “நித்தியமான ஒன்றா” அல்லது “நித்தியமான சிலவற்றில்” ஒன்றா? நீங்கள் அப்படி இருந்தீர்கள் என்றால், உங்களுக்கு ஆரம்பம் இருக்காது, நீங்களே சந்திக்கமுடியாத தேவைகள் உங்களுக்கு இருக்காது, மற்றும் செய்யமுடிகிற எல்லாவற்றையும் நீங்களாகவே செய்ய முடியும். நீங்கள் இப்படிப்பட்டவர்களா? அது உண்மையல்லவென்றால், நீங்கள் உண்மையில் அந்த “ஏதோ வேறு ஒன்றாக” இருக்கவேண்டும்”; “நித்தியமான ஒன்றாக” அல்லது “நித்தியமான சிலவற்றில்” ஒன்றாக நீங்கள் இருக்க முடியாது.

நாம் நமது அந்த பெரிய, மிகவும் இருட்டான, வெருமையான அறையை பற்றி பார்ப்போம். இப்போது அந்த அறைக்குள் ஒரு ஹைட்ரஜன் மூலக்கூறு மற்றும் ஒரு நைட்ரஜன் மூலக்கூறும் இருப்பதாக வைத்துக்கொள்வோம். தர்கத்துக்காக, இவை இரண்டும் அந்த “நித்தியமான சில” என்று வைத்துக்கொள்வோம். இவைகள் எப்போதும் இருந்தவைகள். செய்ய முடியும் என்கிற எல்லாவற்றையும் இவைகளால் செய்யமுடியும்.

ஆகையால், அவைகள் “ஏதோ வேறு ஒன்றை” உண்டாக்கும்படி தீர்மானிக்கிறார்கள், ஏனென்றால் அவைகள் மட்டுமே அந்த அறைக்குள் இருக்கிறவைகள். ஆனால் கொஞ்சம் நிறுத்தி பாருங்கள், அந்த ஹைட்ரஜன் மற்றும் நைட்ரஜனுக்கு எதையாகிலும் தீர்மானம் செய்ய முடியுமா? சரி, அவைகள் “நித்தியமான சிலவற்றாக” இருக்க தீர்மானம் எடுக்கும் ஆற்றல் அவைகளுக்கு தேவை.

இதை யோசித்துபாருங்கள். சில காரியங்களை மாற்ற அந்த “நித்தியமான சிலவற்றை” தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த “நித்தியமான ஏதோ ஒன்று” நித்தியமானதாகும். அது யாரையும் சார்ந்துகொள்ளாமல் தானாகவே எப்போதும் வாழ்ந்திருக்கிற ஒன்று. மிக முக்கியமாக, அது மட்டுமே எப்போதும் இருந்திருக்கிறது. இதின் அர்த்தம் என்ன? அதன் அர்த்தம் என்னவென்றால், அந்த “நித்தியமான ஒன்று” எதையும் சொல்லாமல் எந்த நிகழ்வும் சம்பவிக்காது.

அந்த “நித்தியமான ஏதோ ஒன்று” மட்டுமே இருக்கிறது, அவ்வளவுதான். ஆகையால், அந்த “நித்தியமான ஏதோ ஒன்றின்” தனிமையான நிலையை மாற்ற அந்த “நித்தியமான ஒன்றுக்கு" மட்டுமே முடியும். அந்த “நித்தியமான ஒன்றுக்கு” வெளியே எந்த சக்தியும் இல்லை ஏனென்றால் இருப்பது எல்லாம் அந்த “நித்தியமான ஒன்று” மட்டுமே.

ஆகவே, அந்த ஒரு ஹைட்ரஜன் மூலக்கூறு மற்றும் ஒரு நைட்ரஜன் மூலக்கூறும் “நித்தியமான சிலவற்றை” இருந்தால், வெளியே உள்ள எந்த சக்தியும் அவைகளை நடத்தகூடாததாக இருக்க வேண்டும். அவைகள் மட்டுமே இருக்கின்றன. அவைகளின் சக்தி மட்டுமே உள்ளது.

அவைகள் சக்தி மட்டும் இருப்பதால், அவைகள் மட்டுமே அவைகளின் தனியாக இருக்கும் நிலையை மாற்ற முடியும். அவைகள் “வேறு ஏதோ ஒன்றை” உண்டாக்குபவை அவைகளை வெளியே உள்ள எந்த சக்தியும், தற்செயலாக, தூண்ட முடியாது.

“வேறு ஏதோ ஒன்றும்” தற்செயலாக உண்டாக்கப்பட முடியாது. ஏன்? ஏனென்றால், இது நடப்பதற்கு தற்செயல் ஹைட்ரஜன் மற்றும் நைட்ரஜன் மூலக்கூறுகளை மேற்கொள்ள வேண்டியதாகும். ஆனால், அவைகள் மட்டுமே இருக்கின்றன. செய்ய இயலும் எந்த காரியத்தையும், அவைகள் மட்டுமே செய்ய முடியும். “தற்செயல்” என்பது “வேறு ஏதோ ஒன்று.” “வேறு ஏதோ ஒன்று” அந்த “நித்தியமான ஒன்றை” மேற்கொள்ள முடியாது. உண்மையிலே, இந்த நிலையில், தற்செயல் என்பதே இல்லை.

“தற்செயல்” என்பது அந்த “நித்தியமான ஒன்றுக்கு” வெளியே இருப்பதேயாகில், அது அந்த “நித்தியமான ஒன்றால்” உண்டாகப்படாமல் இருக்கவே முடியாது. ஆனால், “தற்செயல்” என்பது “நித்தியமான ஒன்றால்” உண்டாக்ப்பட்டிருந்தால், அந்த “தற்செயல்” “நித்தியமான ஒன்றை” விட கீழானதாகவே இருக்கும், ஏனென்றால் அது “வேறு ஏதோ ஒன்று” ஆகும்.

ஆகவே, “வேறு ஏதோ ஒன்று” உண்டாக்கப்பட்டிருந்தால், அது “நித்தியமான ஒன்றின்” சக்தியினாலும் மற்றும் சித்தத்தினால் மட்டுமே உண்டாக்கப்பட்டிருக்கும். “தற்செயலால்” “வேறு ஏதோ ஒன்றை” உண்டாக்கமுடியும் என்றால், அந்த “தற்செயல்” என்பது “வேறு ஏதோ ஒன்று” உண்டாகும் முன்பாக உண்டாகப்பட்டிருக்க வேண்டும். ஆனால் “தற்செயலை” “தற்செயலால்” உண்டாக்க முடியாது. அது “நித்தியமான ஒன்றின்” சித்தத்தினாலே உண்டாக்கப்பட்டிருக்க வேண்டும்.

இது நமது ஹைட்ரஜன் மற்றும் நைட்ரஜன் மூலக்கூறுகளை பற்றி என்ன சொல்லுகிறது? அவைகள் “நித்தியமானவைகள்” அல்லவென்று சொல்லுகிறது. அவைகள் “நித்தியமானவர்கள்.” அவர்கள் சித்தம் கொள்ளும் ஆற்றல் உடையவர்கள். அதாவது, அவர்களுக்கு தேர்ந்தெடுக்க முடியும். ஆகையால், அவர்கள் நபர்கள்.

மீண்டும், அந்த “நித்தியமான ஒன்றுக்கு” தேர்ந்தெடுக்கும் ஆற்றல் ஏன் தேவை? அந்த வெருமையான அறையை நினைத்துபாருங்கள்: அதில் ஹைட்ரஜன் மற்றும் நைட்ரஜன் மூலக்கூறுகள் மட்டுமே உள்ளன. அவைகள் “நித்தியமான சில.” அவைகள் மட்டுமே அந்த அறையில் நித்தியமாக இருக்கின்றவைகள்.

அவைகள் வாழ வேறு ஒன்றும் வேண்டியதில்லை. ஆகையால், அவைகள் எதையாகிலும் உண்டுபன்னினால், அது அவர்களுக்கு தேவைப்படுவதினால் (அதாவது விலங்குகளின் பிழைப்புக்கு உள்ள உள்ளுணர்வை போல) அப்படி செய்வதில்லை. மற்றும், அவைகள் “வேறு ஏதோ ஒன்றை” உண்டாக்கினால், அது தற்செயலின்படி இருக்காது—அப்படியென்றால் அவைகள் தற்செயலை முதலாவது உண்டாக்கவேண்டியதாகுமே. தற்செயல் என்பது ஒரு சக்தி, ஆனால் இருக்கின்ற சக்திகள் இரண்டும் அந்த “நி்தியமான சில” (அந்த இரண்டு மூலக்கூறுகள்) மட்டுமே.

மேலும், அந்த மூலகூறுகள் எந்திரங்களாக இருக்கமுடியாது. வெளியே இருக்கும் சக்தியை கொண்டுதான் எந்திரங்களை கட்டவும் திட்டமிடவும் முடியும். ஆனால், காணப்படும் சக்திகள் அந்த மூலக்கூறுகள் (அந்த நித்தியமான வேறு சில) மட்டுமே. அவைகளுக்கு வெளியே எந்த சக்தியும் இல்லை.

ஆகையால், அவைகள் அந்த அறையில் “வேறு ஏதோ ஒன்றை” உண்டுபன்னினால், அதை உண்டுபன்னின காரணம் அவைகளிடம் மட்டுமே இருக்கும், ஏனெனில் அவைகளை தவிர வேறெந்த சக்தியும் இல்லை.

அந்த அறையில் அவர்களை தவிர வேறொன்றுமே இல்லை.

அந்த “வேறு சிலவற்றை” உண்டாக்க அவர்கள் உள்ளுணர்வினால், தற்செயலால், தேவையினால், அல்லது மற்ற ஒருவரின் சித்ததினால் வற்ப்புறுத்தப்படுகிறது இல்லை. அவைகள் வேறொன்றினாலும் கட்டுப்படுத்தப்படுவதும் இல்லை. அவைகள் செயல்படுத்துகின்ற எவைகளாக இருந்தாலும், அவைகளுக்குள் உள்ள காரணங்களினால் மட்டுமே செய்கின்றன.

அந்த காரணம் என்பது அவைகளின் சித்தம் மட்டுமே. அவைகள் “வேறு ஏதோ ஒன்றை” உண்டாக்க தேர்ந்தெடுக்க வேண்டும், அல்லது ஒன்றுமே இருக்காது. அவைகள் “வேறு ஏதோ ஒன்றை” உண்டாக்க வேண்டும் என்ற தீர்மானம் எடுக்காதப்பட்சத்தில், அவைகள் அந்த அறையில் தனியாகவே என்றென்றும் இருக்கும். “வேறு ஏதோ ஒன்றை” உண்டாக்க தேவைப்படுகிற சக்தியை விட அதிக வலிமை அவைகளுக்கு வேண்டும். அவைகள், ஒரு நேரத்தில், “வேறு ஏதோ ஒன்றை” உண்டாக்க தீர்மானிக்க வேண்டியது அவசியம்.

அவைகளுக்கு சித்தம் என்பது இல்லாதிருந்தால் (நாம் முந்தின பாடத்தில் பார்த்த டென்னிஸ் பந்துகளை போல), “வேறு ஏதோ ஒன்றை” உண்டாக்க அவைகளின் சக்தியை பயன்படுத்த முடியாது. அவைகள் வாழ்கின்றதற்காகவே அவைகள் சக்தி உபயோகிக்கப்படும். மற்றும் அவைகளின் “தனித்த” நிலை என்றைக்கும் நிலைத்திருக்கும்.

அந்த “நித்தியமான ஒன்று” நித்தியமாக இருந்ததாகும். ஆகையால், அது மாறும்படி அந்த “நித்தியமான ஒன்றுக்கு” ஒரு காரணம் இருக்க வேண்டியது அவசியம். அந்த “வேறு ஏதோ ஒன்று” இருந்தால், அது இருப்பது அந்த “நித்தியமான ஒன்றால் மட்டுமே,” ஏனென்றால் அந்த “நித்தியமான ஒன்று” தனது தனிமை நிலையை முற்றுப்பெற செய்ய தேர்ந்தெடுத்ததினால் ஆகும்.

அந்த “வேறு ஏதோ ஒன்றின்” காரணம் அந்த “நித்தியமான ஒன்றிற்குள்” இல்லாதிருந்தால், அந்த “வேறு ஏதோ ஒன்று” இருந்திருக்கவே மாட்டாது. ஏனென்றால், ஒரு குறிப்பிட்ட நேரத்தில், இருந்ததெல்லாம் அந்த “நித்தியமான ஒன்று” மட்டுமே.

ஆனால் “வேறு ஏதோ ஒன்று” இருந்ததென்று நமக்கு தெரியும். ஆகையால், அந்த “நித்தியமான ஒன்று” தனது சக்தியை பயன்படுதும்படி முடிவெடுக்கும் ஆற்றல் உள்ளதாக இருக்கவேண்டும். அதற்கு வெளியே “வேறு ஏதோ ஒன்றை” உண்டுபன்னும்படிக்கு தேர்ந்தெடுக்கும் ஆற்றல் அதற்கு வேண்டும். அதற்கு ஒரு சித்தம் இருப்பதால்,1 அந்த “நித்தியமான ஒன்று” ஒரு நபராக இருக்கவேண்டும். இதன் அர்த்தம் என்னவென்றால், அந்த “நித்தியமான ஒன்று” உண்மையில் “நித்தியமான ஒருவராக” இருக்கவேண்டும்.

இந்த “நித்தியமான ஒருவர்” பிழைப்புக்கு உள்ள உள்ளுணர்வினால் கட்டுப்படுத்தப்பட்டவர் அல்ல, ஏனெனில் அவருக்கு எந்த தேவையும் இல்லை மற்றும் அவர் என்றும் இல்லாமற்போவதே இல்லை. மற்றும், முதலாவது “தற்செயலாய்” உண்டுபன்னாத பட்சத்தில் அந்த “நித்தியமான ஒருவர்” “தற்செயலாக” ஒன்றையும் படைப்பதில்லை. தற்செயல் என்பது “நித்தியமான ஒருவரால்” உண்டாக்கப்பட்ட ஒரு சக்தி, அல்லது அது இருக்கவே முடியாது. கடைசியாக, அந்த “நித்தியமான ஒருவர்” ஒரு எந்திரம் அல்ல. அவர் எந்த காரியத்தை செய்யவும் தனக்கு வெளியே உள்ள எந்த சக்தியும் அவரை வற்புறுத்தவும் அல்லது திட்டமிடவும் முடியாது.

இந்த பாடத்தை தொடர, யார் 2 என்ற கட்டுரையை பாருங்கள்.

 கடவுளுடன் ஒரு உறவுத் தொடங்குவது எப்படி?
 எனக்கு ஒருக் கேள்வி உண்டு...

(1) கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர், நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது (சத்திய வேதம், வெளிப்படுத்தின விசேஷம் 4: 11).

இந்தக் கட்டுரையைப் பகிர  

TOP