வாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.
வாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.

மிக பொ௫த்தமான தேவனை கண்டடைவது

அநேக விதமான தேவனை இந்த உலகம் தருகிறது—சத்திய வேதத்தில் வெளிப்பாடு தேவன் மிக பொ௫த்தமானவரா?

நாம் அநேகர் மனத்தில் “மிக பொ௫த்தமான” தேவன் இப்படி இருப்பார் என்று எண்ணுகிறோம். தேவன் வல்லவராக, நம்மிடத்தில் உறவுகொள்ளுபவராக, நம்மை விசாரிப்பவராக தேவன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். இந்த கீழ் காணும் குணங்கள் தேவனுடைய குணங்கள் என்று சத்தியவேதம் சொல்லுகிறது…

#1: நம்மை விட பெரிய தேவன்

சமீபத்தில், மனுகுலம் அநேக முன்னேற்றங்களை செய்திருக்கின்றது. நம் முன்னோர்களை விட நீண்ட நாட்கள் வாழ முடியும், மற்றவர்களிடம் சீக்கிரமாக தொடர்புகொள்ள முடியும், மற்றும் உபயோகமான தகவல்களை நொடிகளில் பெறமுடியும்.

அநேக விஷயங்களில் நாம் முன்னேறினாலும், மற்ற அநேக விஷயங்களில் நாம் வழி விலகுகிறோம். ஒவ்வொரு நூற்றாண்டுகளில், கொடூரமான குற்றங்கள், விவாகரத்தின் எண்ணிக்கை, மற்றும் இளம்வயது தற்கொலை அதிகரிக்கின்றன. மத விரோதங்களினால் ஆயிர கணக்கான ஜனங்கள் சாகின்றனர். கோடிக்கணக்கான ஜனங்கள் கொடிய பசியால் வாடுகின்றனர்.

இந்த பட்டியல் இன்னும் பெரிதாகிக்கொண்டே போகிறது. சிலர் நாமே கடவுள் என்கின்றார்கள். நாமே நமது விதியின் கர்தாக்கள் என்கின்றார்கள். மனுவர்க்கமே தேவன் ஆனால், நாம் அந்த வேலையை சரியாக செய்யவில்லை என்பது உண்மை. அதனால், மனுவர்க்கதை விட பெரிய தேவன் இருப்பது நல்லதல்லவா? நம்மாலே நாம் செல்லமுடியாத இடத்துக்கு அவரால் கொண்டு போக முடியும் அல்லவா?

சத்திய வேதத்தில் விவரிக்கப்பட்டுள்ள தேவன் அப்படிப்பட்டவர். அவர் உலகத்தையே சிருஷ்டித்தவர்—அவர் எல்லையற்றவர், அவர் எல்லாம் அறிபவர், அவர் சர்வ வல்லவர், அவர் எப்போதும் இருந்தவர், மற்றும் அவர் எல்லாவற்றையும் ஆதரிக்கின்றவர்.

“அவர் சொல்லுகிறார்,நான் பூமியை உண்டுபண்ணி, நானே அதின்மேல் இருக்கிற மனுஷர்களைச் சிருஷ்டித்தேன்.”1 “நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன் எனக்குச் சமானமில்லை.”2 “இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்.”3

#2. தனிப்பட்ட விதத்தில் அவர் அறியப்படத்தக்கவர்

தேவன் ஒரு சக்தி என்றும் அவர் எல்லாவற்றிலும் இருக்கிறார் என்ற நம்பிக்கை இன்றைய தினங்களில் பிரபலமானதாக இருக்கிறது. ஆனால், எல்லாம் தேவ வல்லமையால், ஒவ்வொரு நொடி நேரமும், ஆதரிக்கப்பட்டிருந்தாலும், அதை விட மேலான காரியத்தை செய்பவர். உதாரணமாக, ஒரு பெற்றோரை போல, உடன்பிறப்பை போல, அல்லது நண்பனை போல தேவன் இருந்தால் நல்லது அல்லவா? நம்மோடு பேசுகிற, நாம் பிரச்சனைகளை பகிர்ந்துகொள்ள, நமக்கு வழிக்காட்ட, வாழ்க்கையை அவரோடு அனுபவிக்க ஒருவராக தேவன் இருந்தால் நலமாக இருக்கும் அல்லவா? சார்பற்றதன்மை யுள்ள, அறிய முடியாத, தூரமாக இருக்கிற இந்த தேவனில் அப்படி விசேஷமானது என்ன?

அவர் இவ்வளவு கம்பீரமானவராக இருந்தாலும், சத்திய வேதத்தின் தேவன் அறியப்படத்தக்கவரும் நாம் அவரை அறிய வேண்டும் என்று விரும்புகிறவருமாக இருக்கிறார். தேவனை பார்க்கமுடியாது, ஆனால் அவரிடம் பேச முடியும், அவரிடம் கேள்வி கேட்கவும், அவர் பேசுவதை கேட்கவும் முடியும், மற்றும் அவர் நமக்கு பதில்களையும் வாழ்க்கைகான வழிநடத்துதலையும் அவர் தருவார். அவர் அந்தபதில்களையும் வழிநடத்தலையும் அவர் வார்த்தையாகிய சத்திய வேதத்தின் மூலமாக தருகிறார். இந்த வேதத்தை அநேகர் தேவன் நமக்கு எழுதின அன்பின் கடிதம் என்றும் சொல்லுகிறார்கள்.

ஒரு நபர் தனது குடும்பத்திலுள்ளவர்களிடம் வைத்திருக்கும் நெருங்கிய உறவைப்போலவே தேவனிடமும் உறவு கொள்ள முடியும். மற்றும் தேவனை அறிகிறவர்களை அவர் தமது பிள்ளைகள் என்றும், மனவாட்டி என்றும், நண்பர்கள் என்று அழைக்கிறார். ஆகையால், சத்திய வேதத்தின் தேவன் சார்பற்றதன்மை உடையவர் அல்ல. அவர் கோபப்படுவார், வேதனை அடைவார், இரக்கம், தயவு, மன்ணிப்பு காண்பிப்பார், மற்றும் அவர் உணர்ச்சி உள்ள ஒருவர். அவர் மிகவும் அறிவுத்திறனுடையவர். அவருக்கு தனித்தன்மை மற்றும் அறிவு உண்டு. அவரை குறித்த உண்மைகளை மட்டுமல்ல, அவரையே ஒரு நெருங்கிய நண்பனை போல மிகவும் நெருக்கமாக அறிய முடியும். “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.”4

#3. மனிதனின் அனுபவங்களை புரிந்து கொள்ளத்தக்கவர்

தேவன் எங்கேயோ தொலை தூரத்தில் இருக்கிறார் என்றும், அவர் பூமியை படைத்துவிட்டு அது தானாகவே இயங்க விட்டுவிட்டார் என்று சிலர் எண்ணுகின்றனர். இந்த உலகத்திலும் அதில் நடக்கும் எல்லாவற்றிலேயும் ஈடுபடுகின்ற ஒருவர் தேவனாக இருந்தால் நலமாக இருக்கும் அல்லவா? மனிதர்களாக நாம் சந்திக்கும் கஷ்டங்கள், பொறுப்புகள், சவால்கள் இவைகளை புரிந்து கொள்ளும் தேவன் இருந்தால் நலமாக இருக்கும் அல்லவா? இந்த கொடூரமான உலகில் அவர் வாழ்ந்திருந்தால் அவருக்கு வாழ்க்கையின் கஷ்டங்களை சகிப்பது என்றால் என்ன என்று தெரிந்திருக்கும் அல்லவா?

நம்மில் ஒருவராக இருந்தால் இன்னதென்று சத்திய வேதத்தின் தேவனுக்கு தெரியும். இயேசு கிறிஸ்து தேவ குமாரன் மட்டுமல்ல, அவர் மனித ரூபம் மற்றும் மனித தன்மையை எடுத்த தேவனானவர்.

“ஆதியிலே வார்த்தை [இயேசு] இருந்தது, அந்த வார்த்தை [இயேசு] தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை [இயேசு] தேவனாயிருந்தது.” “அந்த வார்த்தை மாம்சமாகி [மனிதன்], கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்”5

தேவ குமாரனை பற்றி வேதம் இப்படி சொல்லுகிறது, “இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்[தார்].”6 “அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூப[மானவர்].”7 அவர் “அதிசயமானவர், நித்திய பிதா”8 அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டார்.”9 “தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக, அவருக்குள் வாசமாயிருக்கிறது.”10 “அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான…சிருஷ்டிக்கப்பட்டது.”11

இயேசுவே தம்மை பற்றி இப்படி சொன்னார்: “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்.”12 “என்னைக் காண்கிறவன் என்னை அனுப்பினவரைக் காண்கிறான்.”13 “நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.”14

அவர் முழுவதும் தேவனாக இருந்தாலும், அவர் முழுவதும் மனிதனாகவும் இருந்தார். அவருக்கு பசி எடுத்தது; அவர் உறங்கினார், அழுதார், சாப்பிட்டார். நாம் சந்திக்கும் எல்லா விதமான பாடுகளையும் அவர் சகித்தார். ஆகையால், வேதம் சொல்லுகிறது, “நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.”15

ஆகையால் சத்திய வேதத்தின் தேவன் உலகத்திலுள்ள வேதனை, வழி, மற்றும் பொல்லாங்கை அனுபவிக்காமல் விலகி இருந்தவரல்ல. நாம் சகிக்கிறது போலவே அவரும் சகித்தார். அவர் பூமியில் இருந்த காலத்தில், அவர் மிக எளியவராகவே இருந்தார். அவர் ஒரு எழையான குடும்பத்தில் பிறந்தார், அவர் பார்ப்பதற்கு கவர்ச்சியுடையவரல்ல, பகை விரோதத்தை அனுபவித்தார், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டார், மற்றும் அநியாயமாக கொலை செய்யப்பட்டார்.

#4. உன்மையாகவே நம்மை குறித்து அக்கறை உள்ளவர்

நம்மில் அநேகர் மற்றவர்கள் நம்மை நேசித்து அங்கீகரிக்க வேண்டும் என்று விரும்புகின்றோம். மற்றவர்கள் நம்மை அக்கறை காட்டுகின்றார்களா மற்றும் நம்மேல் கரிசனை உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்று அவர்கள் கிரியைகள் மூலமாக நிரூபிக்க நாம் எதிர்பார்க்கிறோம். இப்படி அல்லவா நாம் தேவனிடமும் எதிர்பார்க்கிறோம்? தேவன் நம்மேல் அக்கறை உள்ளவர் என்றும் அவர் நம்மை நேசிக்கிறார் என்ற ஆதாரம் இருந்தால் நலமாயிருக்கும் அல்லவா?

சத்திய வேதத்தின் தேவன் நம்மேல் உன்மையான அக்கறை காட்டுபவர். அவர் வார்த்தைகளில் அப்படியாக சொல்லி இருக்கிறார். “தேவன் அன்பாகவே இருக்கிறார்”16 என்று வேதம் சொல்லுகிறது. அன்பையும் ஆரவணைப்பையும் வாயில் சொல்லுவதை விட செயலில் காட்டுவது மிகவும் சிறந்தது. இந்த விஷயத்தில் சத்திய வேதத்தின் தேவன் மிகவும் தனிமை வாய்ந்தவரும் ஆச்சரியமானவருமாக இருக்கிறார். அவர் நம்மை எந்த அளவுக்கு பாராமறிக்கிறார் என்பதை “காட்டினார்”…

“தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்திசெய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.”17 “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.”18

சத்திய வேதத்தின் தேவன் பரிபூரணரும் பரிசுத்தமானவர். “தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை.”19 எனவே அவர் சுத்தமும் பரிசுத்தமுமான உறவுகளை விரும்புகிறார். தேவனுக்கு முன் நாம் சுத்தமானவர்களாக இருக்க வழியை உண்டுபன்னும்படி தமது சொந்த குமாரனை பூமிக்கு அனுப்பினார். இயேசு ஒரு பரிபூரண வாழ்க்கை வாழ்ந்தார். அவர் அடிக்கப்பட்டு, துன்புறுத்தபட்டு, சிலுவையில் அரையப்பட்டார். இவைகளெல்லாம் நாம் பேசின, செய்த, சிந்தித்த தவறான காரியங்களுக்காக (பாவங்களுக்காக) அவர் செலுத்தின கட்டணமாகும். அவர் நமது இடத்தில், நமக்கு பதிலாக மரித்தார். “நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.”20 “நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.”21

தேவன் நம்மேல் அக்கரைகொண்டததினால் மாத்திரமே அவர் தமது குமாரனை நம் இடத்தில், நம் பாவங்களுக்காக மரிக்க பூமிக்கு அனுப்பினார். இவ்வளவும் நம்மை அவர் அறியும்படிக்காகவே செய்தார். நம்மை அவர் உறவில் சேர்க்க எதையும் செய்ய அவர் சித்தமாயிருந்தார்…நம் பாவங்களை அவர் பரிகரிப்பது அவசியமாக இருந்தது. இப்போது நாம் முற்றுமாக மன்னிப்பு பெறவும் மற்றும் அவரோடு தடையில்லாமல் உறவுகொள்ளவும் முடியும்.

#5. எல்லாவற்றையும் முழுமையாக அவர் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறவர்

இந்த பூமியில் நடக்கிற பயங்கரமான காரியங்கள் ஒரு நல்ல சர்வவல்லமை உள்ள தேவன் இல்லை என்பதை நிரூபிக்கிறது அல்லவா? அப்படி அல்ல. ஒரு பரிபூரண தேவன் சில நேரங்களில் கெட்ட காரியங்கள் சம்பவிக்க சில நேரங்களில் “அனுமதிக்கிறார்,” அவரது பெரிய திட்டத்தின் ஒரு பகுதியானது. பூமியில் நடக்கிற எல்லாம் தேவனுக்கு முன்னமே தெரியும், மற்றும், அவரது பெரிதான திட்டத்தின் அடிபடையில், எவ்வளவு அனுமதிக்க வேண்டுமோ அது மட்டும் அனுமதிக்கிறார்.

சத்திய வேதத்தின் தேவன் இப்படிப்பட்டவர். அவரது வார்த்தையில் எல்லாமல் பூமியில் ஒன்றும் நடப்பதில்லை என்று அவர் சொல்லுகிறார். அவர் எல்லாவற்றையும் ஆளுகிறவர். “ஆண்டவர் கட்டளையிடாதிருக்கக் காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்?”22 “அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன்”23 “கர்த்தருடைய ஆலோசனை நித்தியகாலமாகவும், அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும்.”24 “கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்.”25

ஆனால், நடக்கும் எல்லா காரியங்களிலும் தேவன் பிரியப்படுகிறார் என்றல்ல. உதாரணமாக, இயேசு தமது சீடர்களுக்கு எப்படி ஜெபிக்க வேண்டும் என்று சொன்னார்: அந்த ஜெபத்தில் இது ஒரு முக்கியமான வாக்கியம்: “உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.”26 தேவனின் நேர்த்தியான சித்தம் எப்போதும் பரலோகத்தில் நடக்கிறது, ஆனால் பூமியில் அப்படி நடக்கவில்லை. தேவன் எல்லாவற்றையும் ஆளுகிறவர் ஆனாலும், பூமியில் நடக்கும் எல்லாம் அவருக்கு பிடித்தவைகள் அல்ல. ஆனால், ஏதோ காரணத்திற்க்காக, அவைகள் சம்பவிக்க அவர் அனுமதிக்கிறார், ஒரு வேலை மனிதர்களுக்கு தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை அவர் தந்ததினால் ஆகும்.

ஆனால் சத்திய வேதத்தின் தேவனுக்கு ஒரு திட்டம் இருக்கிறது, மற்றும் அவர் “இருதயத்தின் நினைவுகளை நடப்பித்து நிறைவேற்றுமளவும்,”27 அவர் ஓய்ந்திருப்பதில்லை. அவரது திட்டம் என்ன? நாம் அனுபவிக்கிற இப்போதிருக்கிற சூழ்நிலையைவிட முற்றும் வித்தியாசமான இடத்தில் தமது ஜனங்களோடு வாசம்பன்னுவதே அவரது இறுதியான குறிக்கோலாகும். அந்த வரப்போகும் உலகத்தை பற்றி தேவன் இப்படி சொல்லுகிறார்: “மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது. சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும், அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்.”28

#6. வாழ்க்கைக்கு அர்த்ததையும் நோக்கத்தையும் கொடுப்பவர்

நீங்கள் முடித்த முக்கியமான வேலை அல்லது திட்டத்தை நினைக்கும்போது, அது முடிந்ததும் உங்களுக்குள் உண்டான ஒரு நோக்கத்தை அடைந்த உணர்வு நீங்கள் நினைவு கூறலாம். உங்கள் வாழ்க்கையில் எப்போதுமே இப்படி இருக்கவேண்டும் என்று விரும்புகிறீர்களா? ஏதோ ஒன்றை நாடுகின்ற ஒன்றாகஇருக்கவேண்டுமா? உங்கள் வாழ்க்கையை ஒரு நோக்காத்திற்காக படைத்த மற்றும் அந்த நோக்கத்தை அனுபவிக்க வழிநடத்தும் தேவன் ஒருவர் இருக்கிறாரா?

ஆம். சத்திய வேதத்தின் தேவனால் அதை செய்ய முடியும். நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும் நோக்கமுள்ளதாகவும் மாற்றுவேன் என்று அவர் வாக்குரைத்திருக்கிறார். அவரோடுள்ளஉறவின் மூலமாக, “நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்ப[ட்டிருக்கறோம்].”29 மற்றவர்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல வித்தியாசத்தை உண்டாக்க முடியும். அவரது பெருந்திட்டதின் பகுதியாக இருக்க முடியும்.

சத்திய வேதத்தின் தேவன் சொல்லுகிறது என்னவென்றால், ஒவ்வொரு நொடியும் அவரோடு உள்ள உறவினால், அவர் நம்மை தமக்கு பிரியமான காரியத்தை செய்ய வழி நடத்துவார். “உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.”30 இப்படி நான் சொல்லுவதினால், வாழ்க்கை பூரனமான அதிசயமாகிவிடும் என்று அர்த்தமல்ல. வாழ்க்கையில் வியாதிகள், பிரச்சனைகள், தனிப்பட்ட விதத்தில் தோல்விகள் உள்ளன. வாழ்க்கை பூரண படுவதில்லை, அது மிகவும் செழிப்பாகிறது. தேவனை அறிவதினால் உண்டாகும் நன்மைகள் இவைகளே: “அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்”31

#7. உன்மையான நிறைவைத்தருபவர்

அன்பு மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற விருப்பத்தை போலவே, நம்மில் அநேகர் வாழ்க்கையின் நிறைவை கண்டுகொள்ள விரும்புகிறோம். நமக்குள் ஒரு தாகம் இருக்கிறது; மற்றும் அந்த தாகத்தை தனிக்க நாம் ஏங்குகிறோம். ஆனால் நாம் எவ்வளவு முயற்சித்தாலும், அந்த தாகத்தை பணத்தாலோ, சம்பதுகளாலோ, காதல் மூலமோ, அல்லது வெறும்உல்லாசத்திலாவது திருப்தி செய்ய முடியாது. அந்த தாகத்தை தீர்க்கும் தேவன் ஒருவர் இருந்தால் மிக நலமாயிருக்கும் அல்லவா? அந்த தேவனின் பிரசன்னம் ஒரு நிலையான திருப்தியை வாழ்க்கையில் தந்தால் நலமானதாக இருக்கும் அல்லவா?

சத்திய வேதத்தின் தேவன் மிக நிறைவான வாழ்க்கையை தருபவர். இயேசு சொன்னார், “நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.”32 பின்னும் அவர் சொன்னார், “ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்.”33 ஆகையால், சத்திய வேதத்தின் தேவனானவர் மற்ற எதினாலும் திருப்தி செய்ய முடியாத நமது உள்ளத்தின் ஏக்கத்தை தீர்ப்பார். (மற்றும் அவர் நம்மை உண்டாக்கின விதமே அப்படியாகும்: அவரை அல்லாமல் மற்ற எதினாலும் நாம் திருப்தி அடைய முடியாது!)

இந்த மிக பொ௫த்தமான தேவனை விரும்புவது

சத்திய வேதத்தின்படி, ஒரே ஒரு மெய்யான தேவன் இருக்கிறார்; அவரே எல்லாவற்றையும் படைத்த சிருஷ்டிகர். ஆனால் அந்த தேவன் மட்டுமே மிக பொ௫த்தமான தேவன். வேறு ஒரு தேவன் உண்டாக வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது, அப்படியே நாம் நினைத்தாலும், வேறு ஒரு தேவன் நமக்கு ஏன் வேண்டும்? உன்மையான தேவனே மிக சிறந்த தேவனானவர்.

சத்திய வேதத்தின் தேவனை பற்றி இந்த கட்டுரையில் கொஞ்சம் மட்டுமே சொல்லப்பட்டு இருக்கிறது. நீங்கள் இந்த தலைப்பை பற்றி ஆராய விரும்பினால், வேதாகமத்தில் உள்ள “யோவான்” என்ற பகுதியை வாசியுங்கள். நீங்கள் உன்மையாக அவரை தேடினால் மற்றும் இந்த சத்திய வேதத்தின் தேவன் உன்மையானவராக இருந்தால், அவர் உங்களுக்கு தன்னை வெளிப்படுத்தமாட்டாரா? அவர் சொல்லுகிறார், “என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்; அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்.”34 “கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.”35

“இந்த உன்மையான தேவனே மிக சிறந்த தேவன்.”

இந்த மிக பொ௫த்தமான தேவனை நான் அறிந்துக்கொள்வது எப்படி என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அடிபடையில், தேவனோடு உறவை ஆரம்பிப்பது என்பது திருமண வாழ்க்கையை ஆரம்பிப்பதை போல இருக்கிறது. நீங்கள் உங்கள் விருப்பத்துடன் இந்த உறவுக்குள் பிரவேசிக்க வேண்டும். அதேபோல, நீங்கள் தேவனை பார்த்து உன்மையாக “நான் செய்கிறேன்” என்று வாக்குமொழி கொடுக்கிறதின் நிமித்தம் இந்த உறவு ஆரம்பமாகிறது.

இயேசு கிறிஸ்து நம் பாவங்களுக்காக மரித்தார், மூன்றாம் நாள் மரித்தோரில் இருந்து எழுந்தார், இன்றும் ஜீவிக்கிறார். நீங்கள் உங்கள் பாவ மன்னிபுக்காக அவரை நம்பும்போது, அவர் உங்களுக்கு புதிய வாழ்வை தருகிறார்: “குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ அவன், நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார்.”36

தேவன் பாட்சபாதமுள்ளவர் அல்ல. எல்லா ஜனங்களும் தேவனின் சாயலாக படைக்கப்பட்டவர்கள். ஆகையால் அவரது நித்திய குடும்பம் இப்படி வர்ணிக்கப்பட்டு இருக்கிறது: “இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைகளிலிருமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள்.”37 உங்கள் பாவங்களில் ஒன்றுகூட தேவனிடம் உறவை துவங்க தடை செய்ய முடியாது. பாவத்தின் பிரச்சனையை இயேசு சிலுவையில் தீர்த்து விட்டார். இப்போது நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் உங்களுக்காகவே இயேசு மரித்தார் என்று நீங்கள் விசுவாசிப்பது மட்டுமே. நீங்கள் முந்தின நாட்களில் எந்த பாவம் செய்திருந்தாலும் அதை பற்றியதல்ல, அவரை விசுவாசியுங்கள்.

தேவனோடு உறவை ஆரம்பித்ததும், அந்த உறவு நித்தியம் வரை தொடரும். ஆனால், அந்த உறவு ஒவ்வொரு நாளும் ஜீவனுள்ள மற்றும் மிக முக்கியமாக இந்த வாழ்க்கையில் காண வேண்டும், அந்த உறவு ஒவ்வொரு நாளும் வளரும். எந்த உறவிலும் இருக்கிறது போல ஏற்ற தாழ்வுகள், சந்தோஷம் வேதனைகள் இருக்கலாம். ஆனால் அவரை அறிய வேண்டும் என்ற நோக்கத்துடன் படைத்த அந்த தேவனிடம் உங்கள் உறவு இருக்கும்.

தேவன் உங்கள் உள்ளத்தில் பேசுகிறாரா? இயேசு சொன்னார், “இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசிப்பேன்.”38 நீங்கள் தேவனை உங்கள் வாழ்க்கையில் வரவேற்க விரும்புகிறீர்களா? அப்படி இருந்தால், கீழ்க்காணும் ஜெபத்தை செய்யுங்கள்

அன்புள்ள ஆண்டவரே, நான் பாவி என்பதை அறிக்கை செய்கிறேன். என் பாவங்களை நீர் உம்மேல் சுமந்து எனக்காக சிலுவையில் ஜீவனை கொடுத்தீர். உம் மன்னிப்பை நான் பெற்று உம்மோடு உறவுகொள்ள விரும்புகிறேன். உம்மை என் வாழ்க்கையின் ஆண்டவரும் இரட்சகருமாக இருக்க அழைக்கிறேன். இன்றைய தினத்தில் இருந்து நீர் என் தேவனாக இருப்பீராக. என்னை எதற்காக உண்டுபன்னினீரோ அந்த நபராக என்னை மாற்றும்.

 நான் என் வாழ்வில் இயேசுவைக் கேட்டேன்(சிலப் பயனுள்ளத் தகவல்கள்ப் பின்வருமாறு)...
 நான் என் வாழ்வில் இயேசு வருமாரு வேண்டலாம்,மேலும் முழுமையாக விளக்குங்கள்
 எனக்கு ஒருக் கேள்வி உண்டு...

(1) ஏசாயா 45:12 (2) ஏசாயா 46:9 (3) வெளி 1:8 (4) யோவான் 17:3 (5) யோவான் 1:1, 14 (6) எபிரெயர் 1:3 (7) கொலோசெயர் 1:15 (8) ஏசாயா 9:6 (9) பிலிப்பியர் 2:8 (10) கொலோசெயர் 2:9 (11) கொலோசெயர் 1:16 (12) யோவான் 14:9 (13) யோவான் 12:45 (14) யோவான் 10:30 (15) எபிரெயர் 4:15 (16) 1 யோவான் 4:8, 16 (17) 1 யோவான் 4:9-10 (18) யோவான் 3:16 (19) 1 யோவான் 1:5 (20) 2 கொரிந்தியர் 5:21 (21) ஏசாயா 53:6 (22) புலம்பல்3:37 (23) ஏசாயா 46:10 (24) சங்கீதம் 33:11 (25) நீதிமொழிகள் 19:21 (26) மத்தேயு 6:10 (27) எரேமியா23:20 (28) வெளி 21:3-5 (29) எபேசியர் 2:10 (30) நீதிமொழிகள் 3:6 (31) கலாத்தியர் 5:22-23 (32) யோவான் 10:10 (33) யோவான் 6:35 (34) நீதிமொழிகள் 8:17 (35) மத்தேயு 7:7 (36) யோவான் 6:40 (37) வெளி 7:9 (38) வெளி 3:20.

இந்தக் கட்டுரையைப் பகிர  

TOP