வாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.
வாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.

யார் 2

இது "யார்" என்ற கட்டுரையின் பின்தொடர்சி.

இது “எப்பொழுதாகிலும் ஒன்றும் இருந்ததில்லையா?,” “ஏதோ ஒன்று,” “யார்” என்றவைகள் அடங்கிய தொடர்வெளியீட்டின் கடைசி கட்டுரையாகும். அந்த பாடங்களில் இருந்த முக்கியமான குறிப்புகள் இவைகளே:

1. “ஒன்றும் இல்லை” என்பது எப்போதுமே இருந்ததில்லை. அது அப்படி இருந்திருந்தால், இப்போதும் “ஒன்றும் இல்லாமல்” இருந்திருக்கவேண்டும். ஆனால், ஏதோ ஒன்று இருக்கிறது. உதாரணமாக, நீங்கள்.

2. “ஒன்றும் இல்லை” என்பது எப்போதுமே இருந்ததில்லை. எல்லா காலத்திலும் ஏதோ ஒன்று எப்போதும் இருந்திருக்கிறது. இந்த ஒன்றை நாம் “நித்தியமான ஒன்று” என்று அழைக்கலாம். இந்த “நித்தியமான ஒன்றுக்கு” ஆதியும் இல்லை அந்தமும் இல்லை, அதற்கு தானாகவே சந்திக்க முடியாத தேவை என்பது ஒன்றுமில்லை, எதையெல்லாம் செய்யல்படுத்த முடியுமோ அவை எல்லாவற்றையும் அதனால் செய்யமுடியும், மற்றும் அது உண்டுபன்னுகிறவைகளை விட அது மேலானதாகவே இருக்கிறது.

3. அந்த “நித்தியமான ஒன்று” என்பது வெளியே இருக்கும் எந்த சக்தியினாலும் கட்டுப்படுத்தப்படுகிறதற்கும் அல்லது திட்டம் இடப்படுகிறதற்கும் ஒரு எந்திரம் அல்ல. தனக்கு ஒரு தேவை இருப்பதினால் “நித்தியமான ஒன்று” எதையும் உண்டுபன்னுவதில்லை, ஏனெனில் அதற்கு எந்த தேவையும் இல்லை. ஆகவே, அது “மற்ற ஏதாகிலும் ஒன்றை” உண்டுபன்ன வேண்டும் என்று தீர்மானிப்பதினாலேயே அது உண்டுபன்னுகிறது. அதன் அர்த்தம் என்னவென்றால், அந்த “நித்தியமான ஒன்றுக்கு” சுய சித்தம் ஒன்று இருக்கிறது என்பதே; ஆகவே, அது ஒரு நபர். ஆகவே, அந்த “நித்தியமான ஒன்று” உண்மையில்“நித்தியமான ஒருவராக” (அல்லது பலராக) இருக்கவேண்டும்.

தொடர்ந்து, ஏற்கனவே சொல்லப்பட்டவைகளுக்கு அப்பால் இந்த “நித்தியமான ஒருவரை” பற்றி நாம் எதை புரிந்துகொள்ள முடியும்? (இங்கே நாம் “அது” என்று பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, “அவன்” அல்லது “அவள்” என்று சொல்லவேண்டிய அவசியம் உண்டாகிறது, ஏனென்றால் அந்த “நித்தியமான ஒன்று” என்பது “நித்தியமான ஒருவராகும்.” தற்பொது, நாம் “அவன்” என்று குறிப்பிட தெரிந்துகொள்கிறோம், ஆனால், பாலினம் ஒரு பிரச்சனை இல்லை.)

அந்த “நித்தியமான ஒருவருக்கு” தானாக நிறைவேற்ற முடியாத தேவைகள் எதுவும் இல்லை என்பதினால், எப்படிப்பட்ட சூழலும் இல்லாமல் அவரால் வாழ முடியும். ஏனெனில், அவரை தவிர ஒன்றுமே இல்லாதிருந்தபோதே அவர் வாழ்ந்திருந்தார். சூழல் ஒன்று இருந்திருந்தால், அது அவருக்கு வெளியே இருந்திருக்கவேண்டும், ஆகையால் அது உண்டுபன்ன வேண்டிய ஒன்றாகும். ஆனால் உள்ளது அனைத்தும் அவர் மட்டும் தான்.

பெரும்பாலும், அந்த “நித்தியமான ஒருவர்” எல்லாவற்றுக்கும் மேலானவராக இருக்கவேண்டும். அதாவது, அவர் காலம் மற்றும் இடம் இவைகளுக்கு அப்பால் வாழ முடியும்: இவ்விரண்டினாலும் அவர் கட்டுப்படுத்தப்பட்டவர் அல்ல. அவர் நித்தியமாக இருப்பவர், ஆகையால் நேரத்தின் வரம்புக்கு உட்பட்டவர் அல்ல. மற்றும் அவரால் ஒரு சூழல் இல்லாமலே வாழ முடியும்; ஆகவே அவர் இடதிற்க்கு அப்பாற்பட்டவர்.

காலம் மற்றும் இடதிற்க்கு மேலானவராக இருக்கிறபடியால், அந்த “நித்தியமான ஒருவர்” காணப்படாதவர். இடத்தை நிரப்பும் ஒன்று மட்டுமே கண்ணால் காணக்கூடியதாக இருக்கும். இடதிற்க்கு அப்பாற்பட்டதாக ஒன்று இருந்தால், அதை பார்க்க எப்படி முடியும்? நிச்சயமாக, அந்த “நித்தியமான ஒருவர்” காணக்கூடாதவரும் மற்றும் எந்த ஒரு சரீரம் அல்லது உருவமும் இல்லாமல் வாழமுடிகிற ஒருவராகும்.

விவாதத்தின் பொருட்டு, அந்த “நித்தியமான ஒருவர்” “வேறு ஏதோ ஒன்றை”—அல்லது “வேறு ஏதோ ஒருவரை”--உண்டாக்கவேண்டும் என்று தீர்மானிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த “நித்தியமான ஒருவர்” சில விதங்களில் தம்மை போல இருக்கிற “வேறு ஒருவரை” உண்டாக்க நினைக்கிறார். அவரைப்போலவே, அந்த “வேறு ஒருவருக்கும்” சுய உணர்வு இருக்கும்; அது சித்தம் கொள்வதற்க்கு தேவையான ஒரு அம்சமாகும். ஆகையால், அந்த “வேறு ஒருவர்” சுயமானவர் மற்றும் ஒரு சித்தம் கொள்ளும் ஆற்றல் உடையவர்.

இந்த “வேறு ஒருவரை” பற்றி நாம் என்னவென்று நிச்சயிக்க முடியும்? இந்த “வேறு ஒருவர்” நேரத்துக்கு அப்பாற்பட்டவாரா? இல்லை, அந்த “வேறு ஒருவர் நித்தியமாக இருந்த ஒருவர் அல்ல. அந்த “வேறு ஒருவருக்கு” ஒரு ஆரம்பம் இருக்கிறது மற்றும் அதனால் நேரத்துக்கு உட்பட்டவரானவர்.

அந்த “நித்தியமான ஒருவர்” உண்டுபன்னும் எதுவும் காலம் மற்றும் இடத்தை பொருத்தவரை தாழ்ந்ததாக இருக்கவேண்டும். அந்த “வேறு ஒருவர்” பிற்காலத்தில் என்றென்றுமாக வாழ்ந்தாலும் சரி, அவருக்கு நேரத்தில் ஒரு ஆரம்பம் இருந்தது. உண்மையில், அவரது காலவரிசை “நித்தியமான ஒருவரின்” [எல்லையற்ற] காலவரிசைக்குள் வருகிறது.

இதை பற்றி என்ன சொல்வோம்? அந்த “வேறு ஏதோ ஒருவர்” இடதிற்க்கு உட்பட்டவராக இருக்கமுடியுமா? ஆம். அந்த “நித்தியமான ஒருவர்” மட்டுமே எந்த சூழலும் இல்லாமல் வாழமுடியும். இந்த “வேறு ஏதோ ஒருவர்” வாழ ஒரு சூழல் தேவை, ஆனால் என்ன? இதை என்னுவதுபோல நேரத்தை நினைத்துக்கொள்ளுங்கள். இந்த “வேறு ஏதோ ஒருவர்” அந்த “நித்தியமான ஒருவரின்” காலவரிசைகுள் இருப்பவர். அதேபோல, அந்த “வேறு ஏதோ ஒருவர்” நித்தியமான ஒருவரின்” “இடம்வரிசை” இல் இருப்பவர்.

அந்த “நித்தியமான ஒருவர்” இடத்திற்க்கு மேலானவர். ஆகையால், காலத்தில் அவர் எங்கேயும் இருப்பதுபோல, இடத்திலும் அவர் எங்கு இருக்கமுடியும். ஆகையால், அந்த “வேறு ஏதோ ஒருவர்” உண்டாக்கப்படும்போது, அவன் அந்த “நித்தியமான ஒருவரின்” காலம் மற்றும் இடத்தில் உள்ளவன்.

இப்போது “நித்தியமான ஒருவர்” மற்றும் அந்த “வேறு ஏதோ ஒன்று” இருக்கிறதாக அறிந்துகொள்கிறோம், ஆனால் ஒரு பிரச்சனை உண்டு. அந்த “வேறு ஏதோ ஒன்று” “நித்தியமான ஒருவரை” பார்க்கமுடியாது, ஏனெனில் அந்த “நித்தியமான ஒருவர்” இடத்திற்கு மேலானவர். அவர் ஒரு இடத்தை கொள்பவர் அல்ல.

ஆகையால் இந்த “வேறு ஏதோ ஒன்று” அந்த “நித்தியமான ஒருவரை” கண்டறிய முடியாது. ஆகையால், “வேறு ஏதோ ஒன்றுக்கு” தன்னை வெளிப்படுத்தும்படி அந்த “நித்தியமான ஒருவர்” ஏதாவது செய்யவேண்டும். அவர் தனது “எல்லை கடந்த” நிலையை மாற்றவேண்டும். ஏதோ ஒரு “எல்லை கடந்த நிலை மாற்றம்” வேண்டியது அவசியம். அது சாத்தியமா?

அந்த “ஏதோ வேறு ஒருவர்” என்பவர் படைக்கப்பட்டவர் என்பதை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள். ஆகையால் அந்த “வேறு ஏதோ ஒருவர்” காலத்துக்கும் இடத்துக்கும் உட்பட்டவன். அவனின் சாயல் (தன்மை) எதுவாக இருந்தாலும், அது காலத்திலும் மற்றும் இடத்திலும் கண்டறியக்கூடியதாகும். அதனால், அந்த “நித்தியமான ஒருவர்” செய்யவேண்டியது என்னவென்றால் “வேறு ஏதோ ஒன்றுக்கு” கொடுக்க இருக்கிற சாயலைப்போல ஒரு சாயல் அவர் தரிக்கவேண்டும். இப்படி அவரை கண்டறிய செய்ய முடியும்.

ஆனால் இங்கு ஒரு கேள்வி எழும்புகிறது: அந்த “நித்தியமான ஒருவர்” தன்னை வெளிப்படுத்தும்படி “எல்லை கடந்த நிலை மாற்றத்தை” செய்துக்கொள்ளுகின்றதினால், அதுதான் அந்த “நித்தியமான ஒருவரின்” முழுமையா?

இல்லை! அவர் வெளிப்படுத்தாத அநேக காரியங்கள் அவருக்குள் உண்டு. அவரால் தம்மை பற்றி இன்னும் அதிகமாக, முழுமையாக—அதாவது தமது “எல்லை கடந்த” நிலையில்—வெளிப்படுத்தமுடியும், ஆனால் அவர் அப்படி செய்தால், அந்த “வேறு ஏதோ ஒன்றுக்கு” அவரை முழுமையாக அறிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் முடியாது.

சுவாரசியமாக, மேலே விவரிக்கப்பட்ட இவைகளை தான் நாம் சத்திய வேதத்தில் பார்க்கிறோம். நாம் அந்த “வேறு ஏதோ ஒன்றை” போன்றவர்கள். நாம் காலத்துக்கும் இடத்துக்கும் உட்பட்டவர்கள். ஆனால் தேவன் “நித்தியமான ஒருவர்.” அவர் தனது “எல்லை கடந்த நிலையை” மாற்றி இயேசு கிறிஸ்துவின் மூலமாக தம்மை வெளிப்படுத்தினார். இதை இன்னும் கண்டுகொள்ள, கீழே பாருங்கள்…

1. தேவன் “நித்தியமான ஒருவர்”. அவர் எப்போதும் இருந்தவர் மற்றும் தொடர்ந்து எப்போதுமே இருப்பவர்.

“பர்வதங்கள் தோன்றுமுன்னும், நீர் பூமியையும் உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர்” (சங்கீதம் 90 :2)

“பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதிதேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாதது” (ஏசாயா 40: 28).

“நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார்” (ஏசாயா 44: 6).

“கர்த்தரோ மெய்யான தெய்வம்; அவர் ஜீவனுள்ள தேவன், நித்திய ராஜா; அவருடைய கோபத்தினால் பூமி அதிரும்; அவருடைய உக்கிரத்தை ஜாதிகள் சகிக்கமாட்டார்கள்” (எரேமியா 10:10).

“அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்” (யோவான் 8: 58).

“இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” (எபிரெயர் 13:8).

“இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்” (வெளி 1:8).

“நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்” (வெளி 22:13).

2. தேவன் பார்க்கமுடியாதவர்.

“தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்” (யோவான் 1:18).

“தேவன் ஆவியாயிருக்கிறார்” (யோவான் 4:24).

“நித்தியமும் அழிவில்லாமையும் அதரிசனமுமுள்ள ராஜனுமாய், தாமொருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக” (I தீமோத்தேயு 1:17).

“அவரே நித்தியானந்தமுள்ள ஏக சக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும், ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக” (I தீமோத்தேயு 6:15-16).

3. தேவன் எங்கும் இருப்பவர், என்றாலும் நம்மை விட வேறுபட்டவர்.

“உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்?” (சங்கீதம் 139:7).

“உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம்பண்ணுகிறதில்லை. எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானதுபோல, மனுஷர் கைகளால் பணிவிடைகொள்ளுகிறதுமில்லை. மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்; கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே” (அப்போஸ்தலர் 17: 24-27).

4. செய்யமுடிகிற எதையும், தேவனால் செய்யமுடியும்.

“கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ?” (ஆதியாகமம் 18: 14).

“நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; தமக்குச் சித்தமான யாவையும் செய்கிறார்” (சங்கீதம் 115:3).

“அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன்” (ஏசாயா 46:10).

“மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்” (மத்தேயு 19:26).

“தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை” (லூக்கா 1:37).

5. தேவன் தனது “எல்லை கடந்த நிலையை” மாற்றமுடியும். அவர் மனித உருவம் எடுப்பதின் மூலம் நமக்கு தம்மை வெளிப்படுத்த முடியும்.

“ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. …அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்” (யோவான்1:1, 1:14).

“ஆதிமுதலாய் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டுப்பார்த்ததுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக் குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம். அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்திலிருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாயிருக்கிற அந்த ஜீவனை நாங்கள் கண்டு, அதைக்குறித்துச் சாட்சிக்கொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம்” (1 யோவான்11:1-2).

“அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர். ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது” (கொலோசெயர்1:15-16).

“இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து…” (எபிரெயர் 1:3).

“கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது; அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்” (பிலிப்பியர்2:5-8).

6. தேவன் தனது “எல்லை கடந்த நிலையை” மாற்றும்போது, அது அவரின் முழுமை அல்ல, என்றாலும் அது அவர் தான்.

“என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்” (யோவான் 14:28).

“நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்” (யோவான் 10:30).

“என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்” (யோவான் 14:9).


இந்த தேவனை அறிய நீங்கள் விரும்புகிறீர்களா? அப்படியானால், எப்படி என்று பாருங்கள்…

 கடவுளுடன் ஒரு உறவுத் தொடங்குவது எப்படி?
 எனக்கு ஒருக் கேள்வி உண்டு...
இந்தக் கட்டுரையைப் பகிர  

TOP